ஜி.எஸ்.எம். (GSM Global System for Mobile Communications): இந்தியா, கிரேட் பிரிட்டன் உட்பட பல நாடுகளில் பெரிய அளவில் பயன்படுத்தப்படும் ஒரு மொபைல் போன் தொடர்பு தரும் சிஸ்டம். இன்னொரு மாற்றான சி.டி.எம்.ஏ. என்ற மொபைல் சிஸ்டம், இதைக் காட்டிலும் சிறப்பான தொழில் நுட்பத்தின் அடிப்படையில் இயங்குவது என்றாலும், ஜி.எஸ்.எம். சிஸ்டம் தான் பெரும்பாலான இடங்களில் இயங்குகிறது. இந்தியாவில் இரண்டு சிஸ்டங்களும் இயங்குகின்றன. ஆனால், ஜி.எஸ்.எம். வகைதான் அதிக வாடிக்கையாளர்களையும், நிறுவனங்களையும் கொண்டுள்ளது. லைன் இன் (Line In): கம்ப்யூட்டர் அல்லது சவுண்ட் கார்டில் வெளியில் இயங்கும் ஆடியோ சாதனத்தை இணைக்கும் வழி.