கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

01 ஆக
2011
00:00

கேள்வி: இன்டர்நெட் பிரவுஸ் செய்த தளங்களை மொத்தமாக ஹிஸ்டரி லிஸ்ட்டில் இருந்து நீக்க முடிகிறது. அட்ரஸ் பாரில் உள்ள தளங்களில் ஒன்றிரண்டை நீக்க என்ன செய்திட வேண்டும்?
-கே.சம்பத், மதுரை.
பதில்: நல்ல கேள்வி. எனக்கும் இந்த சந்தேகம் உண்டு. பொதுவாக மொத்தமாக இவற்றை பிரவுசரின் டூல் பார் அல்லது சிகிளீனர் போன்றவற்றைக் கொண்டு அழிக்கிறோம். தனியாக அட்ரஸ் பாரில் உள்ள தள முகவரியினை அழிக்கக் கீழ்க்காணும் வழிகளைக் கையாளவும்.
இன்டர்நெட் எக்ஸ்புளோரரில், அட்ரஸ் பாரில் உள்ள கீழ் நோக்கிய அம்புக் குறியில் கிளிக் செய்து, கீழ் விரி முகவரி பட்டியலை விரிக்கவும். எந்த தளத்திற் கான முகவரியை நீக்க வேண்டுமோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும். தள முகவரியினை அடுத்து சிறிய பெருக்கல் அடையாளம் இருப்பதைக் காணலாம். அதில் கிளிக் செய்தால், நீங்கள் தேர்ந்தெடுத்த தள முகவரி நீக்கப்படும்.
மொஸில்லா பயர்பாக்ஸ் பிரவுசரில், இதே வழியைக் கையாளலாம். ஆனால் சிறிய சிகப்பு பெருக்கல் அடையாளம் கிடைக்காது. அதற்குப் பதிலாக, தள முகவரியினைத் தேர்ந்தெடுத்த பின்னர், அதன் மீது ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் டெலீட் பிரிவில் கிளிக் செய்திட முகவரி நீக்கப்படும்.

கேள்வி: டாஸ்க் மேனேஜர் விண்டோ பெறுவதற்கு, மிகச் சிறந்த ஷார்ட்கட் எது?
-ஆ. திருமேனி, கம்பம்.
பதில்: அது என்ன, மிகச் சிறந்த ஷார்ட்கட்? வேகம், அதுதானே உங்கள் கேள்வியின் அடிப்படை. சரி, டாஸ்க் பாரில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடுங்கள். கண்களைத் திரையில் இருந்து அகற்றாமல், மேல் எழுந்து வரும் மெனு கட்டத்தில், டாஸ்க் மேனேஜர் என்று இருப்பதில் கிளிக் செய்தால், உடனே டாஸ்க் மேனேஜர் கிடைக்கும். இதைக் காட்டிலும் வேகமான வழி இருந்தால், நீங்கள் சொல்லுங்கள்.

கேள்வி: விண்டோஸ் விஸ்டா பயன்படுத்தி வருகிறேன். இதனுடன் தரப்பட்டுள்ள கேம்ஸ் எதனையும் நான் விளையாடுவதில்லை. எனவே இவற்றை நீக்க என்ன செய்திட வேண்டும். இதனை நீக்குவதால், மற்றவர்கள் இதனை விளையாடி நேரத்தை வீணாவ தனைத் தடுக்கலாமே!
-சா. உதயன், கோவை.
பதில்: தேவை இல்லை என்றால் நீக்கிவிடலாம். அது ஏன் மற்றவர்கள் விளையாடுவதையும் தடுக்க வேண்டும். சிஸ்டத்துடன் வரும் ஒரு சில விளையாட்டுக்கள், அதிக நேரம் எடுத்துக் கொள்வதில்லை. இவை கொஞ்சம் மனதை, சிந்தனையை வேறு நோக்கில் திருப்புவதற்காகத் தரப்படு பவை. எனவே நீங்கள் விளையாட விருப்பம் இல்லை என்றால், மற்றவர் களையும் தடை செய்திட வேண்டுமா என யோசிக்கவும். மேலும், சிஸ்டத்துடன் வரும் கேம்ஸ் மட்டும் தான் விளையாட்டுக்களா! தடுக்கி விழுந்தால், இணையத்தில் எக்கச்சக்க கேம்ஸ் இலவசமாகவே கிடைக்கின்றன. சரி, என் உபதேசத்தை நிறுத்திவிட்டு, உங்கள் கேள்விக்கு வருகிறேன்.
சிஸ்டத்துடன் வரும் விளையாட்டு புரோகிராம்களை நீக்க, Start>Control Panel செல்லவும். “Programs and Features” என்பதில் டபுள் கிளிக் செய்திடவும். இடது புறமாக “Turn Windows Features On or Off” என்று ஒரு ஆப்ஷன் தென்படும். இதன் மீது கிளிக் செய்தால் விண்டோ ஒன்று கிடைக்கும். இதில் “Games” என்ற "மரத்தில்' கிளிக் செய்திடவும். இதில் நீங்கள் விரும்பாத கேம்ஸ் முன்னர் உள்ள சிறிய கட்டத்தில் உள்ள டிக் அடையாளத்தினை எடுத்து விடவும். டிக் அடையாளம் எடுக்கப்பட்ட கேம்ஸ் அனைத்தும் இயங்குவதிலிருந்து நீக்கப்படும். பின்னொரு காலத்தில் இவை வேண்டும் என நீங்கள் விரும்பினால், இதே முறையில் உள் நுழைந்து, டிக் அடையாளத்தினை ஏற்படுத்தினால், இந்த கேம்ஸ் மீண்டும் விளையாடக் கிடைக்கும். ஆனால், அவற்றை அப்போது இன்ஸ்டால் செய்திட, உங்களுக்கு விண்டோஸ் விஸ்டா சிஸ்டம் டிஸ்க் தேவைப்படும்.
உதயன், கேம்ஸ் இல்லாமல் கம்ப்யூட்டர் இருக்க வேண்டுமா என்று ஒருமுறைக்கு இருமுறை யோசித்துக் கொள்ளுங்கள்.

