* குழந்தைகள் படிப்புக்காகவும், திருமண செலவுக்காகவும் சேர்த்து வைச்சிருக்கிற பணமெல்லாம், குடிகார குடும்பத் தலைவனால 'டாஸ்மாக்' வழியா அரசு கஜானாவுக்கு போகுறப்போ, 'மாணவ மாணவியர் நலனுக்காக கூட்டுறவு வங்கிகள் மூலமா 'சிறுசேமிப்பு திட்டம்' துவக்கப்படும்'னு மனசாட்சி இல்லாம அரசு சொல்லலாமா?
* 'கர்நாடக தேர்தலின் பிந்தைய கருத்து கணிப்புகள் எப்போதும் தவறாகவே வரும்'னு அழுத்தமா நம்பின தமிழக பா.ஜ., தலைவர், தேர்தல் முடிவுக்கு அப்புறம், '38 ஆண்டுகளாக கர்நாடகாவில் ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்ததில்லை'ன்னு உருட்டினப்போ, அவர்கிட்டே நான் கேட்க நினைச்ச ஒரே கேள்வி... 'நீங்களுமா அண்ணாமலை?'
* 'அரசியல் என்பது சாக்கடையா'ன்னு என் பையன் கேட்டான்; அந்தசமயத்துல, 'கள்ளச்சாராய வியாபாரி கைது செய்யப்பட்டிருப்பதும், கடமையில் அலட்சியமாய் இருந்த காவல் துறையினரை முதல்வர் தண்டித்திருப்பதும் நல்ல நடவடிக்கை'ன்னு இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசனோட கருத்தை வாசிச்சிட்டு இருந்தேனா... அப்படியே சிலிர்த்துட்டேன்!
* 'அமைச்சராகவும் மாவட்ட செயலராகவும் இருந்து கொண்டு, மக்களவை தேர்தலில் போட்டியிட மகனுக்கு வாய்ப்பு கேட்டு வருபவர்கள் கடுமையாக உழைக்கவும் தயாராக இருக்க வேண்டும்'னு உடன்பிறப்புகள்கிட்டே முதல்வர் காட்டமா பேசினப்போ, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன் வளர்ச்சிக்காக தந்த அசுர உழைப்பு புரிஞ்சது!
அய்யா... மனசு கனக்குதுய்யா!