அதிமேதாவி அங்குராசு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஆக
2011
00:00

வந்தே மாதரம்! என் தாய் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்!

கல்லுக்குள் இருந்தது!
ஒரு கலைஞன் பல மாதங்கள் உழைத்து ஓர் உயிரோட்டமுள்ள அழகிய சிலையை வடித்தெடுத்தான். அதை பார்த்து அனைவரும் வியந்து அவனை பாராட்டினர்.
அந்நாட்டு மன்னன் கலைஞனின் வீடு தேடி வந்து அவன் திறமையை பாராட்டி, ""இந்த அழகான சிலையை எப்படி செய்தாய்?'' என்று கேட்டார்.
கலைஞன் மன்னரிடம் அமைதியாக சொன்னான்... ""நான் ஒன்றும் பெரியதாக செய்து விடவில்லை. இந்த அழகிய சிலை ஒரு கல்லுக்குள் ஒளிந்து கொண்டிருந்தது. தேவையில்லாத சில பாறை பகுதிகள் அதை மூடி மறைத்து கொண்டிருந்தன. நான் அவற்றை நீக்கி விட்டேன் அவ்வளவுதான்!'' என்றான்.

8,9,10,11,12 அடுத்து...? 12பி அல்லது 14!
என்ன 1,2,3 மாறுகிறதேன்னு பார்க்கிறீர்களா? வெளிநாட்டினரை பொறுத்தவரை 13 ஒதுக்கப்பட வேண்டிய நம்பர். அத்துடன் வெள்ளிக்கிழமையும் சேர்ந்தால் அலறோ அலறு என்று அலறுகிறார்கள். இதற்கு என்னென்னவோ காரணங்கள் கூறுகின்றனர். நம்பர் 13 எப்படியெல்லாம் வெளிநாட்டினரை பாடுபடுத்துகிறது என்று பாருங்கள்.
ஒரு வெள்ளிக்கிழமை 13ம் தேதிதான் இயேசு பிரான் சிலுவையில் அறையப்பட்டார் என்கிறது வரலாறு. இதேபோல் இன்னொரு 13ம் தேதியும் வெள்ளிக்கிழமையும் சேர்ந்த தினத்தில்தான் ஆதாமும், ஏவாளும் சபிக்கப்பட்ட பழத்தை சாப்பிட்டார்களாம்.
ஸ்காட்லாந்து விமான நிலையத்தில் 13 என்ற எண்ணை பயன்படுத்துவதே இல்லை. மாறாக 12க்குப் பறகு 12பி என்றுதான் பயன்படுத்துகின்றனர். லுப்தான்ஸா விமானத்தில் 13 என்ற இருக்கை கிடையாது. 12க்கு பிறகு 14தான். பார்முலா ஒன் கார் ரேஸில் கலந்து கொள்ளும் கார்களுக்கு 13ம் எண் வழங்கப்படுவதேயில்லை. செயல்படாமல் திரும்பியதற்கு, 13 என்ற எண்ணை சேர்த்ததுதான் காரணம் என்கின்றனர் அமெரிக்கர்கள்.
தொடர்ந்து 12 ஆண்டுகள் உலகின் முதல் பணக்காரராக கோலோச்சிய பில்கேட்ஸ், 13வது வருடம் அந்த அந்தஸ்தை இழந்து விட்டதற்கு 13 என்ற எண்ணே காரணமாம்.
அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் 13ம் தேதி அன்று பிறந்தாலோ அல்லது இறந்தாலோ அந்த எண்ணை பதிவேட்டில் பயன்படுத்தாமல் 12ஏ என்றே குறிப்பிடுகின்றனர். இப்படி 13ம் எண்ணை பற்றி வெளிநாடுகளில் நிறைய தகவல்கள் உண்டு. என்னதான் உலகம் வளர்ச்சியடைந்தாலும், மக்களின் மூட நம்பிக்கைக்கு மட்டும் அளவே இல்லை!

