பட்டாம்பூச்சிகளின் கதை! (13) | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
பட்டாம்பூச்சிகளின் கதை! (13)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

28 ஆக
2011
00:00

என் இனிய வாசகச் சொந்தங்களே... எங்கள் ஊருக்குப் பக்கத்தில் உள்ள கிராமத்தில் நடந்த சம்பவம் இது; என் மனதை மிகவும் பாதித்த சம்பவம்.
அந்த அழகிய கிராமத்தில், அக்கா, தங்கை இருவர். தங்கச்சியின் பெயர் தரணி - பெயர் மாற்றியுள்ளேன்; பிஞ்சிலேயே பழுத்த பழம். சின்ன வயசிலேயே, ரொம்ப பெரிய மனுஷி மாதிரி பேசுவாள்.
கண்டிக்காத பெற்றோர், அவள் பேசுவதை மிகவும் பெருமையாக நினைத்தனர். எங்களுக்கு எரிச்சலாக வரும். அந்த பொண்ணை கண்டாலே பிடிக்காது.
அக்காவுக்கு முதலில் திருமணம் நடந்தது. அப்பவே அந்த பொண்ணு வெட்கமில்லாமல், "எனக்கும் சீக்கிரமா கல்யாணம் செய்திடுவாங்க. கால காலத்துல கல்யாணம் பண்ணி, புள்ளகுட்டிய பெத்துகிட்டா நல்லது தானே... எங்கம்மா திடமா இருக்கும் போதே குழந்தை பெத்துகிட்டா, அவங்களே வளர்த்து கொடுத்துடுவாங்க... நாம கஷ்டப்படவேண்டாம். புருஷன் கூட ஜாலியா ஊர் சுத்தலாம்...' என்பாள்.
"என்னடா இந்த சின்ன வயசிலேயே இப்படி அருவருப்பாக பேசுதே...' என்று பெற்றோரிடம் இதை பற்றி சொன்னால், "எங்க பொண்ணு சின்ன வயசிலேயே ரொம்ப வௌரமா இருக்கா...' என்பர்; அப்படி ஒரு அலம்பல்.
"இவளோட அலம்பல் எல்லாம் எத்தனை நாளைக்கு? ஒரு குழந்தை பிறந்தவுடன் அடங்கிடுவா பாருடா...' என, கிராமத்து இளவட்டங்கள் எல்லாம் கிண்டல் செய்வர்.
திருமணம் முடிந்து அம்மா வீட்டுக்கு அக்கா வரும் போதெல்லாம் அக்கா புருஷன், தரணி, அக்கா மூவரும் ஊர் சுற்றுவர். ரொம்ப பெருமையாக மாமாவின் மீது இழைத்தபடியே நடத்து செல்லும் தரணியை பார்க்க, பார்க்க எங்க ஊர் இளைஞர்களுக்கு பத்திக்கிட்டு தான் வரும்.
ஒரு நாள் —
அக்கா வீட்டுக்கு சென்றாள் தரணி. அங்கே அக்காவும், மாமாவும் தனிக்குடித்தனம் இருந்தனர். "புதுசா கல்யாணம் செய்த ஜோடிகள் இருக்கும் வீட்டுக்கு, இளைய மகளை அனுப்பாதே...' என ஊரார், உறவினர் அனைவரும் கூறினர்; ஆனால், பெற்றோர் கேட்கவில்லை.
அக்கா வீட்டுக்கு போனாள் தரணி. புது மணத் தம்பதிகளின் அந்நியோன்யத்தைப் பார்த்து இவளுக்கு ரொம்ப, "ஜொள்' தாங்கல. அவர்களது பேச்சு, சிணுங்கல், கொஞ்சல்ஸ் எல்லாம், தரணிக்கு, திருமண ஆசையை உண்டாக்கி விட்டது.
அவர்களும், "தங்கை வந்திருக்கிறாளே...' என்று நாசூக்காக நடந்து கொள்ளவில்லை.
இப்போதெல்லாம் வெளிநாட்டினரைப் போன்று, "டார்லிங்... செல்லம்...' என்று எல்லாருக்கும் முன்பாக கொஞ்சி, கட்டிப்பிடித்து, "கிஸ்' பண்ணுவதை நாகரிகம் என்று நினைக்கின்றனர் இந்த காலத்து இளசுகள். அதே, "ஸ்டைலில்' இருந்துள்ளனர் ஜோடிகள்; ஏங்கிப் போனாள் தரணி. அதற்கு ஏற்றார் போல் இவளுக்கும் விரைவில் திருமணம் கூடி வரவே, குஷியில் மிதந்தாள் தரணி. தோழிகளிடம் எல்லாம், எப்பவும், "செக்ஸ்' பற்றிய பேச்சு, "செக்ஸ் ஜோக்ஸ்' என இன்பக் கனவில் மூழ்கினாள்.
