கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

22 ஆக
2011
00:00

கேள்வி: ஜிமெயிலில் டெலிகேஷன் என்பது குறித்து தகவல் தந்திருக்கிறீர்கள். இதனை எப்படி அமைப்பது?
-ஜி. ஸ்வாமிராஜ், கோவை.
பதில்:இன்னொருவருக்கு உங்கள் இமெயில் பயன்பாட்டின் அனுமதியை வழங்கும் வசதியே இது. ஜிமெயில் அண்மைக் காலத்தில் தந்திருக்கும் ஓர் பயனுள்ள வசதி இது. உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டைத் திறக்கவும். அதில் வலது மூலையில் மேலாக உள்ள கியர் ஐகானில் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் Mail Settings என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து Accounts and Import என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர், கீழாக ஸ்குரோல் செய்து வரவும். அப்போது Grant Access to your account என்று இருக்கும் பிரிவில் நிறுத்தவும். இங்கு Add another account என்று இருப்பதில் கிளிக் செய்திடவும். நீங்கள் யாருக்கு உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டினைத் திறக்க அனுமதி அளிக்க விரும்புகிறீர்களோ, அவரின் மின்னஞ்சல் முகவரியினைத் தரவும். அடுத்து Next Step என்பதில் கிளிக் செய்திடவும். உங்கள் முடிவினை உறுதிப்படுத்த Send email to grant access என்பதில் கிளிக் செய்திடவும். நீங்கள் தரும் மின்னஞ்சல் முகவரிக்கு, இந்த அனுமதி தரும் உரிமைகள் குறித்த ஒரு அஞ்சல் அனுப்பப்படும். இதனை அவர் ஏற்கலாம்; அல்லது மறுக்கலாம். அவர் ஒத்துக் கொள்ளும் பட்சத்தில், அவரின் ஜிமெயில் அக்கவுண்ட்டில், அவரின் பெயருக்கு அருகே ஒரு புதிய அம்புக் குறி ஒன்று காட்டப்படும். இந்த மெனுவில் Switch Account என்பதனை அவர் தேர்ந்தெடுத்து உங்களுக்கான அக்கவுண்ட் அஞ்சல்களைப் பார்க்கலாம். ஆனால் அவர் உங்கள் மெயில் செட்டிங்ஸை மாற்ற முடியாது. நீங்கள் கொடுத்த அனுமதியினை மீண்டும் உங்கள் மெயில் செட்டிங்ஸ் சென்று நீக்கலாம். இதே போல பத்து பேருக்கு இந்த அனுமதியினை நீங்கள் வழங்கலாம்.

கேள்வி: விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் உள்ளது போல, விண்டோஸ் 7 சிஸ்டத்தில் ஸ்டிக்கி கீகள் பிரிவு உள்ளதா? அதனை எப்படிப் பெறுவது?
-என். அமர்நாத், மதுரை.
பதில்: விண்டோஸ் 7 சிஸ்டமும் ஸ்டிக்கி கீ வசதியைத் தருகிறது. இதனைப் பெற ஸ்டார்ட் அழுத்திக் கிடைக்கும் கட்டத்தில் Sticky keys என டைப் செய்து என்டர் அழுத்தவும். இப்போது மேலாக உள்ள Change how your keyboard works என்ற பகுதியை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய திருக்கும். இதனைத் தேர்ந்தெடுத்தவுடன், உங்கள் கீ போர்டினை மாற்றி அமைக்கப் பலவிதமான ஆப்ஷன்கள் தரப்பட்டிருப்பதனைப் பார்க்கலாம். இவற்றில் Turn on Sticky keys என்று இருப்பதன் எதிரே டிக் அடையாளம் ஒன்றை ஏற்படுத்திப் பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். அல்லது Set up Sticky keys என்பதில் கிளிக் செய்து, இங்கு உங்கள் விருப்பம் போல ஸ்டிக்கி கீகளைப் பெற செட்டிங்ஸ் அமைக்கலாம். எடுத்துக்காட்டாக, ஷிப்ட் கீயை ஐந்து முறை தொடர்ந்து அழுத்தினால், ஸ்டிக்கி கீ பயன்பாட்டிற்கு வரும்படி செய்திடலாம்; மாற்றப்பட்ட கீகள் இயங்குகையில், சிறிய அளவிலான ஒலி கேட்கும் வகையில் அமைக்கலாம். ஸ்டிக்கி கீகள் இயங்கும்போது, அவற்றிற்கான ஐகான் டாஸ்க் பாரில் தோன்றும்படி அமைக்கலாம்.

