பளிச் பரிகாரம் | கல்கி | Kalki | tamil weekly supplements
பளிச் பரிகாரம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

17 ஆக
2011
00:00

எனது மகன்.ஜி.பிரபாகரன் ஜாதகம் அனுப்பியுள்ளேன். எப்பொழுது திருமணம் நடக்கும்? பெண் சொந்தத்திலா? அசலா? பிறந்ததேதி: 3.12.1980. இரவு 9:25. - கோவிந்தசாமி செம்பராம்பட்டு.

தங்கள் மகனுக்கு சித்திரை நட்சத்திரம் துலாம் ராசி, கர வருடம், பங்குனி மாதத்துக்குள் திருமணம் நடந்துவிடும். பெண் சொந்தத்தில் இல்ø. திருவாதிரை, புனர்பூசம், பூரம், விசாகம், அனுஷம், பூராடம், திருவோணம் பூரட்டாதி (கும்பம்) ஆகிய எட்டு நட்சத்திரங்கள் மட்டுமே இவருக்குப் பொருந்தும். இந்த எட்டு நட்சத்திரத்தில் உள்ள பெண் எந்தத்திசையில் இருந்தாலும் பார்க்கலாம்.தடைகள் நீங்குவதற்கு என்ன பரிகாரம்? எனது தொழில் மீண்டும் சிறப்பாக நடைபெற என்ன செய்ய வேண்டும்? சி.கே. ராமசுப்பன், சென்னை.
கேது தசை உங்கள் தொழிலை முடக்கி விட்டது. விநாயகரை வழிபட்டால் தடைகள் விலகும். முருகனுக்கு அறுபடை வீடுகள் உள்ளது. போல் விநாயகருக்கும் அறுபடை வீடு என்னும் முக்கிய ஆறு தலங்கள் உண்டு. திருவண்ணாமலை, விருத்தாசலம், திருக்கடவூர், திருச்சி, பிள்ளையார்பட்டி, திருநாரையூர் ஆகிய ஆறும் கணபதியின் அறுபடை வீடுகள். திருவண்ணாமலையில் வெளிபிரகாரத்தில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் சம்பந்த விநாயகர், செந்தூரம் அணிந்திருப்பார் தலவிருட்சமான மகிழ மரத்துக்கு அருகில் இந்த விநாயகள் சன்னதி உள்ளது. அறுபடை வீடுகளில் இவரே முதல் விநாயகர் இரண்டாவது விருசலத்தில் உள்ள பள்ளத்து விநாயகர், மூன்றாவதாக திருக்கடவூர் கள்ளவாரணப் பிள்ளையார், நான்காவது திருச்சி உச்சி பிள்ளையார். ஐந்தாவது பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் ஆறாவதாக திருநாரை பொல்லாப் பிள்ளையார், ஆகிய அறுபடை பிள்ளையார்களை வணங்கி விட்டு வாருங்கள். தடைகள் நீங்கிவிடும். கேது தசையையும் மீறி நன்மைகள் நடக்க விநாயகரின் அறுபடை வீடு தரிசனம் சிறந்த பரிகாரம்.ஒருவரின் ஜாதகத்தில் சுக்கரன் எட்டாமிடத்தில் இருந்தால் திருமண வாழ்க்கை பாதிக்குமா?. நளினி ராம்குமார், சென்னை-20.
பாதிக்காது.மகிச்சிகரமாக அமையும். பொதுவாக 3,6,8,12 ஆகிய வீடுகள் மறைவு ஸ்தானம் எனப்படும். ஆனால் சுக்கிரனுக்கு மட்டும் ஒரு சிறப்ப விதிவிலக்கு உண்டு. 8,12, ஆகிய வீடுகளில் சுக்கிரன் இருந்தால் இல்லறம் இனிக்கும்.திருமணப் பொருத்தம் பார்க்கும்போது முக்கியமான பொருத்தங்கள் எவை?. வி.ஜி.ப்ரகாஷ், கோவை.
ரஜ்ஜுப் பொருத்தமும், யோனிப் பொருத்தம் அவசியம், அனைவருக்கும் இருக்க வேண்டும். பெண்ணின் ராசியிலிருந்து 6வது 8வது ராசியாக ஆணின் ராசி ராசி இருக்கக் கூடாது. ரஜ்ஜு, யோனி, உட்பட ஆறு பொருத்தங்காளவது இருக்க வேண்டும். பெண் ராசியும், ஆண் ராசியும் 7க்கு 7 ஆக இருத்தல் நல்லது, பத்து பொருத்தம் அமைவது மிகவும் அரிது, ரேவதி நட்சத்திரப் பெண்ணுக்கு உத்திராடம், மகர ராசி ஆண் ஜாதிகம் 10 பொருத்தம் உண்டு. ஹஸ்த நட்சத்திப் பெண்ணுக்கு புனர்பூசம், மிதுன ராசி ஆணின் ஜாதகம் பத்து பொருத்தம் உண்டு. இதைத் தவிர வேறு எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் 10 பொருத்தம் வராது. இதைத் தவிர தோஷங்கள் சம அளவில் உள்ளவர என பார்க்க வேண்டும், திருமண வாழ்க்கையில் பிரச்னை ஏற்படும் பலருக்கு செவ்வாயும், சூரியனும் 12 கட்டங்களில் ஏதேனும் ஓர் இடத்தில் சேர்ந்திருக்கும், சந்திரனும், கேதுவும் ஒன்றாக இணைந்திருந்தாலும் மண வாழ்க்கை சோபிக்காது , ஏழாம் இடத்தில் சந்திரன் அல்லது சுக்கிரன் இருந்தாலும் களத்திர தோஷம் ஏற்படும், செவ்வாயும், சூரியனும் ஜாதகத்தில் ஒன்றாக இருந்தால் தம்பியரிடையே பிரிவு ஏற்பட வாய்ப்புண்டு. குரு பார்த்தால் சண்டை போட்டுக்கொண்டு பிரிய மாட்டார்கள். ஆனால் தொழில் நிமித்தமாக சில வருடங்கள் வெளியூரில் தனித்து வாழ நேரிடும்.
-ஹரிகேச நல்லூர் வெங்கட்ராமன்.Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X