கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஆக
2011
00:00

கேள்வி: ஹப் என்று எந்த சாதனம் அல்லது போர்டைச் சொல்கிறோம். இது குறித்து நீங்கள் எழுதுவதே இல்லை. விளக்கவும்.
-சா. உலகநாதன், தேனி.
பதில்: ஹப் என்பது கம்ப்யூட்டருடன் பயன்படுத்தக் கூடிய ஒரு மின்னணு துணை சாதனம். கீ போர்டு, மவுஸ், டிஜிட்டல் கேமரா, பிரிண்டர் போன்ற சாதனங்களை இதன் மூலம் கம்ப்யூட்டருடன் இணைக் கலாம். இந்த ஹப்பினை, கம்ப்யூட்டரில் உள்ள யு.எஸ்.பி. போர்ட்டில் இணைத்து விட்டு, பின்னர், ஹப்பில் உள்ள போர்ட்களில், மேலே குறிப்பிட்ட சாதனங்களை இணைக்கலாம்.

கேள்வி: பிரசன்டேஷன் ஸ்லைட் ஒன்றில் எத்தனை புல்லட் பாய்ண்ட்களை வைத்துக் கொள்ளலாம்? ஏதேனும் வரையறை உண்டா?
-கி.வேணி குமார், கோவை.
பதில்: இது பிரசன்டேஷன். எனவே உங்கள் டேஸ்ட்டைப் பொறுத்து, காட்சி யில் டெக்ஸ்ட் தெரிவதைப் பொறுத்து, எவ்வளவு குறைவாக வைத்துக் கொள்கி றோமோ, அவ்வளவு வைத்துக் கொளவது நல்லது. இதற்கு வரையறை எல்லாம் இல்லை.

கேள்வி: இதுவரை இன்டர்நெட் எக்ஸ் புளோரர் பயன் படுத்தி வருகிறேன். பயர் பாக்ஸ் 5 இன்ஸ்டால் செய்தேன். எக்ஸ்புளோரரில் உள்ள பேவரிட்ஸ் களை எப்படி தானாக, பயர்பாக்ஸ் பிரவுசருக்குக் கொண்டு வரலாம்?
-டி.என். சேஷாத்ரி, மதுரை.
பதில்: பயர்பாக்ஸ் பிரவுசரைத் திறந்து கொள்ளுங்கள். File மெனு திறந்து கிடைக்கும் மெனுவில், Import என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது Import Wizard என்னும் டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் Import Settings and Data என்று ஒரு பிரிவு காட்டப்படும். இங்கு உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பிரவுசர்கள் காட்டப்படும். கட்டாயம் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் இதில் கிடைக்கும். இதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து Next பட்டன் அழுத்த, Select which Item to import என்ற விண்டோ கிடைக்கும். இங்கு இன்டர்நெட் ஆப்ஷன்ஸ், குக்கீஸ், பிரவுசிங் ஹிஸ்டரி, பேவரிட்ஸ் என்ற பிரிவுகள் இருக்கும். எவற்றை எல்லாம், பயர்பாக்ஸ் பிரவுசருக்கு மாற்ற வேண்டுமோ, அவற்றை தேர்ந்தெடுத்து, நெக்ஸ்ட் பட்டனைத் தேர்ந்தெடுக்கவும். அனைத்தும் பயர்பாக்ஸ் பிரவுசருக்குத் தானாக மாற்றப்படும். இவை இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரிலும் இருக்கும். அதனையும் பயன்படுத்தலாம்.

கேள்வி: ஹார்ட் டிஸ்க் எவ்வளவு சிறிய அளவில் இருக்கும்?
-எஸ்.கே.மஹாதேவன், விழுப்புரம்.
பதில்: மிகச் சிறிய ஹார்ட் டிஸ்க் தயாரிப்பதில், தோஷிபா இப்போதைக்கு பெயர் பெற்றுள்ளது. இது தயாரித்த ஹார்ட் டிஸ்க்கின் அளவு 0.85 அங்குலம். இதில் கிகா பைட் அளவில் தகவல்களைப் பதிய முடியும்.