கேள்வி: எக்ஸெல் ஒர்க்ஷீட் அமைக்கையில், பார்முலாவிற்கான கமெண்ட் அமைப்பது எப்படி?
-சி. ஜீவா மேரி, புதுச்சேரி
பதில்: எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் பார்முலா வினை அமைத்துவிட்டு, அதன் முடிவில் + அடையாளம் ஒன்றை ஏற்படுத்தவும். அடுத்து N என்று டைப் செய்து பின் அடைப்புக் குறிக்குள் தேவைப்படும் செய்தியை டைப் செய்திடவும். எடுத்துக்காட்டாக பார்முலாவுடன் கமெண்ட் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
=CurrentAssets / CurrentLiabilities+ N(“The formula returns Current Ratio”)

கேள்வி: கால்குலேட்டர் சம்பந்தமாக புரோகிராம் ஒன்றை டவுண்லோட் செய்து பயன்படுத்தினேன். பின்னர் அதனை போல்டரில் இருந்த பைல் அனைத்தையும் அழித்து நீக்கிவிட்டேன். ஆனாலும், இன்னும் புரோகிராம் பட்டியலில் அதன் பெயர் உள்ளது. ஏன்?
-கா. முத்துப் பாண்டி, உசிலம்பட்டி.
பதில்: ஒரு புரோகிராமினை நீக்க நீங்கள் பின்பற்றிய வழி தவறான வழி. அந்த புரோகிராமிலேயே அன் இன்ஸ்டால் (Uninstall) என்னும் வசதி தரப்பட்டி ருந்தால், அதனைக் கிளிக் செய்து நீக்கியிருக்க வேண்டும். அல்லது கண்ட்ரோல் பேனல் சென்று, ஆட் ஆர் ரிமூவ் (Add or Remove) பிரிவில், புரோகிராமினைக் கண்டுபிடித்து அங்கு ரிமூவ் என்பதில் கிளிக் செய்து நீக்க வேண்டும். அல்லது ட்வீக் யு.ஐ. (Tweak UI) மற்றும் சிகிளீனர் (CCleaner) போன்ற புரோகிராம்களை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திருந்தால், இவற்றை இயக்கி நீக்க வேண்டும்.

கேள்வி: இணையத்தில் உலா வருகையில் ஜாவா ஸ்கிரிப்ட் குறித்து சில பிழைச் செய்திகள் கிடைக்கின்றன. இது எதனைக் குறிக்கிறது. ஏன் இந்த பிழைச் செய்திகள் வருகின்றன?
-சா. மீனா ஷண்முகநாதன், மதுரை.
பதில்: இணையப் பக்கங்களை நாம் காண இந்த தொழில் நுட்பம் பயன்படுகிறது. இதில் குறியீட்டு முறை ஒன்றை உருவாக்கி, அப்படியே இணையப் பக்கங்களில் பதித்து விடலாம். பிரவுசர், இணையப் பக்கத்திற்கான குறியீடுகளைப் படித்து, அதனை நமக்குக் காட்டும்போது, ஜாவா ஸ்கிரிப்டையும் படித்து அதற்கேற்ப செயல்படும். பொதுவாக, புதிய பிரவுசர் விண்டோக்களைத் திறப்பதற்கும், விண்டோஸுக்குள்ளாக தகவல்களை மாற்றுவதற்கும், படங்களைக் கையாள்வது போன்ற செயல்பாடுகளுக்கு இது பயன் படுகிறது. இவற்றால் ஒரு கம்ப்யூட்டரில் உள்ள பைல்களைப் படிக்கவோ அல்லது எழுதவோ முடியாது.
இன்னொரு பாதுகாப்பான விஷயம் என்னவென்றால் இது “Same Origin Policy” என்ற கொள்கை அடிப்படையில் செயல் படுகிறது. அதாவது ஓர் இணைய தளத்திலிருந்து டவுண்லோட் செய்யப்பட்ட ஜாவா ஸ்கிரிப்ட் கோட் மற்ற இணைய தளங்கள் திறக்கப்பட்ட விண்டோக்களில் செயல்பட முடியாது. பொதுவாக ஜாவா ஸ்கிரிப்ட் என்பது பாதுகாப்பானதே. இருப்பினும் பிரவுசரில் உள்ள பிழைகள் ஜாவாஸ்கிரிப்ட்டுக்குள்ள வரையறைகளைத் தகர்த்து பாதுகாப்பில் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.

