அன்புடன் அந்தரங்கம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஆக
2011
00:00

அன்புள்ள அம்மாவுக்கு —
என் வயது 30; திருமணமானவள். என் அப்பாவுக்கு, இரு மனைவியர்; இருவரும் சகோதரிகள். என் தாய், இரண்டாவது மனைவி. அம்மாவின் அப்பாவுக்கும், அதாவது, என் தாத்தாவுக்கும் இரு மனைவியர். என் தாத்தா குடும்பத்தில் இருந்த ஏராளமான பிரச்னைகளாலும், குழப்பங்களாலுமே என் தாய், இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட நேர்ந்தது.
சொந்த அக்கா குடும்பத்திலேயே வாழ்க்கைப் பட்டதால், குடும்ப பாரம் முழுக்க என் அம்மாவே விரும்பி ஏற்றுக் கொண்டார். என் அப்பா, சாதாரண, குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்து வந்தார். என் அம்மா மேற்கொண்ட சுய தொழில் மூலம், என் குடும்பம் ஓரளவு முன்னேற்றம் அடைய ஆரம்பித்தது. ஆனா<லும், என் அம்மா, நான், என் தங்கை மூவரும் அந்த வீட்டில் வேலைக்காரியை விட, கேவலமாகத் தான் நடத்தப்பட்டோம்.
என் பெரியம்மாவுக்கு ஒரே மகன். அவனுக்கு படிப்பும், வேலையும் சரியாக இல்லை. என் தாய் சம்பாதித்த பணத்தையோ, ஒரு பொட்டு தங்கத்தையோ, என் திருமணத்துக்கு முன் வரை, கண்ணில் கூட பார்த்ததில்லை. என் திருமணத்தின் போது தான், தங்க செயின் ஒன்றை, என் பெரியம்மாவின் அனுமதியோடு செய்து போட்டார் என் அப்பா.
பெரியம்மாவும், அவள் பிள்ளையுமே, என் அம்மாவின் சம்பாத்தியம் முழுவதையும் அனுபவித் தனர். இன்று, அனைவரும் திருமணமாகி, தனித் தனியாக இருக்கிறோம். சகல வசதியோடு இருக்கும் என் அண்ணன் வீட்டோடு தங்கி விட்டார், என் பெரியம்மா.
என் அம்மாவும், அப்பாவும் மட்டும் தனியாக ஊரில் வசிக்கின்றனர். வயது காரணமாக, என் அம்மாவால் முன் போல் வேலை செய்ய முடிவதில்லை. அப்பாவோ, முதல் தாரத்தையும், அவரது மகனை பற்றி மட்டுமே நினைத்து, சுயநலமாக இருக்கிறார்.
சொத்து, பத்து எல்லாம், என் அப்பா காலத்துக்குப் பின், மூத்த தாரத்துக்கு சென்று விடும். "இப்போதே, மகள்கள் இருவருக்கும் ஏதாவது செய்ய வேண்டும்...' என்று, என் தாய் விரும்பி, அப்பாவிடம் கேட்டால், "என் முதல் மனைவி பார்த்து செய்வாள்...' என்று கூறி விடுகிறார். ஒவ்வொரு சமயமும், என் அம்மா மனம் வருந்தி பேசும் போது, பயமாக இருக்கிறது.
என் அம்மாவை, என்னுடன் வந்து தங்கும்படி சொன்னால், மறுக்கிறாள். என் அம்மாவுக்கு என்ன தான் வழி. சட்டப்படி ஏதும் நடவடிக்கை எடுக்க முடியுமா?
உங்கள் பதில் தவிர, வேறு ஆதரவு ஏதும் எனக்கில்லை.
— உங்கள் அன்பு மகள்.

அன்புள்ள மகளுக்கு —
படித்தால் யாரும் எளிதில் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு, குழப்ப நடையில் எழுதியிருந்த உன்னுடைய நீண்ட கடிதத்திலிருந்து, சாராம்சத்தை மட்டும் எடுத்துக் கொண்டேன். நீ எந்த மதத்தைச் சேர்ந்தவள் என்ற விவரமும் இல்லை; இந்து மதத்தை சேர்ந்தவள் என, யூகித்துக் கொண்டேன்.
