பகவானை காண வேண்டுமா?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஆக
2011
00:00

மனம் அலையக் கூடியது; ஒன்றிலேயே பற்றி இருப்பதில்லை. இப்படிப்பட்ட மனதை ஒருநிலைப்படுத்தி, பக்தி மூலம் பகவானை காணலாம். பூவின் பக்கம் வந்தால் தான் அதன் மணத்தை அறிய முடியும்; தூரத்தில் இருப்பவர்களுக்கு அதன் மணம் தெரியாது.
அதே போல, இறைவன் எங்கும் நிறைந்துள்ளான் என்றாலும், பகவானை மறந்து, சம்சார சாகரத்தில் உழல்பவர்களால் அவனை அறிந்து கொள்ள முடிவதில்லை. அஞ்ஞானிக்கு பரமாத்மா பிரபஞ்சமாக தெரிகிறது; ஞானிக்கு பிரபஞ்சம் முழுவதுமே பரமாத்மாவாக தெரிகிறது. ஞானியின் மனம் சஞ்சலமற்று நிற்பதால், அதில் பரமாத்மா சொரூபம் தெரிகிறது.
முகம் பார்க்கும் கண்ணாடி மேடு, பள்ளமின்றி சுத்தமாக இருந்தால் தான், கண்ணாடியில் முகம் நன்றாக தெரியும்; இல்லையேல், முகம் கோணலாகவும், மங்கலாகவும் தெரியும். இது முகத்தின் குறைபாடல்ல; கண்ணாடியில் உள்ள குறைபாடு. அதுபோல் மனம் நிர்மலமாக இருந்தால், இறைவனை காண முடியும்.
சிவவாக்கியர் என்ற சித்தர், "கண்ணை மூடினால் பகவான் தெரிகிறார்...' என்றார். "அதெப்படி? நாங்கள் கண்ணை மூடினால், ஒரே இருட்டாகத் தானே தெரிகிறது. உங்களுக்கு மட்டும் எப்படி பகவான் தெரிகிறார்?' என்று கேட்டாராம் ஒருவர். அதற்கு அவர், "நான் எத்தனை ஜென்மாக்களில், எத்தனை ஆலயங்களை சுற்றி, சுற்றி வந்திருப்பேன்.
எத்தனை முறை பகவான் நாமாவை சொல்லி, சொல்லி வழிபட்டிருப்பேன்... அந்த புண்ணியம் இந்த ஜென்மாவில் கண்ணை மூடினால், பகவான் தெரிகிறார்...' என்றாராம்.
அதனால், மனம் பகவானிடம் லயித்து விட்டால் பிறகு எதுவுமே தெரியாது; எதுவுமே தேவையிராது. சதா காலமும் பகவானை தங்கள் இதயத்தில் காண்பதால், பிற விஷயங்களை கவனிப்பதில்லை யோகிகள்.இந்த உலகம் தான் உயர்ந்தது; இதை விட உயர்ந்தது வேறு ஒன்றுமில்லை என்று எண்ணி, பகவானிடம் பற்று வைக்காதவன் திரும்ப, திரும்ப பிறவி எடுக்கிறான்; திரும்ப, திரும்ப மரணமடைகிறான். இந்திரியங்களுக்கு வசப்பட்டவன், பிறவிப் பெருங்கடலில் விழுந்து உழல்கிறான். இந்த நிலையை விட்டொழிக்க வேண்டும்.
***

ஆன்மிக வினா-விடை!
வெள்ளெருக்கு விநாயகரை தனியாக வைத்து பூஜிக்கலாமா?
பூஜிக்கலாம்... முடிந்தால் தினம் அல்லது வெள்ளிக்கிழமைதோறும் மலர் சார்த்தி வழிபடலாம்.
***

வைரம் ராஜகோபால்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D LAKSHMINARASIMHAN - NAVIMUMBAI,இந்தியா
03-செப்-201116:02:33 IST Report Abuse
D LAKSHMINARASIMHAN Good message. Due to day to day chores one could not concentrate on GOD.
Rate this:
Cancel
சுரேஷ் குமார் - கோயம்புத்தூர்,இந்தியா
29-ஆக-201120:25:57 IST Report Abuse
சுரேஷ் குமார் பகவான் வேறு எங்கும் இல்லை, நம்முள்ளே இருக்கிறார், அவரை காண்பதற்கு நம் மனமே நுழைவாயில், அதில் இறைவனை நினைத்து போற்றுவோம், மனம் ஒன்றிய பிரார்த்தனையே இறைவனை காணும் ஒரே வழி, என்று நம் "மனதில் இருக்க வேண்டியவன் இறைவன்" என்று சிறப்பு செய்த ஆசிரியருக்கு நன்றி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X