பிரபல 'பிளாபங்க்ட்' நிறுவனம், இந்தியாவில் புதிதாக சவுண்டு பார் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. 'பிளாபங்க்ட் எஸ்.பி.டபுள்யு. எல் - 100' எனும் பெயரில், இந்த பெரிய சப்வூபருடன் கூடிய சவுண்டு பார் மிரட்டும் வகையில் உள்ளது. இந்த சவுண்டு பார், 220 வாட் அவுட்புட் திறன் கொண்டது. 8 அங்குல சப்வூபர், விளிம்பற்ற வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இதில் 'ட்ரூ டால்பி சவுண்டுபார் டெக்னாலஜி' மற்றும் '260 டிகிரி சினிமாட்டிக்' அனுபவம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. மேலும், நான்கு வகையான 'ஈக்குவலைசர் மோடு'கள் உள்ளன. 'கரோகி' வசதியும் இருக்கிறது. 'எச்.டி.எம்.ஐ., ஏ.ஆர்.சி., ஆப்டிக்கல் ஆக்ஸ், லைன் இன், புளூடூத்' என பலவகையான இணைப்பு வசதிகளும் இடம்பெற்றுள்ளன. ரிமோட் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.
விலை: ரூ.11,999