அன்புடன் அந்தரங்கம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஆக
2011
00:00

அன்புள்ள அம்மாவுக்கு —
எனக்கு வயது 20. நான் ஏழைக் குடும்பத்துப் பெண். எனக்கு ஒரு அக்கா; இரண்டு தங்கைகள் என, நாங்கள் நான்கு பேர். என் அக்காவை, அம்மாவின் தம்பி (தாய் மாமன்)க்கே திருமணம் செய்து வைத்தனர். அவளுக்கு, ஒரு குழந்தை பிறந்து, இரண்டாவதாக கர்ப்பமாக இருக்கும் சமயத்தில், அடுத்து, இவளுக்கு குழந்தை பிறந்து விட்டால், வீட்டு வேலை பார்ப்பதற்காகவும், உடல்நிலை சரியில்லாத என் அக்காவின் மாமியாரை கவனிப்பதற்காகவும் ஒரு பெண் வேண்டும் என்பதற்காக, என்னை அம்மாவின், இரண்டாவது தம்பி (தாய்மாமன்)க்கு வரதட்சனை எதுவும் வாங்காமல், என்னை மணம் செய்து வைத்தார் என் மாமியார். இப்போது, எல்லாரும் ஒரே கூட்டுக் குடும்பமாக வசிக்கிறோம். எனக்கு திருமணமாகி, இரண்டு வருடங்கள் ஆகின்றன. என் கணவர், யாரிடமும் அதிகம் பேச மாட்டார். என்னிடம் கூட. சாப்பாடு போட்டால், போடு, போதும் இப்படித்தான் இருக்கும் இவரது பதில்; அதிக கூச்ச சுபாவம் உள்ளவர்.
இபோது என் பிரச்னைக்கு வருகிறேன் அம்மா... என் கணவர், எந்தப் பெண்ணையும் ஏறெடுத்துக் கூடப் பார்க்க மாட்டார்; என்னையும் கூட. ஆம் அம்மா... என் கையைத் தொட்டுக் கூட பேசியதில்லை; என்னை எங்கும் அழைத்துச் சென்றதும் இல்லை. என் அம்மாவின் வீட்டிற்கு கூட. இது மட்டும் அல்ல, மணமானதிலிருந்து நான் விழித்திருக்கும் போது, என்னிடம் தாம்பத்யத்திற்கு முயற்சி செய்ததில்லை; தூங்கும் போது தான் முயற்சி செய்கிறார். அதுவும் நடக்காமல் திரும்பிப் படுத்து விடுகிறார். ஒரு சில நாட்கள், நானே வலிய போனாலும், என்னை தடுத்து விடுகிறார். என் மாமியார், என் கணவரிடம் கேட்டதற்கு, "நான் ஒன்றும் காரணமில்லை. அவள் தான் தடுத்து விடுகிறாள்; என்னை பாடாய் படுத்தி எடுக்கிறாள்...' என்று சொல்லி இருக்கிறார். இதுபோன்ற பல பிரச்னைகளுக்குப் பின், மருத்துவப் பரிசோதனைக்கு சென்றார். அங்கு, அவருக்கு ஆண்மை இல்லை என்று கூறி விட்டனர். சத்துள்ள உணவுகளை சாப்பிட்டால், இக்குறைபாடு நீங்கி விடும் என்றனராம். இப்போது, அவருக்கு எந்தெந்த உணவை சாப்பிட கொடுக்க வேண்டும் என்பதையும் மற்றும் அவர் என்னிடம் சகஜமாக பேசவும், பழகவும் அவரது கூச்சத்தையும், பயத்தையும் போக்கவும் நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு ஆலோசனை கூறுங்கள் அம்மா.
இப்படிக்கு,
உங்கள் மகள்.

அன்புள்ள மகளுக்கு —
உன் கணவனின் வயது, கல்வித் தகுதி, பணி பற்றி நீ குறிப்பிடவில்லை. ஒடிசலாக இருப்பாரா, சராசரி உடல்வாகுடன் இருப்பாரா? பருமனாக இருப்பாரா, அவருக்கு குடிப்பழக்கம் உண்டா? மிதமிஞ்சிய சுய இன்பம் கண்டு சோர்ந்து போனவரா? 6 - 19 வயதில் பெண்களால் பாதிக்கப்பட்டவரா? போன்ற தகவல்களும் உன் கடிதத்தில் இல்லை.
கூட்டுக் குடும்பத்தில் ஏகப்பட்ட பிளஸ் பாயின்ட்கள் இருந்தாலும், ஒரு சில மைனஸ் பாயின்ட்கள் உள்ளன. இளம் தம்பதியர் நினைத்த நேரத்தில், செக்ஸ் வைத்துக் கொள்ள முடியாது. எல்லாரும் தூங்கிய நள்ளிரவில் பதுங்கி, பதுங்கி எழுந்து, சப்தமில்லாமல் கோழி உறவுதான் வைத்துக் கொள்ள முடியும். இக்காரணமே கூட சில ஆண்களின் இயலாமைக்கு அடிப்படையாக இருக்கும். தாம்பத்யம் வைத்து கொள்வதை யாரும் இல்லா பகல் பொழுதுக்கு மாற்று.
உன் கணவர் திருமணமாவதற்கு முன், பத்து ஆண்டுகள் குடிப் பழக்கம் உள்ளவராக இருந்தால், அவருக்கு விந்தணு எண்ணிக்கை குறைவாகவும், விந்தணுவின் நகர்ச்சி திறன் குறைவாகவும் இருக்கும். குடிப் பழக்கத்தை மூன்றாண்டுகளுக்கு நிறுத்தி, மருத்துவர் எழுதி கொடுத்த மருந்துகளை சாப்பிட்டு வருவாரேயானால், அவரின் தாம்பத்ய திறன் அதிகமாகி, தாம்பத்யத்தில் ஈடுபட்டு, குழந்தையும் பிறக்கும்.
