குற்றாலம், குளுகுளு சீசனை அனுபவிக்க எல்லாருக்கும் கொள்ளை ஆசைதான்! அதற்கு வாய்ப்பு ஏற்படுத்தி தரப் போகிறது தினமலர் - வாரமலர்! கடந்த 20 வருடங்களில் 21 முறை, வாசகக் குடும்பங்களை குற்றாலம் அழைத்துச் சென்று கவுரவித்ததை அறிந்திருப்பீர்கள்! இப்போது 22வது முறையாக அடுத்த வாய்ப்பு!
நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் இதுதான்: உங்களது பெயர், வயது, ஆணா, பெண்ணா, கல்வித் தகுதி, பணிபுரிபவரா, அப்படி என்றால் என்ன பணி, திருமணம் ஆனவரா, ஆகாதவரா, குழந்தைகள் எத்தனை, குழந்தைகளின் வயது விபரம் போன்றவற்றுடன் உங்கள் முழு முகவரியையும் தொலைபேசி எண் உட்பட, எழுதி, இங்கு வெளியாகியுள்ள கூப்பனை பயன்படுத்தி எங்களுக்கு அனுப்புங்கள். பிறகு, குற்றால கனவுகளில் மூழ்கி விடுங்கள்! குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் 15 வாசகர்கள், குற்றாலத்தில் மூன்று நாள் டேரா போடலாம். 15 வாசகர்களும் தலா ஒருவரை உடன் அழைத்து வரலாம். அவரவர் ஊரிலிருந்து புறப்படுவது முதல், திரும்ப செல்லுதல் வரை எல்லாம் வாரமலர் செலவு! ஜூலை 9ம் தேதிக்குள் கூப்பன் எமக்கு வந்து சேர வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், ஜூலை 20, 21, 22 ஆகிய மூன்று நாட்கள், குளு குளு குற்றாலத்தை அனுபவிக்கலாம்! ................
குற்றால சாரலை அனுபவிக்கப் போகும் வாசகர்களின் விபரங்கள் ஜூலை 11ம் தேதி, தினமலர் நாளிதழில் வெளியாகும்!