சிங்கானேரி கொலைரீஸ் நிறுவனத்தில் காலியிடங்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 செப்
2011
00:00

ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டத்தில் உள்ள எல்லண்டு என்ற பகுதியில் நிலக்கரி சுரங்கம் கண்டு பிடிக்கப்பட்டு கிட்டத்தட்ட 125 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுதான் தற்போது சிங்கானேரி கொலைரீஸ் என்ற பெயரில் அரசுத்துறையில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் இன்ஜினியரிங் பிரிவுகளில் உள்ள காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரிவுகள்: சிங்கானேரி கொலைரீஸ் நிறுவனத்தில் மைனிங் கிராஜூவேட் டிரெய்னி - கிரேடு 1ன் கீழ் 57 காலி இடங்களும், ஜூனியர் மைனிங் இன்ஜினியர் டிரெய்னி - இ1 கிரேடின் கீழ் 100 காலி இடங்களும் நிரப்பப்பட உள்ளன.
தேவை என்ன: இந்தப் பிரிவுகளில் முதல் பிரிவான மைனிங் கிராஜூவேட் டிரெய்னி பிரிவுக்கு விண்ணப்பிக்க 01.01.2011 அன்று 28 வயதுக்கு உட்பட்டவராகவும், ஜூனியர் மைனிங் இன்ஜினியர் டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிக்க இதே தேதியில் 24 வ்யதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். முதல் பிரிவுக்கு விண்ணப்பிக்க பி.இ., பி.டெக்., ஏ.எம்.ஐ.இ., ஆகிய ஏதாவது ஒரு படிப்பைக் குறைந்த பட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் மைனிங் பிரிவில் முடித்திருக்க வேண்டும்.
இரண்டாவது பிரிவிற்கு விண்ணப்பிக்க ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தின் மூலம் டிப்ளமோ இன் மைனிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக இந்தப் பதவிகள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதர தகவல்கள்: சிங்கானேரி கொலைரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் இன்ஜினியரிங் பணியிடங்களுக்கு ஆன்-லைன் முறையிலேயே விண்ணப்பிக்க வேண்டும். ஆன்-லைனில் விண்ணப்பித்த பின்னர் கிடைக்கும் பிரின்ட் அவுட்டுடன் சான்றிதழ் நகல்கள் மற்றும் ரூ.5/-க்கான ஸ்டாம்ப்பை சுயவிலாசமிட்ட கவரில் ஒட்டி பின்வரும் முகவரிக்கு 19.09.2011க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
முகவரி:
Director (PA & W),
The Singaneri Collieries Co. Ltd.,
Recruitment Cell,
Kothagudem 507 101,
Khammam District,
Andhra Pradesh..
இணையதள முகவரி : scclmines.com/careers.asp

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X