அந்துமணி பதில்கள் | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
அந்துமணி பதில்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 ஆக
2011
00:00

** சி.கனகராஜ், பெண்ணாடம்: "எல்லாம் என் தலைவிதி. இதை, யாராலயும் மாத்த முடியாது...' என்று சிலர் சொல்கின்றனரே...
திட்டமிடாமல், லாப - நஷ்டங்களை அனுமானிக்காமல், சரியானபடி உழைக்காமல் திரியும் சோம்பேறிகளின் முடக்குவாதத்தனமான, "ஸ்டேட்மென்ட்'கள் இவை!
***

*கே.சந்திரன், திருமங்கலம்: "டேட்டிங்' கொடுப்பது என்றால் என்ன?
நேரம் ஒதுக்குவது தான்! இந்த வார்த்தை ஆணுக்கும், பெண்ணுக்கும் தான் பொருந்தும். "நாளை மறுநாள் டேட்டிங்!' என்றால், "என் ஆளை நாளை மறுநாள் சந்திக்கிறேன்... எனக்காக நேரம் ஒதுக்கித் தந்திருக்கிறாள் / கிறார்...' என்று பொருள்.
***

*எஸ்.சிவசுப்பிரமணியன், பெரம்பூர்: புதுச்சேரி கடற்கரை, மெரினா கடற்கரை - எங்கு, "கலர்' அதிகம்?
மெரினா - உழைப்பாளர் சிலை அருகே, "மிடில் கிளாஸ்' கலர்.
* மெரினா - காந்தி சிலை அருகே, "அப்பர் கிளாஸ் + அப்பர் மிடில் கிளாஸ்' கலர்.
* பெசன்ட் நகர் - எலியட்ஸ் பீச் - சூப்பர் கிளாஸ் கலர்.
* புதுச்சேரி - "ஒயிட் கலர்' (வெள்ளைக்காரர்) அரை டவுசர்களில்.
"த பெஸ்ட்' என்பது - பெசன்ட் நகர் எலியட்ஸ் பீச் தான்!
(உங்களுக்காக லென்ஸ் மாமாவிடம் கெஞ்சிக் கேட்டு வாங்கிய பதில் இது!)
***

**வி.மாணிக்கம், நீலகிரி: தவறு செய்யும் அமைச்சர்களை, பொது மக்கள் ஒரு கூண்டு செய்து, அதில் அமைச்சர்களை ஏற்றி விசாரித்தால் என்ன? இதன் மூலம் தேர்தல் சமயத்தில் சரமாரியாக வீசப்படும் வாக்குறுதிகளையாவது மட்டுப்படுத் தலாம் அல்லவா?
கேட்க நன்றாகத்தான் இருக்கிறது; பூனைக்கு மணி கட்டுவது யார்?
***

*வே.விநாயகம், பல்லடம்: "பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்!' என்கின்றனரே... எப்படி அப்பகுதியை ஆக்கிரமித்தனர்?
நம்மிடையே நடந்த போரின் போது! அப்போது ஆட்சியில் இருந்தவர்களின் வழ வழா, "பாலிசி' நம் ராணுவத்தினரின் கையை கட்டிப் போட்டு விட்டது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போலவே, சீனாவிடமும் காஷ்மீரின் ஒரு பகுதியை இழந்துள்ளோம். சீன ஆக்கிரமிப்பில் காஷ்மீரும் உண்டு!
***

**ஜெ.பாலன், மதுரை: சட்டப்பூர்வமாக லஞ்சத்தை நிர்ணயித்து நியாயப்படுத்தி, சமுதாயத்தை காப்பாற்ற முடியாதா?
நல்ல யோசனையாகத்தான் இருக்கிறது. மனித இனம் இருக்கும் எல்லா இடத்திலும் லஞ்ச பேய் தலைவிரித்து ஆடத்தான் செய்கிறது. சட்டப்பூர்வமாக்கி, இந்த, இந்த வேலைக்கு இவ்வளவு சதவீதம், "அன்பளிப்பு' என நாம கரணம் சூட்டி விட்டால், அனாவசிய தாமதம், "மென்டல் டென்ஷன்' கவலை ஒழியும்!
அரசு சக்கரம் வேகமாக சுழலாமல் தடுத்து நிறுத்தும், "ரெட் டேப்பிசம்' ஒழியும். (உதைக்க வராதீர்கள் இந்த பதிலுக்காக...)
***

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X