உன் தாய் முட்டாள் அல்ல; இளிச்சவாய் அல்ல; உறவுகளின் சூழ்ச்சிகளை அறியாத அப்பாவி அல்ல. பிறருக்காக வாழ்நாள் முழுக்க உழைத்துக் கொண்டே இருப்பது உன் தாயின் பிறவிக் குணம். பண இழப்பை கணக்கிட்டு, உன் தாயை பிழைக்கத் தெரியாதவள் என விமர்சனம் செய்கிறாய். ஒரு நிலை வரும் வரை, கூட்டுக் குடும்பம் சிதறிப் போகாமல் கட்டிக் காத்திருக்கிறாள். கண்ணியக் குறைவாய் தன்னைப் பற்றி யாரும் பேசிவிடக் கூடாதென்று, மாதர் குல அரசியாய் திகழ்ந்திருக்கிறாள் உன் தாய்.
உன் வீட்டில் தான் இத்தனை பிரச்னை என்று நினைக்காதே... வீட்டுக்கு வீடு வாசற்படி.
உனக்கு, உன் தாயின் மீது பாசம் அதிகம். வசதி பத்தாத உன் தங்கைக்கு, இன்னும் உழைத்து உதவுகிறார். உழைத்து, உழைத்து உன் தாய்க்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு விட்டது. தன் மன வேதனையை, தன் கணவனிடம் கூட வெளியிடாது, உன்னிடம் தினம், இருபது நிமிடமாவது வெளியிட்டு, வடிகால் தேடிக் கொள்கிறார் உன் தாய்.
ஒவ்வொரு உயிர் படைக்கப்பட்டதற்கும், ஓர் உன்னத நோக்கம் இருக்கிறது. நோக்கம் நிறைவேறாமல் உன் தாய் இறந்துவிட மாட்டார். யார் கண்டது? அவர் பார்க்கும் பணிதான், அவரின் நோவுகளுக்கு மருந்தோ என்னவோ!
உன் தாய் போன்ற பெண்கள், தமிழ்நாட்டு குடும்பங்களில் நிறைய பேர் இருக்கின்றனர். அவர்கள் இருப்பதால் தான் கூட்டுக் குடும்பம் என்ற நிலைப்பாடும், பண்பாடு, கலாசாரம் என்ற காரணிகளும் நிலைத்து நிற்கின்றன என நம்புகிறேன்.
உரிமையியல் வழக்கு போடலாம்; ஆனால், சாதக தீர்ப்பு பெற நீண்ட நாள் ஆகும். வழக்கு காரணமாக உங்கள் குடும்பங்களில் பிரச்னை பூத்து, வன்முறை வெடிக்கக் கூடும்; ஜென்மப் பகை தோன்றக் கூடும். உன் தாயின், 31 வருட உழைப்பு சிந்தி சிதறிவிடும். விட்டு விடு; மன்னித்து விடுவதே பெரிய தண்டனை.
உன் தாயை, உன் வீட்டில் வைத்து பராமரி. அவர்கள் விரும்பியவற்றை செய்து கொடு. வெளியூர்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல். கணவன் தராத சந்தோஷத்தை, மகளின் பாசம் தரட்டும்.
உன் தாய் ஒரு வாழும் தெய்வம். அவர் இருக்கும் திசை நோக்கி, வணங்கி மகிழ்கிறேன் மகளே.
என்றென்றும் தாய்மையுடன்,
சுகுந்தலா கோபிநாத்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (24)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Partha - Canton,யூ.எஸ்.ஏ
13-ஆக-201103:35:23 IST Report Abuse
Partha Anu we miss you here. You cannot come back. Your answer would have been different. Who can replace Anuradha Ramanan.
