கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஆக
2011
00:00

கேள்வி: கூகுள் சர்ச் இஞ்சினில் கணக்குகளை எளிதாகப் போடலாம் என்றும், கால்குலேட்டர் போலப் பயன்படுத்தலாம் என்று என் நண்பர் கூறுகிறார். இது எப்படி சாத்தியம்?
-சி. குழந்தைவேல், திருப்பரங்குன்றம்.
பதில்: கணக்கு மட்டுமல்ல; தேடுதல் வேலையுடன் மற்ற பல வேலைகளையும், கூகுள் சர்ச் பக்கத்தில் மேற்கொள்ளலாம். அந்தக் கட்டத்தில் 46*7+23/2= என்று டைப் செய்து என்டர் தட்ட, இந்தக் கணக்கிற்கான விடை கிடைக்கும். வெவ்வேறு நாடுகளின் கரன்சி செலவாணி மதிப்பு கிடைக்கும். எடுத்துக்காட்டாக, 12 $ in Indian Rupees என்று டைப் செய்து என்டர் தட்டிப் பாருங்கள். இதே போல இன்னொரு நாட்டில் இந்நேரம் நேரம், தேதி என்ன என்று கேள்வி அமைத்துக் கேட்கலாம்.

கேள்வி: கால்குலேட்டர் சம்பந்தமாக புரோகிராம் ஒன்றை டவுண்லோட் செய்து பயன்படுத்தினேன். பின்னர் அதனை போல்டரில் இருந்த பைல் அனைத்தையும் அழித்து நீக்கிவிட்டேன். ஆனாலும், இன்னும் புரோகிராம் பட்டியலில் அதன் பெயர் உள்ளது. ஏன்?
-கா. முத்துப் பாண்டி, உசிலம்பட்டி.
பதில்: ஒரு புரோகிராமினை நீக்க நீங்கள் பின்பற்றிய வழி தவறான வழி. அந்த புரோகிராமிலேயே அன் இன்ஸ்டால் (Uninstall) என்னும் வசதி தரப்பட்டிருந்தால், அதனைக் கிளிக் செய்து நீக்கியிருக்க வேண்டும். அல்லது கண்ட்ரோல் பேனல் சென்று, ஆட் ஆர் ரிமூவ் (Add or Remove) பிரிவில், புரோகிராமினைக் கண்டுபிடித்து அங்கு ரிமூவ் என்பதில் கிளிக் செய்து நீக்க வேண்டும். அல்லது ட்வீக் யு.ஐ. (Tweak UI) மற்றும் சிகிளீனர் (CCleaner) போன்ற புரோகிராம்களை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திருந்தால், இவற்றை இயக்கி நீக்க வேண்டும்.
வேர்ட் 2007ல் ரிப்பனில் வியூ (View) டேப்பில் கிளிக் செய்திடவும். அதன்பின் விண்டோ குரூப்பில் ஸ்பிளிட் (Split) டூலில் கிளிக் செய்திடவும்.
நீங்கள் ஸ்பிளிட் கட்டளை கொடுத்தவுடன், நீளமான படுக்கைக் கோடு ஒன்று டாகுமெண்ட்டில் காட்டப்படும். இதனை மவுஸ் மூலம் நகர்த்தலாம். பின் கிளிக் செய்தால், எங்கு அந்த கோட்டினை வைத்தீர்களோ, அந்த இடத்தில் கோடு அமைக்கப்பட்டு, டாகுமெண்ட் பிரித்துக் காட்டப்படும்.
இந்த பிரிவு தேவையில்லை என்று முடிவு செய்தால், மீண்டும் அதே மெனுவில் சென்று நீக்கலாம்.

கேள்வி: விண்டோஸ் ஷட் டவுண் செய்திட மிகச் சுருக்க வழி ஒன்றைக் கூறவும். எக்ஸ்பி பயன்படுத்துகிறேன்.
-கே. சிவரஞ்சனி, கோவை.
பதில்: விண்டோஸ் கீயினை அழுத்துங்கள். பின்னர் கீயை இருமுறை அடுத்தடுத்து அழுத்துங்கள். ரீஸ்டார்ட், ஷட் டவுண்ட் ஹைபர்னேஷன் என்ற கட்டங்கள் உள்ள விண்டோ எல்லாம் காட்டப்படாமல், விண்டோஸ் ஷட் டவுண் செய்யப்படும். கவலையில்லாமல், டிவி பார்க்கச் சென்று விடலாம்.

