* உளுந்து போண்டா செய்யும்போது, வேக வைத்த உருளைக் கிழங்கை தோல் நீக்கி அரைத்து செய்தால், போண்டா மெத்தென்று மிருதுவாக இருக்கும்
* சாம்பார், ரசம் போன்றவைகளில் தண்ணீருக்கு பதிலாக சாதம் வடித்த கஞ்சியை சேர்க்கலாம்
* ரவையை மாவாக திரித்து, அதில் வெல்லப்பாகு, தேங்காய் பூ போட்டு பிசைந்து பிடித்து வைத்தால், வித்தியாசமான ருசியுள்ள கொழுக்கட்டை தயார்
* இட்லி மாவு புளித்து விட்டதா, அதில் சிறிது நீர் விட்டு கலக்கி வைக்கவும். சிறிது நேரத்தில் மாவின் மீது தெளிவாக இருக்கும் தண்ணீரை வடித்துவிட்டால், புளிப்பு போய் விடும்.
* ஒரு கப் கெட்டி அவல், இரண்டு கப் பச்சரிசி, சிறிது உளுத்தம் பருப்பு ஆகியவற்றை ஊற வைத்து அரைத்து தோசை ஊற்றினால், சுவையாக இருக்கும்