எல்லாப் பூக்களும் எனக்கே ! மதுனிகா ராணி (25) - ( தொடர்கதை )
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2010
00:00

முன்கதைச் சுருக்கம்!
காடு சம்பந்தமாக ஆவணப்படம் எடுக்க சத்தியமங்கலம் காட்டுக்குச் செல்லும்போது,
நேசிகாவின் தங்கைகளான செண்பாவும், நீலக்கடலும், தாங்களும் உடன் வருவதாக பிடிவாதம் பிடித்தனர். அவர்களையும் அழைத்துக் கொண்டு, காட்டுக்குள் பயணமாயினர். இரண்டு கூடாரங்கள் அமைத்து, ஆண்கள், பெண்கள் எனத் தங்கினர். முதல்நாள், வீடியோகிராபரான அகராதி, காட்டிலுள்ள புழு, பூச்சி, பூ, பழம், காய் என, பலவற்றை படம் பிடித்தாள்; பியூலா சமையல் வேலையை எடுத்துக் கொண்டாள் —


ஷூ ட்டிங் தொடர்ந்து நடக்க ஆரம் பித்தது. வந்த மூன்றாவது நாள், செயற்கை கோள் தொலைபேசி அழைத்தது. ஒலிவாங்கியை எடுத்து காதில் இணைத்தான் யாத்ரா.
""ஹலோ யாத்ரா, நான் நேசிகா!''
""ஹாய் நேசிகா!''
""நல்லவேளை எந்த நேசிகான்னு கேட்பன்னு நினைச்சேன்,'' தொடர்ந்து அழ ஆரம்பித்தாள்.
""எதுக்கு அழற?''
""என் துரதிருஷ்டத்தை நினைச்சு அழறேன்... வாழ்க்கைல உன்னை ஏன் சந்திச்சேன்னு அழறேன்!''
""இப்போ என்ன நடந்து போச்சுன்னு அழற?''
""தெரியாதவன் மாதிரி கேக்காதே. ரொம்ப யோக்கியமானவன்னு பேசுவ. நீ செஞ்சிருக்ற காரியம் சரியா?''
""அப்படி என்ன தப்பு செஞ்சேன்?''
""நீ காட்டுக்கு அகராதியை கூட்டிட்டு போனது முதல் தப்பு. என் தம்பியும், பக்கத்து வீட்டுக்காரியும் மூட்டையை கட்டிக்கிட்டு  வந்தாங்கன்னா, அவங்களை திருப்பி அனுப்பாம, கூட்டிட்டு போயிருக்க பாரு... அது ரெண்டாவது தப்பு. ஆவணப்படம் எடுக்க போனியா... காட்டுக்குள்ளே ஜல்சா பண்ண போனியா? இடதுகைக்கு அகராதி; வலதுகைக்கு நீலக்கடலா?''
""ஆபாசமா பேசாதே... அகராதி வீடியோகிராபரா வந்திருக்கா. கடலும், "பேபேயும்' அழையா விருந்தாளிகள். பொம்பிளைகளை கூட சமாளிச்சிடலாம் போலிருக்கு... மொட்டை பையனை சமாளிக்க முடியல!''
பதறினாள் நேசிகா... ""அய்யய்யோ... என்ன பண்றான்.... என்ன பண்றான்?''
""சொல்ல வாய் கூசுது!''
""புனுகுப்பூனை, கூண்டு கம்பியை முன்னும், பின்னும் உலாத்தி உரசுறமாதிரி உரசுறானா? எருமைமாடுகள் சேத்ல முங்கி கிடக்ற மாதிரி, உன் மடில கிடக்றானா? கழுதை குட்டிச்சுவரை தேய்தேய்ன்னு தேய்க்குமே அப்படி தேய்க்கிறானா? தேவாங்கு மரக்கிளையை பிடிச்சு தொங்குற மாதிரி தொங்குறானா?''
""அதைவிட மோசமா... உப்புமூட்டை தூக்க சொல்றான். ராத்திரில  என் மேல கால் போட்டு தான் தூங்கறான். போன பிறவில மொகட்டை பூச்சியா பிறந்திருப்பான் போல, உடம்பு முழுக்க ஊர்றான். மூஞ்சூறு மாதிரி பரபரக் கிறான்!''
""சண்டாளப் பையன்... சதிகாரப் பையன்... ஊர் பிடாரியை விரட்ட வந்திருக்கும் ஒண்டவந்த பிடாரி... உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைக் றவன்... நமக்கறாம்... பத்மாஷ்... சோர்...''
