பட்டாம்பூச்சிகளின் கதை (10)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஆக
2011
00:00

"ஜெபராணி... நீங்க எழுதும் ஒவ்வொரு கதைகளும், மனதை ஒரு உலுக்கு உலுக்குகின்றன. அப்படியே, எங்கள் குடும்பத்தில் நடக்கும் கொடுமையை, உங்களுடன் பகிர்ந்து கொள்ள துடிக்கிறேன். எங்களை போல, எத்தனை குடும்பங்கள் கண்ணீரில் இருக்கின்றன என்று தெரியவில்லை...' என்று ஆரம்பித்து, இப்படி எழுதியிருந்தார் நெல்லை வாசகி ஒருவர்...

எங்கள் அண்ணனுக்கு, இரண்டு மகன்கள். மூத்தவன் மிகவும் சாது; நன்கு படித்து, வெளிநாட்டில் கை நிறைய சம்பாதிக்கிறான். எங்கள் அண்ணியின் அண்ணன் மகளும், நன்கு படித்தவள்; அழகானவளும் கூட. இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்வதாக சிறு வயதிலிருந்தே இரு வீட்டாரும் பேசி வைத்திருந்தனர்.
ஆனால், வளர்ந்து, வாலிப வயதை அடைந்ததும், "எனக்கு இப்போது திருமணம் வேண்டாம்...' என, சொல்லியிருக்கிறாள் அப்பெண். அவள், சிறு வயதில் இருந்தே மிகவும் பிடிவாதக்காரி. கையில் கிடைக்கும் பொருட்களை எடுத்து வீசுவது, பிடிவாதம் பிடிப்பது, கையில் பிளேடால் அறுத்துக் கொள்வது என, அட்டகாசம் செய்வாள். அவள் தாய் மிகவும் பிடிவாதக்காரி. தன்னைப் போலவே, தன் மகளையும் பிடிவாதக்காரியாக வளர்த்துள்ளார்.
சிறுவயதில் குழந்தைகள் பிடிவாதம் பிடித்தால், அதை கண்டிப்பதில்லை; மாறாக, "என் மக, ரொம்ப பிடிவாதக்காரி... அவ அப்படித்தான்!' என்று சொல்லி, தூபமிட்டே வளர்த்தால், அந்தப் பெண் எப்படி திருந்துவாள்?
இதனால், எங்கள் அண்ணி, "இந்த பெண் வேண்டாம்!' என்று எண்ணி, வேறு இடத்தில் பெண் பார்க்க ஆரம்பித்தார். உடனே, என் அண்ணியிடம், "எங்கள் மகளை மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்வோம்...' என, பெண் வீட்டார் கூறியுள்ளனர்.
அப்பெண்ணை, இரு குடும்பத்தினரும் சேர்ந்து, மனோதத்துவ டாக்டரிடம் அழைத்துச் சென்றனர். அவளை பரிசோதித்த டாக்டர், "இவள் மிகவும் பிடிவாதக்காரி... இது, இவளின் பிறவிக்குணம். இவள், முயலுக்கு மூன்று கால் என்று சொன்னால், "ஆமாம்...' என்றுதான் சொல்ல வேண்டும்; இல்லையெனில், பிரச்னைதான் வரும்...' என்று கூறியுள்ளார். இதனால், பயந்து போன அண்ணி, மிகவும் தயங்கினார்.
ஆனால், அப்பெண்ணின் பெற்றோரோ, "எங்கள் மகளை மந்திரவாதியிடம் அழைத்துச் சென்று, சேவலை அறுத்து விட்டிருக்கோம். இனி, இப்படி நடக்க மாட்டாள்...' என்று சொல்லி, சம்மதிக்க வைத்தனர்.
