டவுண்லோட் ஆகும் பைல் என்ன வகை?
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஆக
2011
00:00

நாம் பல பைல்களை இணைய தளங்களிலிருந்து அடிக்கடி டவுண்லோட் செய்கிறோம். இந்த பைல்கள் பி.டி.எப்., ஸிப் ஆர்க்கிவ், வேர்ட் என ஏதோ ஒரு பார்மட்டில் இருக்கலாம். பல வேளைகளில் டவுண்லோட் செய்த பின்னர் தான், இந்த பார்மட் பைல் என்றால், இதனை டவுண்லோட் செய்தி டாமல் இருந்திருக் கலாமே என்று எண்ணு கிறோம். ஏனென்றால், அதனைத் திறந்து பார்ப்பதற்கான புரோகிராம் இல்லாமல் இருக்கலாம். அல்லது நாம் மேற்கொண்டு திட்டமிடும் வேலைக்கு அது உகந்ததாக இருக்கலாம். எடுத்துக்காட்டாக, சில பகுதியை காப்பி செய்து இணைக்க எண்ணுகையில், அது பி.டி.எப். பைலாக இருந்தால் உதவாது. எனவே, லிங்க் கிளிக் செய்து அதனை டவுண்லோட் செய்திடும் முன்னர் அந்த பைல் குறித்து ஒரு அலர்ட் மெசேஜ் வந்தால் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.
இந்த எதிர்பார்ப்பினை ஈடு செய்திட, மொஸில்லா பயர்பாக்ஸ் பிரவுசர் ஆட்-ஆன் புரோகிராம் ஒன்றைக் கொண்டுள்ளது. இதனைப் பெற்று இன்ஸ்டால் செய்து விட்டால், வெப்சைட்டில் லிங்க் அருகே கர்சரைக் கொண்டு செல்லும்போதே, அது பைலின் எக்ஸ்டென்ஷனுக்கேற்ப தன் வடிவை மாற்றுகிறது. இதன் மூலம் பைல் வகை என்னவென்று அறிந்து கொண்டு, அந்த பைல் வேண்டுமா என முடிவு செய்து, அதற்கேற்ப செயல்படலாம். இதனைப் பெற கீழ்க்குறித்தவாறு செயல்படவும்.
1. Tools கிளிக் செய்து Add Ons தேர்ந்தெடுக்கவும்.
2. இங்கு Add Ons டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் “Get Addons” என்னும் பட்டனைக் கிளிக் செய்திடவும்.
3. அங்கு உள்ள சர்ச் கட்டத்தில் link alert என டைப் செய்து பின் மேக்னிபை கிளாஸ் பிரஸ் செய்திடவும்.
4. உடன் Link Alert எக்ஸ்டென்ஷன் காட்டப்படும். அதில் கிடைக்கும் “Add to Firefox” என்னும் பட்டனில் கிளிக் செய்திடவும்.
5. உடன் “Software Installation” என்னும் டயலாக் பாக்ஸ் தோன்றும். அதில் “Install Now” என்னும் பட்டன் கிடைத்தவுடன் கிளிக் செய்திடவும்.
6. இந்த ஆட்-ஆன் புரோகிராம் இன்ஸ்டால் செய்தவுடன் “Restart Firefox” என்னும் பட்டனைக் கிளிக் செய்க. நீங்கள் ஏற்கனவே அதனை செட் செய்த படி பயர்பாக்ஸ் உங்கள் விண்டோஸ் மற்றும் டேப்களை ரீஸ்டார்ட் செய்ய வேண்டியதை உணர்ந்திடும். இப்பொழுது, உங்கள் கர்சரை ஏற்கனவே குறிக்கப்பட்ட பைல் வகை மீது கொண்டு சென்றால், லிங்க் அலர்ட் அந்த கர்சரை அந்த பைல் வகை குறித்து உங்களுக்கு எச்சரிக்கை செய்தி கொடுக்கும் வகையில் மாற்றிக் காட்டும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ponparithi - chengalpet,இந்தியா
21-ஆக-201115:22:59 IST Report Abuse
Ponparithi I am am 3rd year engineering student., i cant buy books for my studies.. I use google books to read., but i need to download google books.. How can i download it free pls help m
Rate this:
Share this comment
Cancel
Ponparithi - chengalpet,இந்தியா
21-ஆக-201115:19:03 IST Report Abuse
Ponparithi I want colourfull cursors to use in win xp..where can i download cursors for free .. Pls tell m d website address..,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X