வீட்டு வேலைகளை கவனிக்க பணிப் பெண் அமர்த்தாமல், ஒரு பெண்ணை வரதட்சணை வாங்காமல் நமக்கு கட்டி வைத்து விட்டனரோ என்ற ஆங்காரம் கூட உன் கணவருக்கு இருக்கலாம்.
வீட்டு வேலைகளை செய்து, வியர்வை நாற்றத்துடன், அழுக்கு புடவையுடன், கலைந்த தலைகேசத்துடன் கணவரின் அருகில் வந்து படுக்காதே. தூங்கப் போவதற்கு முன் குளி. துவைத்த ஆடை மாற்றிக் கொள். பல் துலக்கு. அவரையும் குளித்து, துவைத்த ஆடை உடுத்தி பல் துலக்கச் சொல். முழு வயிறு சாப்பிடாமல், அரை வயிறு சாப்பிடுங்கள். இருவருக்கும் தாம்பத்ய மூடு வரும்.
விழித்திருக்கும் போது உன்னிடம் தாம்பத்யத்திற்குமுயற்சிக்காத உன் கணவர், நீ தூங்கும் போது முயற்சிக்கிறார் என்பதே மனக் குறைபாடுதான்; இதை, நீதான் பேசி, பேசி களைய வேண்டும்.
மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு ஆண்மை இல்லை என்றிருக்கிறாய். இதுபற்றி, ஓமியோபதி மருத்துவர் ஒருவரிடம் கேட்ட போது, அவர் உன் கணவருக்கு ஓமியோ சார்ந்த ஆலோசனையும், இரண்டு மாத உள் மருந்தும் அளித்தால் குணமாகி விடுவார் என்கிறார்.
உணர்வை தூண்டும் உணவு கேட்டிருந்தாய். தேனில் ஊறிய பேரீச்சம்பழத்தை சாப்பிடக் கொடுக்கலாம். உன் கணவருக்கு வைட்டமின் ஈ குறைபாடு இருக்கிறது. தினமும், முப்பது மில்லி கிராம் வைட்டமின் ஈ கொடுக்கலாம். முட்டை, மீன், ஈரல், சிக்கன், ஓட்ஸ், சோயா பீன்ஸ், பாதாம், உருளைக்கிழங்கு, மக்காச்சோள எண்ணெய் குறைபாடு நீக்கும் உணவுகளாகும்.
நீயும், உன் கணவரும் சினிமா, மினி சுற்றுலா, இரவு வாக்கிங், ஷாப்பிங், ஓட்டல் செல்லலாம்.
நீ, உன் கணவரிடம் என்ன குறை கண்டாலும், அதை வெளியில், அடுத்தவரிடம் சொல்லிக் கொடுத்து, இழிவு படுத்த மாட்டாய் என்ற நம்பிக்கையை உன் கணவனுக்கு ஏற்படுத்து. உலகிலேயே நம்பகமான பெண்ணாக, ரகசிய தோழியாக கணவனின் மன, உடல் பிரச்னைகளை தீர்க்கும் தாதியாக மாறு. ஆண்மைக் குறைவு என்பது, 99 சதவீதம் மனம் சம்பந்தப்பட்டது. அனுசரணையான மனைவி, ஆயிரம் மருந்துக்கு சமம்.
உன் கணவன், தன் முயற்சிகளில் தோற்கும் போது, சில மணி நேரம் இடைவெளி விட்டு மீண்டும் முயற்சிக்கச் சொல். வீட்டுச் சுவர்களில் குழந்தைகள், "புளோ-அப்'களை மாட்டு. பக்கத்து வீட்டு குழந்தைகளை கொண்டு வந்து, உன் கணவரிடம் கொடுத்து கொஞ்ச விடு.
என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (26)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sanakkiyan - உல்உபா,ஈராக்
03-செப்-201119:40:14 IST Report Abuse
sanakkiyan என்னங்க சொல்றது எல்லாம் உன் கீழ் தான உள்ளது
Rate this:
Share this comment
Cancel
பாஜ்ளுர்ரகுமான் - துபாய்,இந்தியா
03-செப்-201111:39:51 IST Report Abuse
பாஜ்ளுர்ரகுமான் கணவனின் மானம் மரியாதையை கருதி பெண்ணாகிய நீ அக உறவை யாரிடமும் சொல்லாமல் உன்னை நீயா தியாகம் செய்துகொண்டுல்லவா இருக்கிறாய். அந்த உன் நன்மையான செயலுக்கு பெண்ணை உனக்கு சலாம்
Rate this:
Share this comment
Cancel
கண்ணன் - chennai,இந்தியா
03-செப்-201100:08:09 IST Report Abuse
கண்ணன் ஹலோ சகுந்தலா மேடம் சும்மா எல்லாம் தெரிஞ்ச மாதிரி "சுய இன்பம்" தப்புன்னு சொன்னா டென்ஷன் ஆயிரும் ஆமா....தப்பான தகவலை மக்களிடம் தெரிவித்தால் சும்மா இருக்க மாட்டான் இந்த சூப்பர் ஹீரோ.... Please watch WIN TV daily at 11pm...Masturbation is good for health also it will accelerate sexual activity of human...person who is doing masturbation can satisfy his wife much better than those who aren't
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X