ஒருமுறை இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் டி - 20 கிரிக்கெட் போட்டி நடந்தது. டாஸ் வென்ற இந்தியா, பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி முடித்தது.
ஸ்கோர் கார்டில், தவானை விட ரோகித் அதிக ரன்கள் குவித்திருந்தார்.
ரஹானேவை விட அதிக ரன்களையும், தோனியை விட குறைவான ரன்களையும் கோஹ்லி எடுத்திருந்தார்.
மேலும், தவான், தோனியை விட அதிக ரன்களைப் பெற்றிருந்தார்.
ஸ்கோர் கார்டில் ஒவ்வொருவரும் 5 ரன்கள் வித்தியாசத்தில் இருந்தனர். அவற்றுள் குறைவான ரன் என்றால் 20 தான்.
எனில், ஒவ்வொருவரின் ரன்கள் எவ்வளவு?
விடைகள்
கொடுக்கப்பட்ட தகவலின்படி, ரோகித் அதிக ரன்களையும் ரஹானே குறைவான ரன்களையும் எடுத்தவர்கள் என அறியலாம். ஆக, ரஹானேவின் ரன்கள் 20. மேலும், கோஹ்லி - 25; தோனி - 30; தவான் - 35; ரோகித் - 40 ரன்கள் ஆகும்.