கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஆக
2011
00:00

கேள்வி: விண்டோஸ் 7 சிஸ்டத்தில் யூசர் அக்கவுண்டிற்கான படத்தினை எப்படி மாற்றி அமைப்பது?
-கா.வெங்கடாசலம், சென்னை.
பதில்: ஸ்டார்ட், கண்ட்ரோல் பேனல் எனச் சென்று, “User Accounts and Family Safety” என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு மீண்டும் “Change Your Account Picture” என்பதைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திட வேண்டும். இங்கு படங்கள் அடங்கிய தொகுப்பு ஒன்று காட்டப்படும். இதில் ஒன்று உங்களுக்குப் பிடித்திருந்தால், அதிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுத்து “Change Picture” என்பதில் கிளிக் செய்திடலாம். பெரும்பாலானவர்கள், இதில் காட்டப்படும் படங்களைத் தவிர்த்து, தங்களுக்குப் பிடித்த நடிகர்கள் அல்லது தங்கள் படத்தை அமைக்க விரும்புவார்கள். அவர்கள் “Browse for more pictures…” என்று இருக்கும் இடத்தில் கிளிக் செய்து, பின்னர் ஹார்ட் ட்ரைவில் பிரவுஸ் செய்து, தாங்கள் விரும்பும் பட பைலில் டபுள் கிளிக் செய்து ஓகே செய்திடலாம்.

கேள்வி: இமெயில் கிளையண்ட் புரோகிராமாக, நான் தண்டர்பேர்ட் பயன்படுத்துகிறேன். தினந்தோறும் பலமுறை இதன் மூலம் மெயில் பார்த்து பதில் அளிக்கிறேன். பதில் அளிக்க முயற்சிக்கையில், கர்சர் எப்போதும், ஏற்கனவே உள்ள செய்தியின் கீழாக வருகிறது. செய்திக்கு மேலாக கர்சர் கிடைத்து பதிலை எழுத எப்படி செட் செய்வது?
-சி. தன்ராஜ் மாணிக்கம், தாம்பரம்.
பதில்: தண்டர்பேர்ட் புரோகிராமை இயக்கிய பின்னர், Tools>Account Settings எனச் செல்லவும். இங்கு கிடைக்கும் விண்டோவில் Composition & Addressing என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் Composition என்ற ஹெடர் பகுதியில், Automatically quote the original message when replying என்பதனைத் தேர்த்தெடுக்கவும். இதன் அருகே ஒரு செக் மார்க் இருக்கும். அதில் கிளிக் செய்தால், கீழ் விரி மெனு ஒன்று கிடைக்கும். இதில் start my reply above the quote என்பதைத் தேர்ந்தெடுத்து, பின்னர் ஓகே கொடுத்து வெளியேறவும். இனி அஞ்சலுக்குப் பதில் அளிக்க கிளிக் செய்கையில், கர்சர் ஏற்கனவே உள்ள மெசேஜுக்கு முன்பாகத் துடிப்பதனைப் பார்க்கலாம்.

கேள்வி: தினந்தோறும் சில இணைய தளங்களைத் திறந்து அன்றைய மெயில்கள், ஷேர் மார்க்கட் செய்தி, பொது செய்தி ஆகியவற்றைப் பார்த்த பின்னரே பணியைத் தொடங்குகிறேன். இவற்றை பிரவுசர் திறந்தவுடன் தாமாகத் தோன்றும்படி அமைக்க முடியுமா? இன்டர்நெட் எக்ஸ்புளோரரை பிரவுசராகப் பயன்படுத்தி வருகிறேன்.
-ஆ.கனகசபை, காரைக்குடி.
பதில்: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் எந்த பதிப்பு என்று நீங்கள் கூறவில்லையே. நீங்கள் பயன்படுத்தும் தொகுப்பைத் திறந்து கொள்ளுங்கள். Tools>Internet Options என்று செல்லவும். இந்த விண்டோவில் General என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இந்த கட்டத்தில் Home Page என்ற கட்டத்தில் நீங்கள் திறக்க விரும்பும் இணைய தளங்களின் முகவரியை, ஒன்றன் பின் ஒன்றாக டைப் செய்து ஓகே செய்திடுங்கள். அடுத்த முறை பிரவுசரை இயக்குகையில், நீங்கள் கொடுத்துள்ள அனைத்து தளங்களும் திறக்கப்படும்.

