தேவையான பொருட்கள்:சோளம் - 1 கப்உளுந்து - 0.25 கப்வெந்தயம் - 1
தேக்கரண்டிசின்ன வெங்காயம் - 200 கிராம்பச்சை மிளகாய் - 4உப்பு, எண்ணெய்,
தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:
சோளம், உளுந்து, வெந்தயத்தை சுத்தம் செய்து, தண்ணீரில் நான்கு மணி நேரம் ஊற வைத்து அரைத்து, உப்பு சேர்த்து புளிக்க வைக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை அதில் சேர்த்து, எண்ணெய் தடவிய பணியார கல்லில் உற்றி வேக வைக்கவும். சுவை மிக்க, 'சோளப் பணியாரம்' தயார்.
சத்துமிக்கது. அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடுவர்.
- எஸ்.முத்துமீனா, விருதுநகர்.
தொடர்புக்கு: 63790 11218