தென் அமெரிக்க நாடான பிரேசிலைச் சேர்ந்த, பிரபலமான மாடல் அழகி, வனீஷா மொஹாரா, 29. இவர், தன் வியர்வை கலந்த வாசனைத் திரவியத்தை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். 'ப்ரெஷ் காட்டெஷ்' என, பெயரிடப்பட்டுள்ள இந்த வாசனை திரவியத்துக்கு, தென் அமெரிக்க நாடுகளில் கடும் கிராக்கி நிலவுகிறது.
'என் வியர்வையில் ஒரு விதமான மயக்கும் வாசனை இருப்பதாக, என் காதலர் தெரிவித்தார். நானும் அதை உணர்ந்துள்ளேன். என் இயற்கையான வாசனை, ஆண்களை கவர்ந்திழுக்கிறது. எனவே, என் வியர்வை துளிகளை வாசனை திரவியத்துக்கு அடித்தளமாக பயன்படுத்துகிறேன்...' என்கிறார், வனீஷா.
இந்த வாசனை திரவியம் உள்ள ஒவ்வொரு பாட்டிலிலும் வனீஷாவின், 8 மி.லி., வியர்வை துளிகள் அடங்கியுள்ளனவாம்.
— ஜோல்னாபையன்