* 'தான் பதவியேற்ற 2014 முதல் பாரத பிரதமர் மோடி ஒருநாள் கூட விடுப்பு எடுத்ததில்லைங்கிற உண்மை, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமா வெளிச்சத்துக்கு வந்திருக்கு! மாணவர்கள் வளர்ச்சியில பெரும் அக்கறை காட்டுற 'திராவிட மாடல்' அரசு, பிரதமரோட இந்த ஒழுக்கம் பற்றி பள்ளி, கல்லுாரி வகுப்பறைகள்ல போதிக்கச் சொல்லுமா?
* 'விடுதலை'ன்னு தீர்ப்பு வந்தா, 'நீதிமன்றத்தை நம்பினேன்; நீதி வென்றது'ன்னு மட்டும் சொல்லி நகர்ந்து போற மனசு, அதே வழக்கை 'மறுவிசாரணை'ன்னு ஒரு நீதிபதி தொட்டுட்டா, அந்த நீதிபதியோட முந்தைய தீர்ப்புகளை பட்டியல் போட்டு புலம்புது; ஆக, குற்றமுள்ள நெஞ்சு மட்டுமில்ல... நிரபராதியோட நெஞ்சும் குறுகுறுக்கும்!
* 'செல்வங்கள் சேர்த்தாலும், பெற்ற பிள்ளைகள் சாதனைகள் படைத்தாலும் தன்னிறைவு பெறாத ஆசிரியர்கள், தங்கள் மாணவர்கள் உயரும்போது மகிழ்ச்சி அடைவர்'னு ஆசிரியர்களை வாழ்த்துற அமைச்சர் மகேஷ், 'தமிழக பள்ளி மாணவியர் அனைவருக்கும் பள்ளிகளில் பாதுகாப்பு இருக்கிறது'ன்னு உத்தரவாதமா சொல்ல முடியுமா?
* 'சனாதனம் என்ற சொல்லை வைத்து பெண் இனத்தை அடிமைப்படுத்த நினைக்கின்றனர்; இதற்கு எதிராகத்தான் உதயநிதி பேசினார்'னு முதல்வர் விளக்கம் தந்ததுக்கு பதிலா, 'தி.மு.க.,வோட 'உடன்பிறப்பே...'ங்கிற முழக்கத்துக்கு அர்த்தம் தர்ற மாதிரி, 'கனிமொழியே கழகத்தின் அடுத்த தலைவர்'னு சொல்லியிருந்தா சுலபமா புரிஞ்சிருக்கும்!
ஏங்க... நான் அழகா யோசிக்கிறேனா!