'என் புகாரை 'கண்ணம்மா' சொன்ன மறுநாள் காலை 11:00 மணிக்கு, 'முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் உங்க மூத்த பெண்ணுக்குரிய முதிர்வு தொகைக்கான ஒப்புதல் கையெழுத்தாயிருச்சு; சீக்கிரமே உங்க வங்கி கணக்குல வரவாயிடும்'னு எங்க ஆட்சியர் அலுவலகத்துல இருந்து நல்ல தகவல் வந்தது!
'சமூகநல அலுவலகம் மூலமா மே 11ம் தேதி இளைய மகளுக்கான பத்திர நகலும் கிடைச்சிருச்சு; கூடவே, 'எதிர்வரும் நவம்பர் மாதம் இளைய மகளுக்கான முதிர்வு தொகை வரவாயிடும்'னு உத்தரவாதமும் கிடைச்சது! 12ம் தேதி மூத்த மகளுக்கான முதிர்வு தொகையான ரூ. 43 ஆயிரத்து 680 வங்கி கணக்குல வரவாயிருச்சு!
'இந்த இரண்டு கோரிக்கைகளோட ஓராண்டு முழுக்க அலைஞ்சிருக்கேன்; ஆனாலும், எனக்கு விடியலை! 'தினமலர் - கண்ணம்மா' மூலமா ஆதங்கத்தை கொட்டின மறுநாளே நல்லது நடந்திருச்சு! மக்கள் நலன்ல அக்கறை கொண்ட 'தினமலர்' நாளிதழுக்கும், ஈராண்டு ஆட்சி கடந்திருக்கும் தமிழக முதல்வருக்கும் மனமார்ந்த நன்றி!'
- 7.5.2023 'ரவுத்திர வீணை' பகுதியில், முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட முதிர்வு தொகை இழுத்தடிப்பு பற்றி கொதித்துப் பேசிய ஹேமாவதி, பெரியகுளம், தேனி.