Rate this:
Share this comment
Cancel
Ganapathy Kannan - சிங்கப்பூர்,சிங்கப்பூர்
11-ஆக-201123:00:46 IST Report Abuse
Ganapathy Kannan அன்பான மீனவன் அவர்களின் அழைப்பை ஏற்று, தாங்கள் குறிப்பிட்டுள்ள திரு. ஸ்ரீதர் ராஜ் அவர்களின் பதிவையும், அமரர் அனுராதா ரமணன் அவர்களின் பதிலையும் படித்துப் பார்த்தேன். "உண்மையில் 'வீக்கர் செக்ஸ்' பெண்கள் இல்லை. ஆண்கள்தான், உணர்ந்துகொள்." என்ற அனுராதா ரமணனின் கூற்றைத் தவிர மற்ற கருத்துத்துக்கள் அனைத்திலும் நான் உடன்படுகிறேன். வீக்கர் செக்ஸ் என்று மகளிரை குறிப்பிடும் காரணம், உடலியல் ரீதியாக அவர்கள் பலகீனமான பாலினம் என்று குறிப்பிடுகிறார்களே தவிர, பாலுணர்வில் அவர்கள் பலகீனமானவர்கள் என்று அவர்களைக் கொச்சை படுத்துவதற்காக அல்ல. ஆனால் நம்மவர்கள், அதுவும் குறிப்பாக பெண்களை எப்பொழுதும் போகப் பொருளாக மட்டுமே நினைக்கும் ஆண்கள் தரப்பில் பெண்களைப் பற்றி இவ்வாறு கருத்து கூறப்பட்டு, அவர்களை சுலபமாக கவர்ந்திழுக்கலாம் என்ற எண்ணம் முன்வைக்கப்படுகிறது. அந்த வார்த்தையை எவ்வாறு அனுராதா ரமணன் பயன்படுத்தினார் இந்த பதிலில் என்பதை எண்ணி நான் வியப்புறுகிறேன். மற்றபடி அவர் கொடுத்திருக்கும் அறிவுரை மிக மிக முழுமையாக நண்பருக்குப் பொருத்தமானதே. ஸ்ரீதர் ராஜ் அவர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியும், பாண்டிச்சேரி பெண் மற்றும் ஆண் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியும் முற்றிலும் வெவ்வேறு களங்கள். பாண்டிச்சேரியில் காதல் என்ற பெயரில் நடந்து கலைந்த ஒரு நிகழ்வு. ஆனால் நண்பரது அனுபவமோ காமம் கூடாமல் கலைந்து தொலைந்த கனவு. சிங்கப்பூரில் ஒரு மனிதன் குற்றம் புரிந்தால் அவனுக்கு கிடைக்கும் தண்டனை ஒரு மாத சிறை என்று வைத்துக் கொள்வோம். அதுவே அவன் ஒரு காவல்துறையையோ அல்லது சட்டம் சம்பந்தப்பட்டஇதர துறைகளையோ சார்ந்தவனாக இருப்பானாகில், அவனுக்கு இரண்டு மடங்கு தண்டனை அதாவாது இரு மாத சிறை தண்டனை விதிக்கப் படும். ஏனெனில் சாதாரணமான பொதுமக்களில் ஒருவனாக அக்குற்றத்தைச் செய்திருந்தால் அவனுக்கு அது ஒருவேளை குற்றம் என்பது சரிவர தெரியாதிருந்திருக்கலாம். ஆனால் சட்டம் தெரிந்தவன் அதைச்செய்யும்போது சட்டம் அவனைக் கடுமையாக நோக்குகிறது. அந்தவகையில் மாணவர்களுக்கும், சமுதாயத்துக்கும் நல்லதொரு முன்மாதிரியாக திகழவேண்டிய நண்பர் அந்தத் தப்பை செய்துள்ளது சரியானதொன்றாக எனக்குத் தோன்றவில்லை. மேலும் அனுராதா ரமணன் அவர்கள் அந்த ஆசிரியையை எவ்வாறெல்லாம் பழிவாங்கலாம் என்று வழிசொல்வார் என்று நினைத்தது மிகவும் ஆச்சரியம். நண்பர் கல்வியாளராக இருப்பதால் மிகவும் நளினமான சொற்களைக் கையாண்டு, அலுவலகத்திலேயே அப்பெண்மணிக்கு குழந்தையான விதம் பற்றி விவரித்திருப்பது 75 சதவிகிதம் ஒப்படைப்பு என்பது எதுவரை என்பதை நமக்கு உணர்த்தியிருப்பதுடன், நடந்த நிகழ்ச்சியை அருவருப்பானதாக நமக்கு காட்டி நிற்கிறது. அப்பெண் அறிவுமழுங்கி, ஒரு குடும்பத்தலைவனை; அடுத்த பெண்ணின் கணவனை; நிறுவனத்தில் தலைமையில் உள்ள