""யாரை திட்ற?''
""ஊமைப்பய செண்பகராமனை!''
""இன்னொன்னு சொல்ல மறந்திட்டேனே...''
""அதென்ன?''
""ஊர்ல வெறும் பேபேதான சொல்லுவான். இங்க சப்ளிமென்ட்டாயா ஏராளமான வார்த்தைகள் மிழற்றுறான். உப்புமூட்டைன்னா உய்யா உய்யான்றான்; கட்டிபிடிச்சிக் கன்றதை கக்கக்ன்றான்.''
""நீலக்கடல் என்ன பண்றா?''
""அவளுக்கு ஆசைகள் இருக்கும் அளவுக்கு சங்கோஜமும், பயமும் அதிகம். இருந்தாலும், அவளும் எதாவது பண்ணிக்கிட்டுதான் இருக்கா!''
""புளங்காங்கிதமா சொல்ற... அகராதி என்ன பண்றா?''
""நா அளவோட வெறும் பிரண்டா இருந்தா போதும்ன்றா!''
""பியூலான்ற கால் கேர்ளை கூட்டி போனீங்களே... அவ என்ன பண்றா...'' ஆபாசமாக தொடர்ந்து பேசினாள் நேசி.
""கடவுளுக்கு நன்றி சொல்லு. அவளுக்கு என்னை பிடிக்கல. என்ன... மொதல் இருந்த வெறுப்பு இப்ப அவகிட்ட இல்ல. அபூர்வராகங்கள் ஸ்ரீவித்யா மாதிரி, சொல்லத்தான் நினைக்கிறேன் ஜெயசுதா மாதிரி லுக் விடுறா!''
மீண்டும் அழ ஆரம்பித்தாள் நேசிகா. ""எல்லாருக்கும் மச்சம் உடம்புல ஒன்றிரண்டு இருக்கும்... ஆனா, உடம்பே மச்சமாயிருக்கு உனக்கு.  ஒண்ணுக்கு நாலா வச்சு கூத்தடிக்ற!''
""நீ கணக்குல வீக்... ஒண்ணுக்கு மூணா வச்சுன்னு சொல்லு. அகராதி, கடல், பியூலா மூணுதானே?''
""நாலாவும் கணக்கு வச்சிக்கலாம்!''
""தப்பு!''
""இது சரியில்லை... இது சரியே இல்லை. இன்னைக்கி பேசி ஒரு முடிவுக்கு வந்திடலாம்!''
""என்ன முடிவு?''
""நீ என்ன காதலிக்கிறியா... இல்லையா?''
""இந்த கேள்விக்கு இப்ப பதில் சொல்ல  முடியாது!''
""சொதப்பாதே... சில நேரம் ஆமான்ற, சில நேரம் இல்லைன்ற. இப்படி ஆத்ல ஒருகால், சேத்ல ஒருகால் வைக்காதே. ஏக் மார் தோ துக்கடான்னு முடிவுக்கு வா. "நேசி... உன்னை நான் காதலிக்கலே!'ன்னு சொல்லு... என் வழில போய்ட்டிருப்பேன். "ஆமா நேசி... உன்னை காதலிக்கிறேன்!'னு சொல்லு... உரிமையா உன்னை சுத்தி நிக்ற பன்னாடைகளை  ஓட்டி விடுறேன்.''
""இன்னும் இருபது நாள் டைம் குடு... பதில் சொல்றேன்!''
""அதுக்குள்ள முடிஞ்ச அளவுக்கு பொண்ணுங்களை ஓட்டிக்கிறேன்றியா?''
""அந்த மாதிரியானவனா நான்? உன்னால் காதலிக்கப் படுகிற நான் எப்படி ஸ்திரீலோலனா இருக்க முடியும்? பெத்த அம்மாவுக்கு  தெரியாதா மகனைப் பற்றி? நேசிக்கு தெரியாதா யாத்ராவை பத்தி?''
""உன் பேச்சுத்திறமை  இந்த நானிலத்தில் யாருக்கடா வரும்? இருபது நாள் காத்து  தொலைக்கிறேன். கல்யாணத்துக்கு பிறகு பாரு... ஒண்ணொன்னுக்கும் நீ வேற வேற மாதிரி பைன் கட்ட வேண்டிவரும்.
