* 'அரசு மருத்துவர்' பணியிடத்துக்கான தேர்வுல, '10ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டம் அடிப்படையில் கேட்கப்பட்ட தமிழ் மொழி தகுதித் தேர்வோட தேர்ச்சி மதிப்பெண்ணை, 50க்கு 20ன்னு இல்லாம 15ன்னு குறைக்கணும்'னு மருத்துவர்கள் கேட்குறதுதான், 'தமிழகத்தில் தமிழ் வளர்கிறது'ங்கிறதுக்கு சாட்சி; சரிதானே?
* அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் சொல்லணும்; 'நீட் தேர்வு எழுதினதால ஏற்பட்ட மன உளைச்சலையும், தற்கொலை எண்ணத்தையும் தவிர்க்க மாணவர்களுக்கு 'மனநல ஆலோசனை' வழங்குற நீங்க, 'டாஸ்மாக்'கால நிம்மதி இழந்து தவிக்கிற குடும்பத் தலைவிகளுக்கு 'மனநல ஆலோசனை மையம்' எப்போ துவக்குவீங்க?'
* தமிழ்நாடு பாடநுால் கழக தலைவர் லியோனியோட கார் கண்ணாடிகள்ல அடர்த்தியான கறுப்பு ஸ்டிக்கர், பம்பர், முறையற்ற பதிவு எண் பலகை இருந்ததால அபராதமாம்! அடடா... நேர்மை பிதுக்குற காவல் துறையைப் பார்த்து பெருமைப்படுறதா, 'திராவிட மாடல்' ஆட்சியில 'சட்டம் மக்களுக்குத்தான்'னு நம்பின லியோனிக்காக பரிதாபப்படுறதான்னு குழப்பமா இருக்கே!
* கடற்கரையை சுத்தம் பண்ற நிகழ்வை அமைச்சர் துவக்கி வைக்கிறார் சரி; எப்பவுமே குப்பை அள்ளுறவங்க பள்ளி/ கல்லுாரி மாணவர்களாத்தான் இருக்கணுமா; அரசு ஊழியர்களையும், அமைச்சர்கள் குடும்பத்தினரையும் பங்கேற்க வைச்சு ஒருநாள் சுத்தப்படுத்தக் கூடாதா; ஏன்... அவங்க யாரும் கடற்கரையை பயன்படுத்துறதே கிடை யாதா என்ன?
ஏனுங்க... என் கேள்வி சரிதானே?