கேள்வி: இன்ஸெர்ட் கீ எதற்காகத் தரப்பட்டுள்ளது? வேஸ்ட் கீ போலத்தான் தோன்றுகிறது. உங்களுக்கு ஏதேனும் தெரிகிறதா?
-டி. ரெங்கசாமி, ஸ்ரீவில்லிபுத்தூர்.
பதில்: இது சந்தேகம் இருக்கும் கேள்வி மாதிரி தெரியவில்லை. பரவாயில்லை. தகவலைத் தருகிறேன். இன்ஸெர்ட் கீ மற்ற பெரும்பாலான கீகளைப் போல அதிகம் பயன்படுத்தப்படவில்லை என்றாலும், ஒரு சில பயன்பாட்டிற்கெனவே தரப் பட்டுள்ளது. வேர்ட் போன்ற அப்ளிகேஷனில், இதனை இயக்கிவிட்டு ஏற்கனவே டைப் செய்யப்பட்ட வரிகளில் டைப் செய்தால், அதன் இடையே எழுத்துக்கள் டைப் செய்யப்படும். இதன் இயக்கத்தினை நிறுத்திவிட்டால், டைப் செய்கையில் ஏற்கனவே இருக்கும் எழுத்துக்கள் நீக்கப்பட்டு, அதன் இடத்தில் புதியதாய் டைப் செய்திடும் எழுத்துக்கள் அமையும். ஒரு சிலருக்கு இது பிடிக்க வில்லை என்பதுவும் சரியே. இதனால்தான் வேர்ட் 2007ல் மைக்ரோசாப்ட் மாறா நிலையில் இதன் இயக்கத்தை நிறுத்தியது. வேர்ட் 2010ல், இதனைச் செயல்படுத்த வேண்டும் என எண்ணினால், File > Options > Advanced எனச் சென்று Editing பிரிவு செல்லவும். இங்கு இன்ஸெர்ட் கீ இயக்கப்பட வேண்டுமா வேண்டாமா என்பதை, அதற்கான செக் பாக்ஸில் டிக் செய்வதன் மூலம் அமைக்கலாம். இந்த
கீக்கு இன்னொரு செயல்பாடும் உண்டு. வேர்டின் அண்மைக் கால பதிப்புகளில் இந்த வகை செயல்பாடு உண்டு. காப்பி செய்யப்பட்ட டெக்ஸ்ட் மற்றும் ஆப்ஜெக்ட்களை, பேஸ்ட் செய்திட இந்த கீயை அழுத்தினால் போதும். அதாவது Ctrl+V என்ற கீகளின் செயல்பாட்டினை இது செயல்படுத்தும். இதற்கும் முதலிலேயே செட் செய்திட வேண்டும். வேர்டில் File > Options > Advanced எனச் சென்று Cut, Copy and Paste என்ற இடத்திற்குச் சென்று, இன்ஸெர்ட் கீக்கான இந்த செயல் பாட்டினை செட் செய்திடலாம். ( உங்கள் கீ போர்டில் ங கீ செயல் இழந்து போகும் பட்சத்தில், இன்ஸெர்ட் கீ கை கொடுக்குமே.)

