உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். பதில் தெரியாதவர்கள் உடனே பதிலைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.
1. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும், பலகையில் தினமும் உலகப் புகழ்பெற்ற தமிழ் இலக்கியமான எதில் இடம்பெறும் ஈரடிச் செய்யுள்களை, அதன் பொருளுடன் எழுதிவைக்க வேண்டும் என்று, தலைமைச் செயலர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்?
அ. ஆத்திசூடி
ஆ. மூதுரை
இ. திருக்குறள்
ஈ. நாலடியார்
2. தமிழகத்தில், உண்ணத்தகுந்த வளாகம் என்ற அடிப்படையில், பாதுகாப்பான, தரமான உணவு வழங்கும் எத்தனை நிறுவனங்களுக்கு மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புத் தர நிர்ணய ஆணையம், சான்றிதழ் வழங்கி அங்கீகரித்துள்ளது?
அ. 351
ஆ. 250
இ. 325
ஈ. 440
3. சமீபத்தில் வெளியான பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவில், 600க்கு 600 மதிப்பெண் பெற்று, இதுவரை யாரும் நிகழ்த்தாத சாதனையைப் புரிந்துள்ள மாணவி நந்தினி, எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்?
அ. சேலம்
ஆ. ஈரோடு
இ. விழுப்புரம்
ஈ. திண்டுக்கல்
4. தமிழக உணவு பாதுகாப்பு தொடர்பான குறை, புகார்களை, உணவு பாதுகாப்புத் துறையினருக்கு உடனுக்குடன் தெரியப்படுத்தும் நோக்கில், மாநில அரசு வடிவமைத்துள்ள பிரத்யேக செயலியின் பெயர்?
அ. FOOD SAFETY
ஆ. TN-FOOD
இ. TN-FOOD SAFETY DEPARTMENT
ஈ. SAFETY FOOD
5. உலகிலேயே முதன்முறையாக, தாயின் கர்ப்பப்பையில் இருக்கும் குழந்தைக்கு, மூளையில் அறுவைச் சிகிச்சை செய்து, எந்த நாட்டின் டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்?
அ. ரஷ்யா
ஆ. அமெரிக்கா
இ. நெதர்லாந்து
ஈ. ஸ்வீடன்
6. ஐரோப்பிய நாடான பிரிட்டனில், 70 ஆண்டுகளுக்குப் பின், 40வது மன்னராக முடிசூட்டிக்கொண்ட மூன்றாம் சார்லஸுக்கு, எத்தனை ஆண்டுகள் பழமை வாய்ந்த, 'செயின்ட் எட்வர்டு' என்ற மகுடம் சூட்டப்பட்டது?
அ. 362
ஆ. 500
இ. 250
ஈ. 150
7. இந்தியர்களின் காலணி அளவு, 1968ஆம் ஆண்டில், எந்த நாடுகளைச் சேர்ந்தவர்களின் கால் பாத அளவுக்கு (தரநிலை) ஏற்ப அமைத்து, தற்போது வரை பின்பற்றப்படுகிறது?
அ. ஆசியா
ஆ. ஐரோப்பா
இ. ஆப்பிரிக்கா
ஈ. வட அமெரிக்கா
விடைகள்: 1. இ, 2. அ, 3. ஈ, 4. இ, 5. ஆ, 6. அ, 7. ஆ,