டெக்கான் கிராமினா வங்கியில் பணி இடங்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

05 செப்
2011
00:00

ஸ்டேட் பாங்க் ஆப் ஐதராபாத்தினால் நிர்வகிக்கப்பட்டு வந்த 4 ரீஜனல் ரூரல் வங்கிகளை ஒன்றிணைத்து டெக்கான் கிராமினா வங்கி உருவாக்கப்பட்டது. 215 கிளைகளைக் கொண்ட இந்த வங்கி ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் அடிலாபாத், கரீம் நகர், நிஜாமாபாத், ஐதராபாத் மற்றும் ரெங்கா ரெட்டி ஆகிய மாவட்டங்களில் இயங்குகிறது. இந்த வங்கியில் ஸ்கேல்2, ஸ்கேல் 1 பிரிவு அதிகாரிகள் மற்றும் மல்டி பர்பஸ் ஆபிஸ் அஸிஸ்டென்ட் ஆகிய பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரிவுகள்: ஸ்கேல் 2, மிடில் மேனேஜ்மென்ட் அதிகாரி பிரிவில் 12 காலி இடங்களும், ஸ்கேல் 1, இள நிலை நிர்வாக அதிகாரி பிரிவில் 65 இடங்களும், மல்டி பர்பஸ் ஆபிஸ் அஸிஸ்டென்ட் பிரிவில் 98 இடங்களும் காலியாக உள்ளன.
தேவைகள்: இந்தப் பதவிகளில் முதல் பதவிக்கு 21 முதல் 32 வயதுக்கு உட்பட்டவராகவும், 2வது மற்றும் 3வது பிரிவுகளுக்கு 18 முதல் 28 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். பதிவு செய்யும் தேதி அடிப்படைத் தேதியாகும். இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பக் கட்டணமாக முறையே 550, 450 மற்றும் 250 ஆகிய ஒன்றை விண்ணப்பிக்கும் பிரிவுக்கு ஏற்றபடி செலுத்த வேண்டும். மூன்று பிரிவுகளுக்குமே பட்டப்படிப்பு குறைந்த பட்ச தகுதியாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. தெலுங்கு மொழியில் எழுத, பேச மற்றும் படிக்க தெரிந்திருப்பது கட்டாயத் தேவையாகும். இதே போல் கம்ப்யூட்டர் திறமையும் கட்டாயத் தேவையாகும். முழுமையான தகவல்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.
இதர விபரங்கள்: டெக்கான் கிராமினா வங்கியின் காலி இடங்களுக்கான விண்ணப்பக் கட்டணத்தை ஏதாவது ஒரு ஸ்டேட் பேங்க் ஆப் ஐதராபாத் கிளையில் 62197435548 என்ற அக்கவுண்ட் எண்ணில் Deccan Grameena Bank Recruitment என்ற பெயரில் செலுத்த வேண்டும். ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனியாக சலான் படிவங்கள் உள்ளன.
இவற்றை இணையத்திலிருந்து டவுண்லோடு செய்து பெற வேண்டும். பணத்தை செலுத்திய பின்னர் கிடைக்கும் சலானின் கவுன்டர்பாயில் பகுதியைப் பத்திரமாக வைக்கவும். இதில் உள்ள விபரங்களுடன் ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்துத் தேர்வு மூலமாக இந்தப் பதவிகள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம் செலுத்த, ஆன்-லைனில் பதிவு செய்ய இறுதி நாள் : 16.09.2011
விண்ணப்பிக்கும் முன் முழு விபரங்களையும் அறிய பார்க்க வேண்டிய இணையதள முகவரி : http://www.dgbhyd.com/adminpanel/tender/DGB%20ADVERT%20FINAL.pdf

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X