திருமணம் மிகவும் கோலாகலமாக நடந்தது. வரவேற்புக்கு முந்தைய நாள், தங்கை முறை கொண்ட பெண்களிடம் பேசியிருக்கிறான் மணமகன்; அது, மணமகளுக்கு பிடிக்கவில்லை. "சாகப் போகிறேன்...' என்று சொல்லி, மாடியிலிருந்து, கீழே குதிக்கப் போயிருக்கிறாள். என் அண்ணனும், அண்ணியும் படாதபாடுபட்டு, அவளை தடுத்திருக்கின்றனர்.
மாமனார், மாமியாரை, "போடா, வாடா...' என திட்டிவிட்டு, தன் முடியை பிடித்து இழுத்துக் கொண்டாள். பிறகு மாமனார், மாமியாரிடம் மன்னிப்பு கேட்டாள். இப்படி, ஒரு நிமிடத்துக்கு ஒரு மாதிரி நடத்து கொள்வாள். ஒரு வழியாக அவளைச் சமாளித்து, வரவேற்பில் நிற்க வைத்தோம்.
அன்று மேடையிலேயே, முகத்தை திருப்பியும், தலையை தொங்க போட்டும் உட்கார்ந்திருந்தாள். மணமகளை, "சரியாக போஸ் கொடுங்கள்...' என்று சொன்ன கேமரா மேனை, திட்டித் தீர்த்து, ஆர்பாட்டம் செய்தாள். சகஜமாக நடந்து கொள்ள சொன்ன மணமகனுடன் தகராறு செய்து, "நான் இப்படித்தான் நடந்துக்குவேன்...' என்று சொல்லி, மேடையிலேயே கலாட்டா செய்தாள்.
அவமானம் அடைந்த மணமகன், மேடையைவிட்டு கீழே இறங்கி, மணப்பெண்ணை ஒரு அறை அறைந்து விட்டான். அவ்வளவுதான்... உடனே கோபித்துக் கொண்டு, மண்டபமே அதிர கலாட்டா செய்து, காரில் புறப்பட்டு, தன் வீட்டிற்கே சென்று விட்டாள். பெரியவர்கள் எவ்வளவோ சமாதானம் செய்தும், அவள், தன் வீட்டை விட்டு, மாப்பிள்ளை வீட்டுக்கு வரவேயில்லை.
இப்படியே, ஒரு மாதம் ஓடியது. மறுமாதம், மணமக்கள் இருவரும், வெளிநாடு செல்லும் நேரம் வந்தது. அப்போது, மணமகளை கெஞ்சி, மாப்பிள்ளை வீட்டுக்கு அழைத்து வந்தனர். "வீட்டிற்குள் நுழைய மாட்டேன்...' என்று சொல்லி, ரகளை செய்தாள். பெண்ணின் தகப்பனார் அவள் காலில் விழுந்து கெஞ்சினார். அப்போதும் அவள் அடங்காமல், உறவினர் வீட்டுக்குச் சென்று தங்கி விட்டாள்.
மீண்டும், இருவீட்டாரும் மனநல மருத்துவரிடம் சென்றனர்; டாக்டரும், கவுன்சிலிங் கொடுத்தார். "சரி... சரி...' என, தலையாட்டி, நல்லவள் போல் வந்தாள். இத்தனைக்கும் மகள் செய்வதுதான் சரி என, தன் மகளுக்கு பரிந்து பேசினார் தாயார். அவள் போக்குக்கு மாப்பிள்ளையும், அவரது வீட்டினரும், "அட்ஜஸ்ட்' செய்து போக வேண்டுமாம். இது எப்படி இருக்கு!
இப்படிப்பட்ட பெண்ணை அழைத்துக் கொண்டு, மாப்பிள்ளை வெளிநாடு செல்ல வேண்டும். என்ன செய்வது என்று தெரியாமல், இருவீட்டு மக்களும் கலங்கி நிற்கிறோம்.
"வாய் திறக்காத, மிகவும் ஒழுக்கமான எங்கள் மகனுக்கு, இப்படி ஒரு நிலமை...' என்று எழுதியிருக்கிறார் வாசகி.