கேள்வி: எக்ஸெல் ஒர்க்ஷீட்டில், எனக்கு ரூபாய் மதிப்பின் முன் Rs. எனக் கிடைக்க வேண்டும். இதற்கு எந்த விண்டோவில் சென்று செட் செய்திட வேண்டும்?
-சி. பாஸ்கரதாஸ், கல்லுப்பட்டி.
பதில்: முதலில் இதனை அமைக்க வேண்டிய ஒர்க் ஷீட்டினைத் திறந்து கொள்ளுங்கள். பின் Format கிளிக் செய்து அதில் Cells என்ற பிரிவைத் திறந்து கொள்ளுங்கள். பின் கிடைக்கும் Format Cells என்ற விண்டோவில் Category கட்டத்தில் Currency என்பதைத் தேர்ந்தெடுத்தால் அதன் வலது புறம் பல்வேறு கரன்சி வடிவங்கள் தரப்படும். அதில் Rs Urudu என இருக்கும்; அதனைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி அந்த செல்லில் எண்களுக்கு முன் Rs இருக்கும்.

கேள்வி: எதுவுமே வேலை செய்யாத நிலையில், கம்ப்யூட்டரின் சி.பி.யு. இயங்கிக் கொண்டிருக்குமா? இயங்கினால், அதனை எப்படித் தெரிந்து கொள்வது?
-கா. தியாகராஜன், திருப்பூர்.
பதில்: கம்ப்யூட்டரை ஸ்விட்ச் ஆன் செய்தது முதல், மீண்டும் அணைக்கும் வரை, இயங்கிக் கொண்டேதான் இருக்கும். சி.பி.யு. கம்ப்யூட்டரின் மூளை அல்லவா? எனவே இயக்கம் நிற்காது. உங்கள் ஆணையை எதிர்பார்த்து இருப்பதும் ஓர் இயக்கம் தானே. நீங்கள் வேலை செய்திடா விட்டாலும், ஆண்ட்டி வைரஸ், பயர்வால் ஆகியவை சி.பி.யு. மூலம் வேலை செய்து கொண்டுதானே இருக்கும். இனி உங்கள் அடுத்த கேள்விக்கு வருவோம். இதனை எப்படி அறிந்து கொள்வது?
டாஸ்க் மேனேஜர் (Task Manager) என்ற விண்டோவில் உங்கள் கேள்விக்கான பதில் கிடைக்கும். இதனை கண்ட்ரோல் + ஆல்ட் + டெல் (Ctrl + Alt + Del) கீகளை அழுத்திப் பெறலாம். இதில் CPU Usage என்று உள்ள இடத்தில் சிபியூ பயன்பாடு எத்தனை சதவிகிதம் உள்ளது என்று தெரியும். தொடர்ந்து இது மாறிக் கொண்டே இருக்கும். இதிலுள்ள மற்ற டேபுகளையும் அழுத்தி அவை என்ன காட்டுகின்றன என்று தெரிந்து கொள்ளுங்கள்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அஹம்மத் - madurai,இந்தியா
28-ஆக-201112:02:08 IST Report Abuse
அஹம்மத் அனைத்து கருத்துகளும் நன்மை தரகூடிய செய்திகளாக இருக்கின்றன . இருபினும் ,வறுமை ஒழிய ஆங்காங்கே இருக்கும் மனநலம் பாதிக்க பட்டவர்களை மனநலம் மருத்துவமனையில் சேர்க்கபடவேண்டும். அதற்கு கலெக்டர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X