கேள்வி: நான் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 பயன்படுத்தி வருகிறேன். ஒவ்வொரு முறையும், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொடங்கிய பின்னரே, பிரைவேட் மோட் என்ற தனி நபர் செயல் முறைக்குச் செல்ல முடிகிறது. இதனைத் தொடங் கும்போதே, பிரைவேட் மோடில் தொடங்கும்படி செய்திட முடியாதா?
-கா. மோகன்ராஜ், சென்னை.
பதில்: அருமையான கேள்வி. இதனை முயற்சித்துப் பார்க்கையில், மைக்ரோசாப்ட் தளம் சென்று பதிலைக் கண்டுபிடித்தேன். முதலில் இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கு ஷார்ட்கட் ஒன்று தயார் செய்திடவும். டெஸ்க் டாப்பில், காலியாக உள்ள இடத்தில், ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் New என்பதையும், பின்னர் Shortcut என்பதையும் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் விண்டோஸ் 7, எந்த வெர்ஷன் பயன்படுத்துகிறீர்கள் என்று எழுதவில்லை. எனவே, 32 பிட் வெர்ஷன் பயன்படுத்துபவராக இருந்தால், கீழே உள்ளதை அப்படியே டைப் செய்து, Path Boxல் போடவும். டைப் செய்திட வேண்டிய டெக்ஸ்ட் C:\program files\Internet explorer\explore.exe private.
நீங்கள் 64 பிட் விண்டோஸ் இயக்கம் பயன்படுத்துபவராக இருந்தால், C:\Program Files(86)\internet explorer\iexplore.exe private என டைப் செய்திடவும்.
இவற்றை PathBoxல் டைப் செய்த பின்னர், Next என்பதில் கிளிக் செய்து, நீங்கள் ஏற்படுத்தும் இந்த ஷார்ட்கட் கீக்கு ஒரு பெயர் கொடுத்து வெளியேறவும். இனி, இன்டர்நெட் எக்ஸ்புளோரர், நீங்கள் விரும்பியபடியே தொடங்கும்.
நீங்கள் இந்த டெக்ஸ்ட்டை இன்புட் செய்திடுகையில் எர்ரர் மெசேஜ் வந்தால், உங்கள் சிஸ்டம் வேறு பிட் வகையாக உள்ளதா எனச் சோதிக்கவும். அல்லது டெக்ஸ்ட் அமைப்பதில் பிரச்னை உள்ளதா என்று பார்க்கவும்.

கேள்வி: டிஜிட்டல் கேமராவில் எடுத்த படங்களை மாற்றுகையில், அவை அனைத்திற்குமாக, ஒரே ஸ்ட்ரோக்கில் பெயர்களை மாற்றி அமைக்கலாம் என்று அறிந்தேன். அதற்கான வழியைக் கூறவும்.
-இரா. தேன்கனி, விருதுநகர்.
பதில்: டிஜிட்டல் கேமராவிலிருந்து போட்டோக்களை, கம்ப்யூட்டர் போல்டரு க்கு மாற்றுகையில், DSC_0586 என்பது போன்ற பெயர்களில் வரிசையாக எண்களுடன் இருக்கும். இது போல மொத்த பைல்களையும், ஒரே முயற்சியில் அவற்றின் பெயர்களை மாற்றி அமைக்கலாம். எடுத்துக் காட்டாக, மாறன் என்பவரின் திருமண நிகழ்ச்சிகளை போட்டோ எடுத்து, அவற்றின் பெயர்களை அமைப்பதாக இருந்தால், அவை அனைத்தையும் முதலில் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். பின்னர், அதன் மீது ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Rename என்பதைத் தேர்ந்தெடுத்து Maran என்று கொடுக்கவும். இந்த போட்டோ பைல்கள் Maran(1), Maran(2), Maran(3) என அனைத்தும் பெயர் மாற்றம் செய்யப்படும்.