""பழுக்க காய்ச்சிய தங்க கம்பியா நீளுது, உன் கோபக்குரல். ஆலங்கட்டி மழை போல் அடிக்குது உன் படபடக்கும் குரல். என் பொருளை யாராரோ திருடிட்டு போறாங்க... பிடிங்க, பிடிங்க பிடிச்சு வையுங்க. வந்து அவங்களை கும்முகும்முன்னு கும்முறேன்னுது உன் உரிமைக்குரல். தூரம் உன்னையும், என்னையும் பிரிக்குதுடா... றெக்கை இருந்தா பறந்துவந்து உன் மடிசேருவேனடா என்கிறது, உன் ஏக்கக்குரல். வாலிபம் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து எடுக்கப்பட்ட ஐஸ்கட்டி போல் கரைகிறது... முடிவை  தாமதம் படுத்துகிறானே என்கிறது உன் தாபக்குரல்!''
""கோபம், படபடப்பு, உரிமை, ஏக்கம், தாபம் புரிந்துமா காலதாமதம் கண்ணாளா?''
""நேசிகா... என் சித்தி உன்னை மிரட்டினது எனக்கு தெரியும். அந்த எபிசோடுக்கு பிறகு அவள் உன்னை தொடர்பு கொண்டாளா?''
""இல்லை. ஆனா, தினம் வெறுப்பு எஸ்.எம்.எஸ்.,கள் நூறு அனுப்புகிறாள். அவ நடவடிக்கை எனக்கு மகிழ்ச்சியே...''
""எப்படி?''
""உனக்கு நூறு தோழிகள் இருக்க, என்னை உன் காதலி என அவ அங்கீகரிச் சிட்டாள்ல...''
""அற்ப சந்தோஷம் இது!''
""நீயும், நானும் போனில் பேசுகிறோம். நம் பக்கத்தில் யாருமில்லை. ஏதாவது குடுக்க விரும்புகிறாயா யாத்ரா?''
""செலவுக்கு பணமா? இங்கு வங்கி வசதி கிடையாது நேசி!''
""பணமா கேட்டேன்!''
""உன் மொபைலுக்கு ஈசி ரீசார்ஜ் பண்ணனுமா?''
""வாழைமட்டை... போன் வழியா ரெண்டு உம்மா குடுய்யா!''
""ம்ஹூம்... தப்பு, தப்பு!''
""ஏன்?''
""புரொபஷன் பீரியட்ல இன்கிரிமென்ட் கிடையாது!''
""நீ கண்டிப்பான எம்ப்ளாயர். சரி விடு, நான் குடுக்கறேன்... இச் இச் இச் இச்!''
""நிறுத்து நிறுத்து. ரிசீவர் வழியா எச்சில் ஊத்துது!''
""காதலி எச்சில் மாசா, ஸ்லைஸ் மாதிரி... குடி!''
""போனை வைடியம்மா. என் மூடை கெடுத்திராத. பை!''
வைத்தான் யாத்ரா. கடந்த அரைமணி நேரமாய் நேசி, யாத்ரா பேசுவதை காதார கேட்டு விட்டாள் பியூலா.
பக்கத்தில் வந்தாள்... ""இவ்வளவு பெரிய காதல் மன்னனா நீ? உன் ஸ்கோரிங் அதிவேகம் என்னை பிரமிப்பூட்டுகிறது. உன்னை கொஞ்சமாய் எனக்கு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது!''
""ஹூ கேர்ள் அண்ட் ஹூ நீட்ஸ்?''
""நேத்து ராத்திரி ஆசை என்கிட்ட வந்தான். "எனக்காகத் தானே உன்னை கூட்டி வந்தேன்.  பக்கத்தில் வர மாட்டேன் என்கிறாயே...' என்றான். "பக்கத்துல வரணுமா... யாத்ரா மாதிரி தாடி வளர்...' என்றேன். "அன்னைக்கி தாடி சோம்பேறித்தனம்ன்னு சொன்னியே...'ன்னான். "நேத்து இருந்த மாதிரியா சென்செக்ஸ் இன்னைக்கு இருக்கு! நேத்து இருந்த மாதிரியா இன்னைக்கு அரசியல்வாதிகள் இருக்காங்க...'ன்னேன்!''
""அப்படியா?''