கேள்வி: விண்டோஸ் 7 சிஸ்டத்தில் யூசர் அக்கவுண்டிற்கான படத்தினை எப்படி மாற்றி அமைப்பது?
-கா.வெங்கடாசலம், சென்னை.
பதில்: ஸ்டார்ட், கண்ட்ரோல் பேனல் எனச் சென்று, “User Accounts and Family Safety” என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு மீண்டும் “Change Your Account Picture” என்பதைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திட வேண்டும். இங்கு படங்கள் அடங்கிய தொகுப்பு ஒன்று காட்டப் படும். இதில் ஒன்று உங்களுக்குப் பிடித்திருந்தால், அதிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுத்து “Change Picture” என்பதில் கிளிக் செய்திடலாம். பெரும்பாலானவர்கள், இதில் காட்டப்படும் படங்களைத் தவிர்த்து, தங்களுக்குப் பிடித்த நடிகர்கள் அல்லது தங்கள் படத்தை அமைக்க விரும்புவார்கள். அவர்கள் “Browse for more pictures…” என்று இருக்கும் இடத்தில் கிளிக் செய்து, பின்னர் ஹார்ட் ட்ரைவில் பிரவுஸ் செய்து, தாங்கள் விரும்பும் பட பைலில் டபுள் கிளிக் செய்து ஓகே செய்திடலாம்.

கேள்வி: நாங்கள் எங்கள் நிறுவனத்தில் எக்ஸெல் ஒர்க்ஷீட் தயாரிக்கையில், கிராபிக்ஸ் அதிகம் பயன்படுத்துகிறோம். இவற்றை ஒர்க் ஷீட்டிற்கு ஏற்ற வகையில் சுருக்கினாலும், ஒர்க்புக்கின் அளவு குறைவதே இல்லை. மிக அதிகமாகவே இருக்கிறது. மேலும் பிரிண்ட் போன்ற வேலையை மேற்கொள்கையில், மிகவும் தாமதமாகவே செயல்படுகிறது. இதற்கு என்ன காரணம்?
-சா. ஆபிரஹாம் சுந்தர், சென்னை.
பதில்: சிந்திக்க வைத்த கேள்வி. பதில் அறிய பல ஒர்க்ஷீட்களை உருவாக்கி, கிராபிக்ஸ் பதித்துப் பார்க்க வேண்டிய தாயிற்று. எக்ஸெல் ஒரு கிராபிக்ஸ் புரோகிராம் அல்ல. (இது எங்களுக்குத் தெரியாதா! என்று சிரிக்க வேண்டாம்) இதனால், நீங்கள் ஏற்கனவே பதித்த கிராபிக்ஸ் ஆப்ஜெக்டைச் சுருக்கினாலும், அது அப்படியே அதே அளவில், உங்கள் ஒர்க்ஷீட்டில் பதிந்து கிடக்கிறது. இதனால் தான் உங்கள் ஒர்க்புக்கின் அளவு குறையவில்லை. இதனால் பிரிண்ட் மற்றும் காப்பி போன்ற வேலைகளுக்கு, அந்த ஒர்க்ஷீட்டினை இயக்குகையில், எக்ஸெல் புரோகிராமிற்குச் சற்று அதிக நேரம் ஆகிறது. எனவே, கிராபிக்ஸ் ஆப்ஜெக்டைப் பதிக்கு முன்னரே, ஓரளவிற்கு அதனை, கிராபிக்ஸ் புரோகிராம் ஒன்றிலேயே சுருக்கவும். பின்னர் அதனைப் பதிந்தால், அதனால், எக்ஸெல் புரோகி ராமிற்குத் தொல்லை ஏற்படாது. குறிப்பாக, அச்செடுக்கையில், கிராபிக்ஸால் தொல்லை ஏற்பட்டால், அதனை நீக்கி, கிராபிக்ஸ் புரோகிராம் ஒன்றுக்கு மாற்றி, தேவையான அளவிற்குச் சுருக்கிப் பின்னர் பதியவும்.

