என் வயது, 76; இல்லத்தரசியாக இருக்கிறேன். சிறுவர்மலர் நெடுங்கால வாசகி. இதழின் ஒவ்வொரு பக்கத்தையும் ரசித்து வருகிறேன். முன், பின் அட்டைகளில் அழகு தோரணமாக விளங்கும் குழந்தைகளை பார்த்து பார்த்து மகிழலாம்.
பள்ளிக்கால நிகழ்வுகளை நினைவுபடுத்தும் 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதி, அனுபவத்தை பிறருடன் பகிரவும் உதவுகிறது. பார்த்து, ரசித்து படிக்க, படக்கதை துாண்டுகிறது.
அறிவுரைகளை அள்ளித்தருகின்றன சிறுகதைகள்; அறிவை கூர்மையாக்குகிறது பரிசுப் போட்டி. வாய்விட்டு சிரித்து மகிழ, 'மொக்க ஜோக்ஸ்!' பகுதி உதவுகிறது. அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாற்றுச் சிறப்பு, அறிஞர் வாழ்க்கை வரலாறு போன்ற அற்புத தகவல்களை தருகிறது, 'அதிமேதாவி அங்குராசு!' பகுதி.
மாணவ, மாணவியர் கைவண்ணத்தில் ஜொலிக்கிறது, 'உங்கள்பக்கம் பகுதி' ஓவியங்கள்; ஆலோசனை, அறிவுரை வழங்கி அறிவூட்டுகிறது, 'இளஸ்... மனஸ்...' பகுதி.
சத்துடன் ருசியும் வழங்குகிறது, 'மம்மீஸ் ஹெல்த்தி கிச்சன்!' பகுதி. மனதை திறக்க வைக்கிறது வாசகர் கடிதம் பகுதி.
அப்பப்பா... மூர்த்தி சிறிதானலும், கீர்த்தி பெரிசு என, தகவல்களை அள்ளித் தரும் பொக்கிஷம் சிறுவர்மலர் இதழ். எப்போதும் மலர்ந்து மணம் பரப்பி வளர ஆசிர்வதிக்கிறேன்!
- திலகவதி மாரியப்பன், சென்னை.
தொடர்புக்கு: 94447 54071