இன்னும் விண்டோஸ் எக்ஸ்பி | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements
இன்னும் விண்டோஸ் எக்ஸ்பி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 ஆக
2011
00:00

விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் வந்த பின்னரும், விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தினையே தொடர்ந்து பயன்படுத்தி வருவது குறித்து, இந்த பகுதியில் முன்பே குறிப்பிட்டி ருந்தோம். பாரஸ்டர் என்னும் ஆய்வு நிறுவனம், சென்ற மார்ச் வரையிலான காலத்தில் எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் பயன்பாட்டில் உள்ளன என்று ஒரு கணிப்பினை மேற் கொண்டு அண்மையில் முடிவுகளை வெளியிட்டது. 2,500 நிறுவனங்களில், 4லட்சம் வாடிக்கையாளர்களைச் சந்தித்து தகவல்களைத் திரட்டியது. பன்னிரண்டு மாதங்கள் இந்த கணிப்பு மேற் கொள்ளப்பட்டது. முடிவுகள் பின் வருமாறு.
புதிய கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் 7 பதிந்து பயன்படுத்துவது 83%ஆக உள்ளது. விண்டோஸ் விஸ்டா சிஸ்டத்திற்குச் செல்பவர்கள் எண்ணிக்கை மிக மிகக் குறைந்து விட்டது. ஒவ்வொரு ஆண்டும் இது பாதியாகக் குறைந்து வருகிறது.
ஆனால், டெஸ்க் டாப் கம்ப்யூட்டர் களில் 60% கம்ப்யூட்டர் பயன்பாட்டில் இருப்பது விண்டோஸ் எக்ஸ்பி மட்டுமே. இவை பயன்படுத்தப்படும் ஹார்ட்வேர் சாதனங்கள், சரி செய்திட முடியாத அளவிற்கு மோசமானால் தான், அவற்றின் இடத்தில் வாங்கப்படும் கம்ப்யூட்டர்கள் விண்டோஸ் 7 சிஸ்டத்துடன் வரும்.

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X