வாசகியரே...
ஆரம்பத்திலேயே அப்பெண் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. "அவள் வேறு யாரையாவது காதலிக்கிறாளா... என்ன காரணத்திற்காக திருமணம் வேண்டாம் என்று சொல்கிறாள்?' என்பதை எல்லாம் யோசிக்காமல், உறவு போய் விடும், சொத்து போய் விடும் என்று நினைத்து, வற்புறுத்தி ஒருவரை சம்மதிக்க வைத்ததே தவறு.
இந்த காலத்துப் பெண்கள் மிகவும் சுதந்திரமானவர்கள். ஒரே பெண், ஒரே மகன் என்பதால், பெற்றோர் மிகவும் செல்லம் கொடுத்து வளர்க்கின்றனரே தவிர, கண்டித்து வளர்ப்பதே இல்லை. பெண்களை நன்கு படிக்க வைக்கிறோம். ஆண்களுக்கு சமமாக, ஏன் அதற்கு மேலேயே சம்பாதிப்பதால், அவர்கள் அடங்கி போவது, விட்டுக் கொடுப்பது போன்ற குணங்கள் இல்லாமலே வளர்கின்றனர். இப்படிப்பட்ட பெண்களிடம், அவர்கள் விருப்பத்துக்கு எதிராக பெற்றோர் செயல்படவே வேண்டாம்.
ஆரம்பத்திலேயே, அடங்காப்பிடாரி என தெரிந்த பிறகும், சொந்தம், பந்தம், சொத்து போய் விடும் என நினைத்து, திருமணம் செய்தால், உங்கள் மகன்களின் எதிர்காலமே போய் விடும்; ஜாக்கிரதை!
— தொடரும்.

ஜெபராணி ஐசக்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nandhakmar - Coimbadore,இந்தியா
24-அக்-201106:52:39 IST Report Abuse
Nandhakmar Jeba...kadhaikal nice
Rate this:
Cancel
Gopal - chennai,இந்தியா
09-ஆக-201120:08:45 IST Report Abuse
Gopal அந்த பையன் அப்பெண்ணை விட்டு வேறொரு நல்ல பெண்ணை திருமணம் செய்ய இதுவே நல்ல தருணம் . @ சதிஸ் குமார் நீங்கள் உங்கள் மனைவியை அவர்கள் வழியில் சென்று திருத்தவும் .... நீங்களும் அவர்கள் செய்வது போல் செயதால் நல்லது . இல்லையேல் நல்ல மனநல மருத்துவரிடம் அழைத்து செல்லவும் .
Rate this:
Cancel
சௌந்தர் - Kerala,இந்தியா
08-ஆக-201118:44:30 IST Report Abuse
சௌந்தர் தமிழகத்தின் குறிப்பாக சுரண்டை,தென்காசி, திருநெல்வேலி, தருமபுரி, திருப்பத்தூர் etc உள்ள மக்களின் நடை முறை வாழ்கை இயல் இன்னும் எவுளவோ முன்னேற வேண்டும். என் அனுபவத்தில் கண்ட சம்பவங்கள் பெண்களை பொறுத்தவரை கணவனிடம் இருந்து அடிவாங்கவில்லை எனில் அவளுக்கு தூக்கம் வராது. அதுபோல கணவன்மார்களும் மனைவிய கைநீட்டி அடிக்கவில்லை எனில் அவனுக்கு தூக்கம் வராது. அப்படி ஒரு கலாச்சாரத்தில் வளர்ந்தவர்கள். எல்லோரும் கூட்டு குடும்பத்த வெருகிரவர்கள் nucliar குடும்ப வாழ்க்கை விரும்பிகள். அதனால் தான் பாடியவர்கள் எல்லாம் மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் புர்ஷன் அமைவதை பத்தி யாரும் பாட்டு பாடவில்லை. எல்லாம் வாழ்வின் அக்கபோர்கள் தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X