இதப்படிங்க முதல்ல... | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
இதப்படிங்க முதல்ல...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 ஆக
2011
00:00

பாபா சத்யசாயி படத்தில், கிரிக்கெட் வீரர்கள்!
புட்டபர்த்தி சாய்பாபாவின் வாழ்க்கையை, பாபா சத்யசாயி என்ற பெயரில், படமாக எடுக்கிறார் கோடி ராமகிருஷ்ணா. இப்படத்தை, இந்திய அளவில் வெளியிட திட்டமிட்டுள்ள அவர், முக்கிய வேடங்களில் நடிக்க, கிரிக்கெட் வீரர்கள் கவாஸ்கர், டெண்டுல்கர் ஆகியோருக்கு அழைப்பு விடுத்தார். பாபாவின் தீவிர பக்தர்களான அவர்கள், உடனே சம்மதம் தெரிவித்துஉள்ளனர்.
சினிமா பொன்னையா.

திருநங்கைக்கு அனுஷ்கா சிபாரிசு!
வானம் படத்தில் அனுஷ்காவின் தோழியாக நடித்தவர் நிக்கி என்ற திருநங்கை. இவர், அனுஷ்காவின் பர்சனல் மேக்-அப் வுமன். வானம் பட இயக்குனர், தோழி வேடத்துக்கு ஒரு திருநங்கையை தேடிய தகவல் அறிந்த அனுஷ்கா, தானே முன்வந்து இந்த திருநங்கை நிக்கிக்கு சிபாரிசு செய்துள்ளார். அதோடு நில்லாமல், தான் நடிக்கும் புதிய படங்களிலும் அவருக்கு சான்ஸ் தருமாறு டைரக்டர்களிடம் கேட்டு வருகிறார்.
சி.பொ.,

"ரவுண்ட்' கட்டுகிறார் விஷால்!
அவன் இவன் படம், விஷாலுக்கு நல்லதொரு அங்கீகாரத்தைக் கொடுத்துள்ளது. இதனால், சில புதுமுக டைரக்டர்கள் வித்தியாசமான கதைகளுடன் விஷாலை அணுகினர். ஆனால், அவரோ, "இப்போதுதான் சில முன்னணி இயக்குனர்களின் கவனம் என் மீது திரும்பியுள்ளது. அதனால், ஒரு ரவுண்டு பெரிய இயக்குனர்களுடன் வந்துவிட்டு, அடுத்த ரவுண்டில் புது இயக்குனர்களுடன் வருகிறேன்...' என்று கதை சொன்னவர்களை நிலுவையில் வைத்துள்ளார்.
சி.பொ.,

தெலுங்கில் ஹன்சிகா மோத்வானி!
வேலாயுதம், ஒரு கல், ஒரு கண்ணாடி படங்களில் நடித்து வரும் ஹன்சிகா மோத்வானியை, சில டைரக்டர்கள் செகண்ட் ஹீரோயின் வேடத்தில் நடிக்கவும் அழைப்பு விடுத்தனர். இதனால், "ஷாக்' ஆன ஹன்சிகா, இனிமேலும் தமிழ் சினிமாவே கதி என்றிருந்தால், சிக்கலாகி விடும் என்று தெலுங்குக்கு தாவி விட்டார். தற்போது, தெலுங்கில் தயாராகி வரும், ஓ மை பிரண்ட் என்ற படத்தில் ஹன்சிகாதான் நாயகி. ஆல் பழுத்தால் அங்கே கிளி; அரசு பழுத்தால் இங்கே கிளி!
— எலீசா.

தங்கர் பச்சான் கண்டனம்!
சமீரா ரொட்டி, மேக்னா நாயுடு, மேகா நாயர் என்று நடிகைகள், தங்கள் பெயருடன் ஜாதியை இணைத்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் டைரக்டர் தங்கர்பச்சான். ஜாதி, மத பேதமற்ற சினிமாத் துறையில், இதுபோன்று சில நடிகைகள் ஜாதி உணர்வை திணிப்பதை இனிவரும் காலத்தில் அனுமதிக்கக் கூடாது என்றும் சினிமா துறையினரை கேட்டுக் கொண்டு வருகிறார்.
— சி.பொ.,

கன்னடத்தில், மைனா படம்!
மைனா படத்தை இந்தியில் ரீ-மேக் செய்யும் முயற்சியில் இருக்கிறார் பிரபு சாலமன். இந்நிலையில், அப்படத்தை கன்னடத்தில் ரீ-மேக் செய்யும் பணிகள் துவங்கி விட்டது. இதை அறிந்து, மீண்டும் அப்படத்தில் நடிக்க ஆர்வம் காட்டினார் அமலா பால். ஆனால், அவர், முப்பது லட்சம் ரூபாய் சம்பளம் கேட்டதால், செட் ஆகவில்லை. அதனால், அமலா பாலுக்கு பதிலாக இப்போது, எத்தன் பட நாயகி சனுஷா அப்படத்தில் நடிக்க, "கமிட்' ஆகி உள்ளார்.
— சி.பொ.,

விருது பெற்ற தயாரிப்பாளர்!
பரத் நடித்துள்ள, யுவன் - யுவதி படத்தை தயாரித்துள்ள, டாக்டர் வி.ராமதாஸ், வெளிநாடு வாழ் இந்தியர்களில், முதல் ஐம்பது பேரில் ஒருவராக அந்தஸ்து பெற்றவர். இதற்காக, வெளிநாட்டில் வாழும் சிறந்த இந்தியர் என்ற விருதை பிரதமர் மன்மோகன்சிங்கிடம் பெற்றுள்ள வி.ராமதாஸ், இந்த, யுவன் - யுவதி படம் வெற்றி பெற்றால், தொடர்ந்து படம் தயாரிக்க இருப்பதாகவும் சொல்கிறார்.
— சி..,பொ

டேக்கா கொடுக்கும் சந்தானம்!
ஒரு கல், ஒரு கண்ணாடி படத்தில், உதயநிதி ஸ்டாலின்தான் ஹீரோ என்றாலும், படத்தின் வியாபாரம் கருதி, சந்தானத்துக்கும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. ஆனால், தேர்தலுக்கு முன், அப்படத்துக்கு கால்ஷீட்டை வாரி வழங்கிய சந்தானம், இப்போது இறுக்கிப் பிடிக்கிறார். உதயநிதி வரும் அத்தனை காட்சிகளிலும் சந்தானமும் இருப்பதால், அவர் இல்லாமல் படப்பிடிப்பு தாமதமாகி வருகிறது.
— சினிமா பொன்னையா.,

* தன் வாழ்க்கைக்கு உதவியவர்களுக்கு நன்றி சொல்வது போல், தன் வாழ்க்கை சரித்திரமாக, இதமான இசையில், "ஸ்பிரிட் ஆப் மியூசிக்' என்ற பெயரில், ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு ஆல்பம் வெளியிட்டுள்ளார்.

அவ்ளோதான்!

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X