""இன்னைக்கு அதிகாலைல நீர்வீழ்ச்சிக்கு பக்கதுல இருக்ற நீர் தேக்கதுல குளிச்சிட்டு இருந்தேன். நீ தூரத்திலிருந்து ஆழ்நீச்சல் பண்ணிக்கிட்டே வந்து, எனக்கு பக்கத்துல நீரின் மேல்மட்டம் வந்தாய். யாரும் இல்லைன்ற தைரியத்துல நான் கொஞ்சம் ப்ரீயா குளிச்சிட்டு இருந்தேன். அண்ணாமலைல ரஜினிகாந்த், குஷ்புவை பாக்ற மாதிரி, என்னை நீ தொடர்ச்சியா ரெண்டு நாள்ல, ரெண்டு தடவை  பாத்துட்ட. தெரியாம நடந்ததா; திட்டமிட்டு நடந்ததா?''
""காக்கை உக்கார பனம்பழம் விழுந்த கதை!''
""நீ காக்கா... நான் பனம் பழமா? சரி. பாத்தவரைக்கும் என்ன நினைக்கிற?''
""இப்படி பேசக் கூடாது பியூலா, இனி நீ இருக்கும் பக்கம் கனவிலும் வர மாட்டேன்... போதுமா?''
""நீ என்னை பாத்து உணர்ச்சி வசப்படல?''
""சில நொடிகள் என் மனதை உன் உடல் ஜெயித்தது உண்மை. கிரேக்க சிற்பம் போல கிரேட்டஸ்ட் அனாட்டமி உனக்கு. வாழ்க்கைல தெளிவான குறிக்கோளாட போய்ட்டிருக்ற என்னை சலனப்படுத்தாதே!''
""பாலியல் தொழிலாளி என்பதால் நீ என்னை மோசமா எடை போடுற!''
""இல்லை!''
""இனி அந்த தொழிலை செய்ய மாட்டேன். என்னுடன் நட்பா இரு.''
""செய்துவந்த தொழிலை விட்டுவிட்டு, தெருவில் நிற்க போகிறாயா?''
""நண்பன் நீ என்னை கை தூக்கி விட மாட்டாயா? நேரான வழி  ஒன்றை காட்டிவிட மாட்டாயா? இதுவரை ஆண்கள் தான் திருவோடுகளை தூக்கி வந்து பிச்சை கேட்டு இருக்கின்றனர். வாழ்வில் முதல்முறையாக, கடைசி முறையாக நான் திருவோட்டை தூக்கி வந்து பிச்சை கேக்கிறேன். உன் நட்பை யாசகமிடு!''
""நீ என்னை பாத்து  எழுபத்திரெண்டு மணி நேரமாகிறது. காரணமின்றி வெறுப்பை உமிழ்ந்த நீ, இப்ப காரணமின்றி அன்பை கொட்டுற. திஸ் இஸ் நாட் பேர்.''
""எழுபத்திரெண்டு மணி நேரத்தில் நீ என்னை ரெண்டாயிரம், மூவாயிரம் தடவை நெகடிவ்வாகவும், பாசிட்டிவ்வாகவும் பாதித்தாய். என்னுடன் நீ நட்பு பாராட்டவில்லை என்றால், உன்னைக் கொன்று, இங்கேயே புதைத்து விடுவேன். கொலையும் செய்வாள் பத்தினின்னு கேள்விப்பட்டிருப்ப... நட்புக்காக கொலை செய்வாள் பாலியல் தொழிலாளின்னு நான் சொல்றேன்!''
""நீ ஒரு வாக்குறுதி கொடுத்தாய் என்றால், நாம் நண்பர்களாகலாம்!''
""என்ன?''
""உன் உடம்பின் மீது எனக்கு நாட்டம் வந்துவிடாமல் கவனமாய் நடந்து கொள். தவறான சந்தர்ப்பங்கள் அமைந்து விடாமல் கண்கொத்திப் பாம்பாய் இரு!''
""சரி!''
""இனி, நீ என் தோழி!''
கை குலுக்க கை நீட்டினாள்.
""வேண்டாம்மா. பிசிக்கல் டச்சே வேண்டாம்மா. சாலை போக்குவரத்தில் இரு வாகனங்களுக்கிடையே பத்தடி ஆரோக்கிய இடைவெளி இருப்பது போல, நமக்கிடையேயும் இடைவெளி இருக்கட்டும்!''
நள்ளிரவு, யாத்ராவின் மீது கால் போட்டிருந்தாள் செ.கு.வா.மொழி. ஏதோ மெத்மெத் என்று பட, விழித்தான். தூக்கத்தில் கொடுவாய் ஓடிய வாயால் ஒரிஜினல் பெண் குரலில் உளறிக் கொட்டினாள்.


  — தொடர்ந்து பூக்கும்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X