சாதா சோதனையல்ல!
உலகில் மிகப் பிரம்மாண்டமான போர்கள் என்றால் முதல், இரண்டாம் போர்களை நாம் சொல்லலாம். மூன்றாம் உலகப் போர் என்று ஒன்று நடக்குமா, நடக்காதா? என்பது பெருங்கேள்வி. காரணம், அது நடந்தால் உலகம் இருக்குமா? இருக்காதா? என்பதுதான்.
ஆனால், அப்படி நினைக்க வைப்பது - சர்வ வல்லமை படைத்த சின்னஞ்சிறிய அணு ஆயுதம்! அணு என்பது சிறியது. அது ஏற்படுத்தும் அபாயமோ ஆண்டாண்டு களுக்கு தொடரும்!
உலகில் இதுவரை 2083 முறை அணு குண்டு சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக அமெரிக்க தான் 1054 முறை சோதனை நடத்தியது. முதல் அணுகுண்டு சோதனை 1945ல் அமெரிக்காவின் மெக்சிகோ பாலைவனத்தில் நடத்தப்பட்டது.

அம்மா! ப்ளீஸ் செஞ்சுதாங்கம்மா!
இது "பீர்க்கங்காய் கூட்டு' செய்முறை நேரம்.
தேவையானவை: பீர்க்கங்காய் -2, பாசிப்பருப்பு - ஒரு கப், தேங்காய் துருவல்-4 டீஸ்பூன், சீரகம்-ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பீர்க்கங்காயை தோல் சீவி பொடியாக நறுக்கவும். பாசிப்பருப்பை குழைவாக வேக விடவும். பீர்க்கங்காயை வேக விட்டு, வெந்த பருப்பை அதில் சேர்க்கவும். தேங்காய் துருவல், சீரகம், பச்சை மிளகாய் மூன்றையும் அரைத்து உப்பு கலந்து சேர்க்கவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து கொட்டி, கொதிக்க விட்டு இறக்கவும். இது தோசை, இட்லிக்கு மிக நன்றாக இருக்கும்.

தூங்கும், நகரும்!
மீன்கள் தூங்கும்போது மெதுவாக போய் கொண்டிருக்கும். நம்மால் அதன் கண் இமைகள் மூடியுள்ளதை கண்டுபிடிக்க முடியாது. மாறாக அது வீட்டு தொட்டிக்குள் மெதுவாக சுற்றி கொண்டிருக்கும்போது தூக்கத்தில் இருக்கிறது என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.

சேர்ந்தது ஒன்று தங்கம் விற்றது மற்றொன்று
சீனாவுடன் ஹாங்காங் 1997 இல் மீண்டும் இணைந்தது. இதை ஒட்டி கனடா நாட்டு தங்க தொழிற்சாலை ஒரு தங்க நாணயத்தை வெளியிட்டது. ஹாங்காங்கில் 130 அமெரிக்க டாலர். ஆனால், சர்வதேச அளவில் இதன் விலை 533 டாலர். 69000 தங்க நாணயங்கள் சர்வதேச அளவிலும், 28000 தங்க நாணயங்கள் ஹாங்காங்கிலும் விற்பனை ஆயின. இந்த நினைவு தங்க நாணயத்தால் கனடாவுக்கு நல்ல லாபம் கிடைத்தது. ஒரு நாட்டுடன் அதன் பழைய பகுதி இணைவதை ஒட்டி வேறு ஒரு நாடு நினைவு நாணயம் வெளியிட்டு பெரிய அளவில் லாபம் பார்த்தது இதுவே முதல் முறை.

ஒரே புத்தகத்தில் உலகம் புகழ்!
புக்கர் பரிசு பெற்ற முதல் இந்திய எழுத்தாளராக அருந்ததிராய் விளங்குகிறார். இதற்கு முன்பே இந்த கருவை கொண்ட மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த எழுத்தாளர்கள் எழுதிய நான்கு புத்தங்கள் பிரிட்டனின் உயர்ந்த இலக்கிய விருதான புக்கர் விருதை பெற்றுள்ளன. அவை சல்மான் ருஷ்டியின் "மிட்நைட்ஸ் சில்ட்ரன்' (1981), ரூத்பரவர் ஜாப்லாவின் - "ஹீட் அன்ட் டஸ்ட்' (1973), வி.எஸ்.நைபாலின் இன் எ ப்ரீ ஸ்டேட்' (1971). ஆனால், அருந்ததிராய் போல, தான் எழுதிய ஒரே புத்தகத்தில் மூலம் உலகத்தையும் இந்தியாவை திரும்பி பார்க்கச் செய்ய முடியவில்லை.
அன்புடன், அங்குராசு.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X