சிறுவனுக்கு ஏற்பட்ட சிக்கல்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
சிறுவனுக்கு ஏற்பட்ட சிக்கல்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 ஆக
2011
00:00

சீனாவின் வடக்கு பகுதியில், சமீபத்தில், ஒரு வினோதமான நிகழ்வு நடந்தது. இங்கு வசிக்கும் ஒரு சிறுவன், இரண்டு கட்டடங்களுக்கு இடையில் <உள்ள, மிகவும் குறுகலான சந்துக்குள், விளையாட்டு போக்காக, எப்படியோ சென்று விட்டான். இந்த சந்தின் அகலம், வெறும், 20 செ.மீ., தான்.
உள்ளே சென்ற சிறுவனுக்கு, வெளியே வர முடியவில்லை. பயத்தில், கூச்சல் போட்டதும், அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். யாராலும், அந்த குறுகலான சந்துக்குள் செல்ல முடியவில்லை. அந்த சிறுவனால், தலையையும் திருப்ப முடியவில்லை; தலையை திருப்பினால், ஒரு பக்கமாக நடந்து, வெளியே வந்து விட முடியும். ஆனால், இதை சிறுவனுக்கு புரிய வைக்க முடியவில்லை. நேரம் ஆக, ஆக, சிறுவனின் அழுகை அதிகரித்தது. வேறு வழியில்லாமல், மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்களும், அங்கு வந்து, என்னென்ன நடவடிக்கைகளோ எடுத்துப் பார்த்தனர். சிறுவனை மீட்க முடியவில்லை. மயங்கும் நிலைக்கு போய் விட்டான், சிறுவன். அதிர்ஷ்டவசமாக, திடீரென, தன் தலையை திருப்பினான். வெளியில் இருந்தவர்கள், "அப்படியே, ஒரு பக்கமாக, நடந்து வா...' என, கூச்சலிட்டனர். சிறுவனும், அதை புரிந்து, சுவர்களை பிடித்துக் கொண்டே, ஒரு பக்கமாக நடந்து, வெளியில் வந்து விட்டான். சிறுவன் வெளியில் வந்ததும், அவனது பெற்றோர், ஆனந்த கண்ணீர் விட்டனர். படத்தை பார்த்தால், சிறுவனுக்கு ஏற்பட்ட அவஸ்தை, நமக்கு புரியும்.
— ஜோல்னா பையன்.

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X