கேள்வி: அனிமேஷன் சாப்ட்வேர் பிளாஷ் எத்தனை ஆண்டுகளாகப் புழக்கத்தில் உள்ளது?
-எஸ். சுப்பிரமணி, மதுரை.
பதில்: 1996 ஆம் ஆண்டு முதல் பிளாஷ் அனிமேஷன் சாப்ட்வேர் புழக்கத்தில் உள்ளது. வந்த புதிதில், இணைய உலகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அடோப் நிறுவனம், ரகசியமாக, இதனைத் தயாரித்த நிறுவனத்திடமிருந்து வாங்கி தனதாக்கிக் கொண்டு, தொடர்ந்து பல முன்னேற்றங்களைத் தந்து வருகிறது.

கேள்வி: எக்ஸெல் ஒர்க்ஷீட் ஒன்றை பிரிண்ட் செய்கையில், இறுதியில் காலி பக்கங்கள் எட்டுக்கு மேல் கிடைக்கின்றன. எப்படி எப்படியோ செய்து பார்த்துவிட்டோம். தவறு எங்கே என்று தெரியவில்லை. என்ன செய்திடலாம்?
-கே.குணசேகரன், திண்டுக்கல்.
பதில்:பைல், பிரிண்ட் ஏரியா செல்லவும். இந்த மெனுவில், கிளியர் பிரிண்ட் ஏரியா என்பதில் கிளிக் செய்து, பிரிண்ட் பிரிவியூ பார்க்கவும். மீண்டும் காலி பக்கங்கள் இருப்பது தெரிய வந்தால், பின்னால் உள்ள பக்கங்களில் ஏதோ ஒரு செல்லில் சிறிய டேட்டா இருக்க வேண்டும். எக்ஸெல் தொகுப்பினைப் பொறுத்தவரை, ஸ்பேஸ் ஒன்று ஒரு செல்லில் இருந்தாலும், இவ்வாறு காலி பக்கங்கள் அச்சாகும். இந்நிலையில், உங்களுக்கு எந்த செல்களெல்லாம் பிரிண்ட் எடுக்க வேண்டுமோ, அந்த செல் களை மட்டும் தேர்ந்தெடுத்து, அவற்றை மட்டும் பிரிண்ட் செய்திடுமாறு கட்டளை வழங்கலாம்.

கேள்வி: இதுவரை எம்.எஸ். ஆபீஸ் 2003 பயன்படுத்தி வந்தேன். தற்போது ஆபீஸ் 2010 இன்ஸ்டால் செய்துள்ளேன். இதில் என் பழைய 2003 நார்மல் டெம்ப்ளேட் அமைப்பினைக் கொண்டு வர என்ன செய்ய வேண்டும்?
-ஆர். மைக்கேல் பொன்னுதுரை, தாம்பரம்.
பதில்: வேர்ட் புரோகிராமினை மூடவும். வேர்ட் 2003 தொகுப்பின் டெம்ப்ளேட் போல்டர் சென்று, Normal.Dot என்ற பைலைக் காப்பி செய்திடவும். இதனை வேர்ட் 2010 புரோகிராமில், டெம்ப்ளேட் போல்டரில் காப்பி செய்திடவும். இந்த போல்டரில் Normal.Dotm என்ற பைல் இருக்கும். அதனை அழித்துவிடவும். அல்லது வேறு ஒரு டைரக்டரியில் வைத்துவிடவும். பின் நாளில் தேவைப் பட்டால், எடுத்துப் பயன்படுத்தலாம்.

கேள்வி: எங்கள் நிறுவன எக்ஸெல் ஒர்க்ஷீட்களில் அதிகமான அளவில் இன்டர்நெட் தள முகவரிகளை அமைக்கிறோம். இவற்றை ஸ்பெல் செக்கர் தானாக சோதனை செய்து தவறு எனக் காட்டுகிறது. இதனை எப்படி தடுக்கலாம்?
-சி.சரவணன், சென்னை.
பதில்: எக்ஸெல் தொகுப்பின் ஸ்பெல் செக்கருக்கு, இது போன்ற இன்டர்நெட் சார்ந்த சொற்களில் எழுத்துப் பிழை காணாதே என்று செட் செய்திடலாம். எக்ஸெல் திறந்து, Tools மெனுவிலிருந்து, Options என்பதைத் தேர்ந்தெடுக் கவும். இப்போது எக்ஸெல் Options டயலாக் பாக்ஸைக் காட்டும். இந்த டயலாக் பாக்ஸில் Spelling என்ற டேப்பைத் தேர்ந்தெடுக்கவேண்டும். இப்போது Ignore Internet and File Addresses என்ற வரியின் முன் உள்ள செக்பாக்ஸில் டிக் அடையாளத்தினை அமைக்கவும். பின்னர் ஓகே கிளிக் செய்து அமைக்கவும். இனி, நீங்கள் டைப் செய்திடும் இன்டர்நெட் முகவரி, எழுத்துப் பிழை சோதனைக்கு உள்ளாகாது.