கேள்வி: டூல்பார் மற்றும் ரிப்பனில் கர்சரைக் கொண்டு சென்று நகரும்போது, தேவையற்ற வகையில் மஞ்சள் நிறக் கட்டத்தில், ஸ்கிரீன் டிப்ஸ்கள் காட்டப்படுகின்றன. பழக்கமாகிவிட்ட பின்னர், இவை எரிச்சலூட்டுகின்றன. இவை காட்டப்படுவதை நிறுத்த என்ன செய்திட வேண்டும்?
-டி. ஜெயசிம்ஹன், திருப்பூர்.
பதில்: வேர்ட் புரோகிராம் விண்டோவில், டூல் பார் பட்டன் மட்டுமின்றி, வேறு இடங்களிலும் இந்த மஞ்சள் நிறக் கட்ட ஸ்கிரீன் டிப்ஸ் காட்டப்படும். வேர்ட் 97 தொடங்கி, இன்றைய வேர்ட் தொகுப்பு வரை இந்த வசதி(?) கிடைக்கிறது. உங்களைப் போல அனுபவசாலிகளுக்கு இது எரிச்சலைத் தரலாம். ஆனால் பல நேரங்களில், இது உதவியாகவே உள்ளது. இதனை நிறுத்த வேண்டும் என்றால், கீழே தரப்பட்டுள்ளபடி (2007க்கு முந்தைய புரோகிராம்களில்) செயல்படவும். Tools மெனுவில் Customize ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், Options டேப்பில் கிளிக் செய்திடவும். இங்கு Show Screen Tips on Toolbars என்ற ஆப்ஷன் தேர்ந்தெடுக்கப்படாமல் உள்ளதா எனப் பார்த்து, தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், அதனை மாற்றவும். அடுத்து Close என்பதில் கிளிக் செய்து மூடவும்.
வேர்ட் 2007ல் கீழே கொடுக்கப் பட்டிருப்பது போல மாற்றங்களை அமைக்கவும்.
1. Office பட்டனில் கிளிக் செய்து, பின்னர் Word Options என்பதைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் Word Options என்ற டயலாக் பாக்ஸைக் காட்டும்.
2. அடுத்து, டயலாக் பாக்ஸின் இடது பக்கம் உள்ள Popular என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.
3. பின்னர், ScreenTip Style என்ற கீழ் விரி பட்டியலை விரிக்கவும். இதில் Don’t Show ScreenTips என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து ஓகே கிளிக் செய்து மூடவும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganesan - ambathur,இந்தியா
19-செப்-201116:45:44 IST Report Abuse
ganesan abode flash edit seiya sirantha pdf file il kidaika kudiya oru website sollvum...... plz........ thank you........
Rate this:
Share this comment
Cancel
Ramesh Narayanan - Bangalore,இந்தியா
07-ஆக-201121:08:07 IST Report Abuse
Ramesh Narayanan Task Manger shortcut key = Ctl +Shift + Esc
Rate this:
Share this comment
Cancel
ஜெயந்திரன் - பெங்களூர்,இந்தியா
05-ஆக-201108:21:51 IST Report Abuse
ஜெயந்திரன் I'm bought one Dell inspiron Laptop N5110 which is having a 64 bit i5 processor & the retailer asked me to download the drivers from the dell website. But there the drivers are available for only 64 bit OS, i bought a win-7 32-bit OS separately ,now some of the drivers are not working with 32 bit OS. Is it possible to use the drivers of any other inspiron models. If so suggest me some model names. Please send your suggestion to my mail-id too. . . And your Information's are very useful. Thanks in advance. One small suggestion :- Please remove the dot at the end of the link which you had provided for "booksbuddies website" so that we can access it fine
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X