கேள்வி: விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு கம்ப்யூட்டரை மாற்றினேன். இதில் குயிக் லாஞ்ச் ஏரியா காட்டப்படவில்லை. இதனை இன்ஸ்டால் செய்திட என்ன செட்டிங்ஸ் மேற்கொள்ள வேண்டும்? அல்லது இந்த சிஸ்டத்தில் குயிக் லாஞ்ச் பார் கொடுக்கப்படவில்லையா?
-சி. முருகேசன், திண்டுக்கல்.
பதில்: புரோகிராம்களை மிக வேகமாக இயக்கத்திற்குக் கொண்டுவர, அவற்றின் ஐகான்களை வரிசையாக அமைத்துவைத்து, ஒரே கிளிக்கில் கொண்டு வர நமக்கு விண்டோஸ் தரும் இடமே குயிக் லாஞ்ச். இது விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும் உள்ளது. இதனை மீட்டுக் கொண்டு வர, கீழ்க்கண்டபடி செயல் படவும். டாஸ்க் பாரில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Toolbars>New toolbar என்று செல்லவும். அடுத்து “Folder:” என்று உள்ளதற்கு அருகே உள்ள டெக்ஸ்ட் பாக்ஸில் கீழே தரப்பட்டுள்ளதை, அப்படியே டைப் செய்திடவும்.
%userprofile%\AppData \Roaming\Microsoft\Internet Explorer\Quick Launch அடுத்து, “Select Folder” என்ற பட்டனை அழுத்தவும். இனி உங்கள் மானிட்டரில் காட்டப்படும் கடிகாரத்திற்கு அருகே கீழே காட்டப்பட்டுள்ளபடி காட்சி கிடைக்கும். இங்கே “Quick Launch” என்று உள்ளது. ஆனால், நாம் இதுவரை பார்த்த குயிக் லாஞ்ச் கட்டத்திற்கும் இதற்கும் வேறுபாடு உள்ளது, இல்லையா? இதனைச் சரி செய்திட, அதன் மீது ரைட் கிளிக் செய்திடவும். இப்போது கிடைக்கும் மெனுவில் உள்ள “Lock the taskbar” என்ற இடத்திற்கு முன் உள்ள டிக் அடையாளத்தினை எடுத்துவிடவும். இனி மீண்டும் குயிக் லாஞ்ச் என்பதில் ரைட் கிளிக் செய்து, “Show Text” மற்றும் “Show Title” என்பவற்றின் முன் உள்ள டிக் அடையாளங் களை எடுத்துவிடவும். அவ்வளவுதான். இனி நீங்கள் செய்ய வேண்டியது ஒரே வேலை தான். புள்ளிகளால் ஆன ஒரு கோடு அங்கே உள்ளது அல்லவா! அதில் மவுஸ் கர்சரை வைத்து இழுக்கவும். இப்போது மறைந்திருக் கும் சில ஐகான்கள் தெரியவரும்.
இனி மீண்டும் ஒரு முறை ரைட் கிளிக் செய்து “Lock the Taskbar” என்பதன் முன் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். இவ்வாறு நீங்கள் ஏற்படுத்திய குயிக் லாஞ்ச் பாரினை எப்போதாவது தேவை இல்லை என்று நீங்கள் எண்ணினால், டாஸ்க் பாரில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில், Quick Launch என்பதில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.

கேள்வி: ஜிமெயில் அக்கவுண்ட் வைத்துள்ளேன். இதில் மெசேஜ் டைப் செய்கையில், நான் விரும்பும் எழுத்துருவினை, மாறா நிலையில் வைத்துக் கொள்ள செட்டிங்ஸ் வசதி உள்ளதா? வழி காட்டவும்.
-டி. லாரா, மதுரை.
பதில்: பலர் மனதில் ஆதங்கமாக உள்ள கேள்வியினைக் கேட்டதற்கு மிக்க நன்றி, லாரா.
கூகுள், ஜிமெயிலில் தரும் எழுத்துரு உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், மாறா நிலையில் உங்களுக்குப் பிடித்த எழுத்துருவினை வைத்துக் கொள்ளலாம். அதற்கான செட்டிங்ஸ் வழிகளைப் பார்ப்போம். உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட் திறந்து, பின்னர், வலது மேலாக உள்ள பைப் ரிஞ்ச் ஐகானை அழுத்தவும். கிடைக்கும் மெனுவில் Labs என்பதைத் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் பட்டியலில் Default Text Styling என்பதைத் தேர்ந்தெடுக்கவும். மெயில் செட்டிங்ஸ் விண்டோ, இப்போது ஜெனரல் செட்டிங்ஸ் விண்டோவுக்குச் செல்லும். செட்டிங்ஸ் வரிசையில் Default Text Style என்பதனைத் தேடித் தேர்ந்தெடுக்கவும். இங்கு Bold, Italic, Font, Size, and Text என்ற ஆப்ஷன்கள் கிடைக்கும். உங்கள் மனதிற் கேற்ற வகையில் இவற்றைத் தேர்ந்தெடுக்கவும். தேர்ந்தெடுத்து முடித்த பின்னர், Save Changes என்பதில் கிளிக் செய்து வெளியேறவும். இனி, நீங்கள் தேர்ந்தெடுத்த எழுத்துரு, தேர்ந்தெடுத்த வகையில் மட்டும் உங்கள் மெயில் மெசேஜ் விண்டோவில், நீங்கள் பயன்படுத்தத் தயாராக இருக்கும். எப்போது வேண்டுமானாலும், மேலே சொன்ன வழிகளில் சென்று மாற்றிக் கொள்ளலாம்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KING - thirukovilur,இந்தியா
03-செப்-201120:11:51 IST Report Abuse
KING தங்களின்கம்பியூட்டர் மலர் புத்தகம் மிக்க பயனுள்ளதாக உள்ளது.மேலும் பல செய்திகளைத்தந்து எங்கள் அறிவை வளர்த்துக்கொள்ள என்றென்றும் உதவிடுங்கள், பதிப்பிற்க்கு மிக்க நன்றிகள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X