கேள்வி: என் அலுவலகத்தில் நாங்கள் உருவாக்கும் எக்ஸெல் ஒர்க்ஷீட்கள் மிகவும் பெரியதாக இருக்கிறது. ஒரே நேரத்தில், இரண்டு வெவ்வேறு இடங்களில் செயல்பட வேண்டி யுள்ளது. இது நேரத்தை இழுக்கிறது. இதற்கு சுருக்கு வழி உள்ளதா?
-திருமதி ரூபி சரோஜா, திருப்பூர்.
பதில்: ஒரே நேரத்தில், ஒர்க்புக் ஒன்றின் இரு வேறு இடங்களில் பணியாற்ற, இரண்டு விண்டோக்களைத் திறப்பது எளிதான வழி. ஒர்க்ஷீட் இயங்கும் விண்டோ மேலாக உள்ள மெனுவில், Window என்று இருப்பதில் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் New Window என்பதில் கிளிக் செய்தால், இன்னொரு விண்டோ திறக்கப்பட்டு, இதே ஒர்க்ஷீட் காட்டப்படும். இப்போது இந்த விண்டோக்களில், அதே பைலின் பெயர் காட்டப்படும். அத்துடன் அந்தப் பெயரின் அருகிலேயே Book1:1 மற்றும் Book1:2 என்று இருப்பதைக் காணலாம். டாஸ்க் பாரிலும் இதே போல் காட்டப்படும். இந்த இரண்டு விண்டோக்களும், ஒரே ஒர்க்புக்கில், இரண்டு வெவ்வேறு இடங்களில் பணியாற்றும் வசதியை அளிக்கின்றன. இன்னொன்றையும் இங்கு கூற விரும்புகிறேன். எந்த விண்டோவில், ஒர்க்புக்கில் எந்த இடத்தில் மாற்றங்களை மேற்கொண்டாலும், அது இரண்டு ஒர்க்புக்குகளிலும் மேற்கொள்ளப்படும்.

கேள்வி: இரண்டு நாட்களுக்கு முன்னர், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 ஐ, டவுண்லோட் செய்து பயன்படுத்தத் தொடங்கினேன். இது எனக்குச் சரியாக வரவில்லை. மீண்டும் பதிப்பு 8 ஐ கம்ப்யூட்டரில் கொண்டு வருவது எப்படி?
-சீ. ராணி மங்கை, திண்டுக்கல்.
பதில்: உங்களுக்கு இன்டர்நெட் எக்ஸ் புளோரர் 9 பிடிக்கவில்லை என்றால், 8க்கு மாறுவது எளிதுதான். முதலில் கம்ப்யூட்டரில் இயங்கும் அனைத்து புரோகிராம் களையும் நிறுத்தவும். Start பட்டன் அழுத்தி, Control Panel செல்லவும். இதில் Programs and Features என்று இருப்பதில் கிளிக் செய்திடவும். இதில் புரோகிராம்ஸ் பிரிவில் Uninstall a Program என்பதில் கிளிக் செய்க. அடுத்து வின்டோவின் இடது புறம் உள்ள பிரிவில் View Installed Updates என்ற லிங்க் இருக்கும். இதில் கிளிக் செய்திடவும். இப்போது வலது பக்கம் அப்டேட் பட்டியலில் விண்டோஸ் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 கிடைக்கும். இதில் ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில், Uninstall என்பதில் கிளிக் செய்திடவும். இனி வரிசையாக உங்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு ஆப்ஷன் பெறப்படும் அனைத்திற்கும் பதில் அளித்த பின்னர், முழுமையாக இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 நீக்கப் படும். இப்போது மீண்டும் விண்டோஸ் சிஸ்டத்தினை ரீ ஸ்டார்ட் செய்திடவும்.
இனி இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8 ஐகான் மீது கிளிக் செய்து இயக்கவும். ஐகான் இல்லை என்றால், Start. All Programs எனச் சென்று, கிடைக்கும் பட்டியல் மெனுவில், இன்டர்நெட் எக்ஸ்புளோரரை இயக்கவும். இதில் About என்பதில் கிளிக் செய்தால், பதிப்பு என்ன என்று காட்டப்படும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X