தரணிக்கு, திருமணம் வெகு சிறப்பாக நடந்தது. முதலிரவு எப்போ வரும் என ஏங்கி கிடந்தவளுக்கு, அந்த நேரம் நெருங்க, நெருங்க, "குஷி' தாங்க முடியவில்லை. "இன்னும் கொஞ்ச நேரத்தில் தன்னுடைய ஆசைகள் நிறைவேறப் போகிறது...' என்ற குஷியில் உள்ளே நுழைந்தாள்.
கொஞ்சமும் வெட்கமில்லாத இவளது நடவடிக்கை, கணவனை அதிர்ச்சிக்குள்ளாகியது. இவளது அதீத ஆர்வமும், அவசரமும் ஒத்துழைப்பும் கண்டு, மாப்பிள்ளை மிரண்டு போனார். கிராமத்து இளைஞராயிற்றே...
"சீ... சீ... நாயே... நீ என்ன இத்தனை செக்ஸ் வெறிப் பிடித்தவளா? இதுக்கு முன்னாடி எத்தனை பேரோட பழக்கம்... பொறுக்கி நாயே...' என்று திட்டியிருக்கிறார்.
"இல்லீங்க... நான் அது மாதிரி இல்ல... அக்கா வீட்டில் நடந்த சம்பவங்கள், என் மனதில் ஏற்படுத்திய சஞ்சலத்தால் வந்த விளைவு தான் இது; தயவு செய்து என்னை மன்னிச்சிடுங்க... எனக்கு அப்படிபட்ட பழக்கம் எல்லாம் இல்லை...' என்று சொல்லி, கதறி அழுது இருக்கிறாள்.
ஆனால், அவர் நம்பத் தயாராக இல்லை. உடனே, கதவை திறந்து வெளியே வந்து மாமனார், மாமியாரிடம், "எனக்கு இந்த செக்ஸ் வெறி கொண்ட பொண்ணு வேண்டாம்...' எனச் சொல்லி விட்டார்.
இரு குடும்பத்தினருக்கும் ஒரே தகராறு. இதைப் பற்றி விரிவாக பேச முடியாமல், இரு குடும்பமும் தவித்தது. மாப்பிள்ளை பிடிவாதமாக இருந்தார். விஷயம் அறிந்த ஊர்க்காரர்கள், "அது அப்படித்தான்... பிஞ்சிலேயே பழுத்தது...' என்று சொல்லி, உசுப்பி விடவே, "ரவுத்ரம்' ஆனார் மாப்பிள்ளை.
அவரை மாற்றவே முடியவில்லை.
கண்ணீரும், கம்பளையுமாக தாய் வீட்டில் இருந்தாள் தரணி.
இந்தச் செய்தி கிராமம் முழுவதும் கசிந்து, அவளது பெற்றோருக்கு பெருத்த தலைகுனிவை ஏற்படுத்தி விட்டது. வீட்டை விற்று விட்டு, தரணியை அழைத்துக் கொண்டு, வெளியூர் சென்று விட்டனர்...
எனக்கும் மிகவும் வேதனையை தந்தது இந்த நிகழ்ச்சி. இதுக்குத்தான் அந்தக் காலத்துல திருமணம் ஆன மூத்தவள் வீட்டுக்கு, இளைய பெண்ணை அனுப்ப மாட்டார்கள்.
அத்துடன் சின்ன வயதிலே குழந்தைகள் பெரிய மனுஷி மாதிரி பேசுவதை கண்டிக்கணும். மச்சான், மாமாக்களிடம் பழகும் போது, எல்லை மீறுவதை அம்மாக்கள் கண்டிக்கணும்.
இன்றைய சினிமாக்கள், சீரியல்கள் எல்லாம் பார்த்து, "செக்ஸ்' விஷயத்தில் அதிக ஆர்வமுடன் இருக்கும் இளசுகள், இப்படி வாழ்க்கையை வீணாக்கிக் கொள்வது மிகவும் வருத்தத்தை உண்டு பண்ணுகிறது. பெற்றோர் தங்கள் குழந்தைகள் மீது அதிக கவனம் செலுத்தி, அவர்களை நல்வழிப்படுத்த வேண்டியது மிக, மிக அவசியம்!
தொடரும்.

ஜெபராணி ஐசக்

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X