இஸ்ரோவின் கீழ் செயல்படும் திரவ உந்து அமைப்புகள் மையத்தில் (எல்.பி.எஸ்.சி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிடம் : டெக்னீசியன் பிரிவில் மெக்கானிக் ஆட்டோ எலக்ட்ரிக்கல் 1, மெஷினிஸ்ட் 2, பிட்டர் 5, டீசல் மெக்கானிக் 1, வெல்டர் 1, எலக்ட்ரோபிளேடர் 1, ஏ.சி., மெக்கானிக் 1, டர்னர் 2, பிளம்பர் 2, டிராப்ட்ஸ்மேன் பிரிவில் மெக்கானிக்கல் 2, கனரக வாகன டிரைவர் 5 இலகுரக வாகன டிரைவர் 3 என மொத்தம் 26 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : டிரைவர் பணிக்கு பத்தாம் வகுப்பு, மற்ற பணிக்கு தொடர்புடைய பிரிவில் ஐ.டி.ஐ., முடித்திருக்க வேண்டும்.
வயது : 30.5.2023 அடிப்படையில் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம் ரூ.100. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை
கடைசிநாள் : 31.5.2023
விபரங்களுக்கு : lpsc.gov.in