திண்ணை - நடுத்தெரு நாராயணன்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2010
00:00

ஸ்ரீரங்கப் பட்டினத்திலுள்ள ரங்கநாதர் கோவிலுக்கு, பல அன்பளிப்புகளை வழங்கியிருக்கிறார் ஹைதர் அலி. சிருங்கேரி மடாதிபதிகளிடம், அவர் மிக்க மதிப்பும், மரியாதையும் கொண்டிருந்தார். சிருங்கேரி சுவாமிகளுக்கு, அவர் எழுதிய நான்கு கடிதங்கள் இப்போது பாதுகாக்கப்பட்டுள்ளன. மராட்டியருக்கும், ஹைதர் அலிக்கு மிடையே, பகைமை இருந்தாலும், சிருங்கேரி சுவாமிகள் அங்கே பயணம் புறப்பட்ட போது, அவருக்கு சகல வசதிகளையும் செய்து கொடுத்தார் ஹைதர் அலி. "தங்கள் பயணத்துக்காக ஒரு யானை, ஐந்து குதிரைகள், ஐந்து ஒட்டகங்கள், ஒரு பல்லக்கு ஆகியவற்றை அனுப்பியிருக் கிறேன். அன்னை சாரதா தேவியை அலங்கரிப்பதற்காக ஒரு பட்டுப் புடவையும், சுற்றிலும் மறைக்க திரைச்சீலைகளையும் அனுப்பியுள்ளேன். தங்களின் சொந்த உபயோகத்துக்காக, வேஷ்டிகளும், இரண்டு சால்வைகளும், செலவுக்கென 10,500 ரூபாயும் கொடுத்தனுப்பியிருக்கிறேன். அருள் கூர்ந்து அவற்றை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டு கிறேன்...' என்று, ஒரு கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் ஹைதர் அலி. — மாவீரன் திப்பு சுல்தான் நூலிலிருந்து...


நாடகத்தில் மகாராஜா வருகிற ராஜபார்ட் சீன். மகாராஜாவுக்கு, ஜெயகோஷத்துடன் மாலையிட்டு வரவேற்பளித்தனர். எல்லாரும் தங்களை மறந்து, பரவசமாகித் தாங்களே மகாராஜாவும், யுவராஜாவும் என்று எண்ணியிருந்த தருணத்தில், ஒரு குழந்தை, "வீல்' என்று அழத் தொடங்கியது. அதன் தாயார் எவ்வளவோ, "மகராஜாவைப் பாரு... இளவரசனைப் பாரு!' என்று சொல்லிப் பார்த்தும், பலிக்க வில்லை. அந்தக் குழந்தைக்குக் கொஞ்சம் கூட மகா ராஜாவிடம் மரியாதை இல்லை என்று திண்ண மாய் விளங்கியது. ஏதோ கோபம் இருக்கும் என்று கூட விளங்கியது. இந்தக் குழந்தைக்கு வயதானால் பெரிய பொதுவுடமைக் காரனாகவோ, அராஜகனாகவோ ஆகும் என்று நினைத்தேன். அந்த சமயம், குழந்தையின் தாயார் அதன் வாயில், ஒரு பெப்பர் மின்ட்டைத் திணித்தாள்; உடனே, அழுகை நின்று விட்டது. "சரிதான்... இந்தக் குழந்தை பெரிதாகும் போழுது பெரிய அரசியல் வாதியாகும்!' என்ற தீர்மானத்துக்கு வந்தேன். அரசியல்வாதிகள் பலர் இப்படித் தானே முதலில் பலமான கூச்சல் போட்டு, ஏதாவது ஒரு பதவி கிடைத்ததும், "கம்' என்று அடங்கி விடுகிறனர்.


— கல்கியின் காமெடி பஜார் நூலிலிருந்து



நாமும் பிறக்கிறோம்... இறைவனும் அவதாரம் செய்கிறான்; இருவர் பிறப்பும் ஒன்றாகாது. நாம், நம் கர்ம வசத்தால் பிறக்கிறோம்; நம் விருப்பப்படி பிறக்க இயலாது. இறைவன் கருணையால் அவ தாரம் செய்கிறான். எங்கே, எப்படி தோன்ற வேண்டுமோ, அப்படித் தோன்றுகிறான். மலையிலிருந்து உருட்டியதால் ஒருவன் கீழே விழுகிறான்; மற்றொருவன், படிப்படியாக இறங்கி வருகிறான். முன்னவனைப் போல் நாம் பிறக்கிறோம்; பின்னவனைப் போல் இறைவன் வருகிறான். மேலேயிருந்து உருட்டி விட்டால் காயம் உண்டாகும் அல்லவா? நமக்கு இந்தக் காயம் (காயம் - உடம்பு, புண் ஆகிய இருபொருள்) ஊழ்வினை உருட்டி விட்டதால் வந்தது!


— கி.வா.ஜ., ஒரு சொற்பொழிவில்.


இளவரசனின் தேர்க்காலில் கன்று அடிபட, ஆராய்ச்சி மணி அடித்த பசு பற்றி, படித்திருக்கிறோம். அப்ரூசோ நாட்டில், ஜான் என்ற அரசன் ஆட்சியில், அப்படியொரு மணி இருந்தது; ஒரு நாள் அது ஒலித்தது. வயதான, வாடிப் போன குதிரையொன்று, அந்த மணியின் கயிற்றை இழுத்தது.உண்மையில் அது நீதி கேட்டு வரவில்லை; பசியால், அந்தக் கயிற்றைக் கடித்தது. விவசாயி ஒருவர், அந்தக் குதிரையை வளர்த்து, வயதான பிறகு விரட்டி விட்டது விசாரணையில் தெரிய வந்தது. உடனே அரசரும், அவரது அமைச்சர்க்கும், நீதி கேட்டு குதிரை வந்ததாகவே பாவித்து, அந்த விவசாயி, குதிரையைப் பராமரிக்க வேண்டுமென்று ஆணையிட்டனர்; அபராத மும் விதித்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X