கெய்ல் இந்தியா நிறுவனத்தில் பயிற்சியாளர் பதவி | வேலை வாய்ப்பு மலர் | Jobmalar | tamil weekly supplements
கெய்ல் இந்தியா நிறுவனத்தில் பயிற்சியாளர் பதவி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

05 செப்
2011
00:00

கேஸ் அதாரிட்டி ஆப் இந்தியா என்ற கெய்ல் நிறுவனம் இயற்கை எரிவாயுவைப் பொறுத்த கண்டுபிடிப்பு, உற்பத்தி, பராமரிப்பு, பங்கிடுதல் மற்றும் மார்க்கெட்டிங் ஆகிய பணிகளில் ஈடுபட்டு வரும் அரசுத்துறை சார்ந்த ஒரு பிரம்மாண்டமான நிறுவனமாகும். சர்வ தேச சந்தை வரை தனது பணிகளை விஸ்தரித்து உள்ள கெய்ல் நிறுவனத்தில் எக்ஸிக்யூடிவ் டிரெய்னி பதவிக்கு 7 பிரிவுகளிலும் உள்ள காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளது.
பிரிவுகள்: கெய்ல் நிறுவனத்தில் எக்ஸிக்யூடிவ் டிரெய்னி - மெக்கானிகல் பிரிவில் 26 இடங்களும், எலக்ட்ரிகல், இன்ஸ்ட்ரூமென்டேஷன், கெமிக்கல், சிவில், டெலிமெட்ரி, எச்.ஆர்., ஆகிய பிரிவுகள் அனைத்தும் சேர்த்து 35 இடங்களும் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளி வந்துள்ளது.
தேவைகள் என்னென்ன: கெய்ல் நிறுவனத்தின் மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 30.09.2011 அன்று 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். எக்ஸிக்யூடிவ் டிரெய்னி இன்ஜினியரிங் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் தொடர்புடைய துறையில் குறைந்த பட்சம் 65 சதவிகித மதிப்பெண்களுடன் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக இள நிலை இன்ஜினியரிங் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
எக்ஸிக்யூடிவ் டிரெய்னி - எச்.ஆர்., பிரிவுக்கு எம்.பி.ஏ., எம்.எஸ்.டபிள்யூ., பி.ஜி.டி.பி.எம்., ஆகிய ஏதாவது ஒரு படிப்பைக் குறைந்த பட்சம் 60/65 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மற்ற விபரங்கள்: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற அடிப்படையில் இந்த இடங்கள் நிரப்பப்படும். எழுத்துத் தேர்வு 14 மையங்களில் நடத்தப்படும் என்று தெரிகிறது. இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க ரூ.200/-க்கான டி.டி.,யை GAIL (India) Limited என்ற பெயரில் புது டில்லியில் மாற்றத்தக்கதாக எடுத்து அனுப்ப வேண்டும்.
முழுமையான தகவல்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.
கெய்ல் நிறுவனத்தின் எக்ஸிக்யூடிவ் டிரெய்னி பதவிக்கு ஆன்-லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்-லைனில் விண்ணப்பித்த பின்னர் கிடைக்கும் பிரின்ட் அவுட்டுடன் தகுந்த இணைப்புகளைச் சேர்த்து பின்வரும் முகவரிக்கு 22.09.2011க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
முகவரி:
PO Box No.1102,
Jayanagar 3rd Block,
Bangalore 560 111.
இணையதள முகவரி : http://119.226.214.34/GAIL/ONLINEFORM/PDF/Advt.pdf

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X