ஒரு நபரை ஏதோ ஒரு காரணத்தால் நெருக்கமாக பழகி, அந்த ஆணின் மனைவி பிரச்சினை ஏற்படுத்தியத்தாலோ அல்லது காலங்கடந்த ஞானத்தாலோ அந்த ஆணை விட்டுப் பிரிகிறாள். காலங்கடந்தாலும் அவள் எடுத்த அந்தமுடிவு மிகச்சரி. இரண்டு குடும்பங்கள் சின்னாபின்னமாகாமல் காத்துக் கொள்ள எடுத்த முடிவு. ஆனால் அந்த ஆண் இன்னும் தான் செய்த்து அனைத்தும் தவறு என்பதை உணரமுடியாமல் இருக்கிறாரே என்பதை நினைக்கும்பொழுது, கல்வி மனிதனைப் பண்படுத்துகிறது என்ற கூற்றின் மேல் நம்பிக்கை வர மறுக்கிறது. நமக்கு இன்று எட்டு வயதாக இருக்கும் பெண்குழந்தை இன்னும் அதிகபட்சம் 3 அல்லது 4 வருடத்தில் பெரியபெண்ணாகி நிற்கும். பதின்ம வயதில் இருக்கும் பெண்குழந்தைகளுக்கு தந்தையாக இருப்பவர்கள் அவர்களுக்கு ஒரு அரணாகவும், நல்லது கெட்டது பற்றி கற்றுக் கொடுப்பவர்களாகவும் இருக்கவேண்டும். எனவே நண்பர் நடந்தவைகள் அனைத்தையும் தேவையற்றவை என்று மனதில் இருந்து கிள்ளியெறிந்து, குடும்பத்துடன் இணைந்து நல்லதொரு கணவனாக, அன்பு மகளின் அன்புக்கும் பாசத்துக்கும் உரிய தந்தையாக திகழ்ந்து, மனஅமைதியுடனும், இல்லறத்தில் மகிழ்ச்சியுடனும் என்றென்றும் வாழவேண்டும் என்று வேண்டுகிறேன். என் கருத்துக்களை தெரிவிக்குமாறு சொல்லி என் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளும் சூழலை ஏற்படுத்தித் தந்த அன்பான மீனவனுக்கு நன்றியையும். அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
Rate this:
Share this comment
Cancel
Meenavan (meenavan@facebook.com) - New Jersey,யூ.எஸ்.ஏ
11-ஆக-201106:39:04 IST Report Abuse
Meenavan (meenavan@facebook.com) திரு.கணபதி கண்ணன் அவர்களுக்கு ஒரு சிறு வேண்டுகோள்.-----------கீழ்க்கண்ட பதிவு(ஆங்கிலத்தில் உள்ளது) சென்ற வாரம் திரு.ஸ்ரீதர் ராஜ்,(மாலத்தீவு) அவர்களால் செய்யப்பட்ட பதிவு.------------------------------------------------I do accept with ganapathi kannan, what he said was 100% correct. I too had similar problem but when I asked , Mrs.Anuradha Ramanan also gave suggestion like the same mentinoned above. [13/12/2009,varamalar].Better NOT ask any suggestions to the ladies! They will try to highlight your mistakes only! At the same time they will ask us to hide and forget the mistakes of the females! Two years are gone since then! But still I will not spare that girl!..(This is by Thiru.Sridhar Raj).------------------------------------------------ அத்துடன் நான் அவர் பதிவு செய்த மற்றும் அமரர் அனுராதா ரமணன் அவர்கள் அளித்த பதிலின் இணைய இணைப்பையும் கொடுத்திருக்கிறேன். தயவுசெய்து நீங்கள் அவற்றை வாசித்து உங்கள் கருத்தைப் பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்......... தினமலர்-காம் /supplementary/E-malar.asp?ncat=varamalar&showfrom=12/13/09 ..நன்றியுடன் மீனவன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X