கவிதைச்சோலை! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
கவிதைச்சோலை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 ஆக
2011
00:00

நட்பெனப்படுவது யாதெனில்...

* நண்பனே... உன்
நேசத்தை விட,
உன்னை நேசிக்கும்
என்,
ப்ரியம் மிகவும்
உன்னதமான தென்று
தெரியுமா, உனக்கு?

* என் சம்பந்தப்பட்ட
எதுவும் ஒரு
பொருட்டில்லை
உனக்கு...
ஆனால், உன்
சம்பந்தப்பட்ட
எதுவும்
மறந்ததில்லை
எனக்கு... அது
தெரியுமா, உனக்கு?

* நட்பை யாசித்து
பெறக் கூடாது
நண்பனே...
யாசித்தால், அது
அந்த நட்புக்கே
களங்கம்...
நட்புக்காக
யாசிக்கலாம்...
எதையும், யாரிடமும்!
அது, அந்த
நட்புக்கே
அலங்காரம்... அது
தெரியுமா, உனக்கு?

* நட்பு...
நட்புக்காக, எதையும்
மன்னிக்கும், மறக்கும்
தோளணைக்கும்
தோள் கொடுக்கும்
சேர்த்தணைக்கும் விரல்
இணைக்கும்... அது
தெரியுமா, உனக்கு?

* நட்பில்
கணக்கு பார்ப்பதும்...
கணக்காய் இருப்பதும்
தவறடா... என்
தோழா...
நட்பிற்கும் ஒரு
இலக்கணமுண்டு!
கணலணைய
கற்புமுண்டு... அது
தெரியுமா, உனக்கு?

* என்றோ ஒரு நாள்
என் நேசமும்,
என் நட்பும்
உனக்குப் புரியும்
என்ற நம்பிக்கையில்
தினமும்
நாட்களை
நான் கடத்துகிறேன்
அதாவது...
தெரியுமா, உனக்கு?

ஜே.சி.ஜெரினா காந்த், சென்னை.

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X