கேள்வி: நான் விண்டோஸ்7 சிஸ்டம் கொண்ட லேப்டாப் ஒன்றை வாங்கினேன். அதன் சர்வீஸ் பேக் 1 ஐ டவுண்லோட் செய்து இயக்க முடிய மறந்துவிட்டேன். பிப்ரவரியில் அதனை மைக்ரோசாப்ட் வெளியிட்டதாக அறிகிறேன். இப்போது அந்த சர்வீஸ் பேக் இணைந்த சிஸ்டத்தினை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திட முடியுமா?
-சி. மார்க்ஸ், கோவை.
பதில்: உங்களுக்கு அளிக்கப்பட்ட சிஸ்டம் அடையாள எண், பதிவு செய்த எண் போன்றவற்றைக் கைவசம் வைத்துக் கொண்டு, இந்த செயல்பாட்டில் இறங்குங்கள். அநேகமாக அவை தேவைப்படாது. மைக்ரோசாப்ட் தளம் சென்றவுடன், உங்கள் சிஸ்டம் சோதனை செய்யப்பட்டு, கட்டணம் செலுத்தப்பட்டு வாங்கிய சிஸ்டம் என்றால் தான் அனுமதி கிடைக்கும். இந்த சிஸ்டம் டவுண்லோட் ஒரு ஐ.எஸ்.ஓ. இமேஜாக மட்டுமே கிடைக்கும். இதனை டவுண்லோட் செய்து, டிவிடி ஒன்றில் பதிந்து, பின்னர் இந்த டிவிடி யினைக் கொண்டு சிஸ்டம் இன்ஸ்டலேஷன் மேற்கொள்ளலாம்.
நீங்கள் விண்டோஸ் 7 புரபஷனல் எக்ஸ் 64 வைத்திருப்பதாக எழுதி உள்ளீர்கள். அதற்கு http://msft.digitalrivercontent.net/win /X1724281.iso என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும். இதனை இறக்கிப் பயன் படுத்தலாம். ஆனால் 30 நாட்களுக்குள் உங்களுக்குத் தரப்பட்டுள்ள ப்ராடக்ட் கீ கொண்டு பதிந்து கொள்ளவும்.

கேள்வி: வேர்ட் டாகுமெண்ட்டில் ஸ்பெல்லிங் சோதனை நடத்தப்படுகையில், பெரிய எழுத்துக்களில் உள்ள சொற்களை ஏன் விட்டுவிடுகிறது? அப்படிப்பட்ட சொற்களையும் சேர்த்து, ஸ்பெல் செக் செய்திட வேண்டும் வகையில், வேர்ட் எப்படி செட் செய்வது?
-கே. ஸ்நேகலதா, விழுப்புரம்.
பதில்: நல்ல கேள்வி. வேர்ட் பெரிய எழுத்துக்களில் அமைக்கப்பட்ட சொற்களை யும் ஸ்பெல் செக் செய்திடும். இதற்கான செட்டிங்ஸ் அமைப்பதனைச் சொல்கிறேன். Tools மெனுவில் இருந்து Options என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண்டோவில் உள்ள டேப்களில் Spelling & Grammar என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு Ignore Words in UPPERCASE என்ற வரியின் முன் உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி பெரிய எழுத்துக்களில் அமைக்கப்படும் சொற்களையும் வேர்ட் ஸ்பெல் செக் செய்திடும்.

கேள்வி: இணைய தளங்களில் நாம் காண விரும்பும் சொற்களை எப்படிக் கண்டறிவது? வேர்ட் புரோகிராமில் உள்ளது போல வசதியைப் பிரவுசர் தருகிறதா?
-கா. குழந்தை சாமி, சோழவந்தான்.
பதில்: நீங்கள் எந்த பிரவுசரைப் பயன்படுத்துபவராக இருந்தாலும், அதன் Edit மெனு செல்லுங்கள்.அங்கு Find தேர்ந்தெடுங்கள்.
அல்லது, கண்ட்ரோல் + எப் அழுத்துங்கள். சிறிய “find” பாக்ஸ் ஒன்று கிடைக்கும். இதில் Find What என்பதனை அடுத்து நீள செவ்வகக் கட்டம் ஒன்று காட்டப்படும். இதில் நீங்கள் தேடும் சொல்லினை டைப் செய்திடவும். அந்த சொல் இணையப் பக்கத்தில் இருந்தால் நீங்கள் நேராக அந்த இடத்திற்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள்.
உங்களுக்கு ஒன்று தெரியுமா? இதே போல விண்டோஸ் எக்ஸ்புளோரரிலும் பயன்படுத்தலாம். அங்கு நீங்கள் தேடும் பைல் உள்ளது. ஆனால் அது எங்கு உள்ளது என்று தெரியவில்லையா? இங்கும் கண்ட்ரோல் +எப் அழுத்தி தேடல் கட்டம் பெற்று பைலைத் தேடலாம்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X