கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 செப்
2011
00:00

கேள்வி: விண்டோஸ் ஷட் டவுண் செய்திட மிகச் சுருக்க வழி ஒன்றைக் கூறவும். எக்ஸ்பி பயன் படுத்துகிறேன்.
-கே. சிவரஞ்சனி, கோவை.
பதில்: விண்டோஸ் கீயினை அழுத்துங்கள். பின்னர் கீயை இருமுறை அடுத்தடுத்து அழுத்துங்கள். ரீஸ்டார்ட், ஷட் டவுண்ட் ஹைபர் னேஷன் என்ற கட்டங்கள் உள்ள விண்டோ எல்லாம் காட்டப்படாமல், விண்டோஸ் ஷட் டவுண் செய்யப்படும். கவலையில்லாமல், டிவி பார்க்கச் சென்றுவிடலாம்.

கேள்வி: யு.எஸ்.பி.3 என்பது எப்போது அனைத்து மக்களின் பயன்பாட்டிற்கு வரும்? தற்போது உள்ளதைக் காட்டிலும் உண்மை யாகவே சிறந்ததா?
-டி.நாச்சியப்பன், காரைக்குடி.
பதில்: விரைவில் அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் வகையில் கிடைக்கும். மைக் ரோசாப்ட் தன் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இதற்கான வழிகளைத் தர இருக்கிறது. யு.எஸ்.பி. 2 வகையுடன் ஒப்பிடு கையில், யு.எஸ்.பி.3 மிக வேகமாக இயங்கும். ஒரு விநாடியில் 5 கிகா பிட்ஸ் டேட்டாவைப் பரிமாறும். அதாவது தற்போதைய வகையைக் காட்டிலும் 10 மடங்கு வேகம் கொண்டதாக இருக்கும். மின் சக்தியைக் குறைவாகக் கையாளும். இதனால் கையில் எடுத்துச் சென்று பயன்படுத்தும் சாதனங்களில் பேட்டரியின் பயன் நேரம் அதிகரிக்கும்.

கேள்வி: ஆம்னி பாக்ஸ் என்பது பிரவுசரில் எதனைக் குறிக்கிறது? இதன் பயன் என்ன?
-டி.மாலினி, திருப்பூர்.
பதில்: பொதுவாக பிரவுசர்களில் அட்ரஸ் பார் என நாம் அழைப்பதனை, குரோம் பிரவுசர் ஆம்னி பாக்ஸ் என அழைக்கிறது. ஏனென்றால் இந்தப் பெட்டி பல வேலைகளைச் செய்கிறது. இதில் பல கணக்கு வேலைகளையும் செய்து பார்க்கலாம். எடுத்துக் காட்டாக, 6% of 5600 எனக் கொடுத்தால் 336 என விடை கிடைக்கும். இதே போல கூட்டல், கழித்தல், வகுத்தல், பெருக்கல் என எந்தக் கணக்கினை யும் போடலாம். கால்குலேட்டர் ஐகானைத் தேடிக் கிளிக் செய்து விடையைப் பார்த்துப் பின் அதனை வேறு ஒரு புரோகிராமிற்குக் கொண்டு செல்லும் சுற்று வழியை இது குறைக்கிறது அல்லவா! குரோம் பிரவுசரைப் பயன்படுத்துபவராக இருந்தால், உடனே இதனைச் செய்து பார்க்கவும்.

கேள்வி: என் மகளைக் கலைக் கல்லூரியில் சேர்த்துள்ளேன். வீட்டில் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் ஒன்று வாங்கிப் பயன்படுத்த விரும்புகிறாள். என்ன என்ன அமைப்பு அதில் இருக்க வேண்டும்? அசெம்பிள்டு கம்ப்யூட்டர் வாங்கலாமா? உத்தேசமாக பிராண்டட் கம்ப்யூட்டர் என்ன விலை இருக்கும்?
-டி.கிருஷ்ணமூர்த்தி, ஆசிரியர், பட்டிவீரன்பட்டி.
பதில்: இது, தமிழ்நாட்டில், மாணவர்கள் கம்ப்யூட்டர் வாங்கும் சீசன். எனவே உங்கள் கேள்விக்கான பதில், பலரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும். முதல் ஆண்டில் உங்கள் மகள் சேர்ந்திருப்பதால், என்ன என்ன பயன்பாட்டினை கம்ப்யூட்டரில் முழுமையாக மேற்கொள்ள முடியும் என்பதனை உணராமல் அவர் இருக்கலாம்.
தயவு செய்து அசெம்பிள்டு கம்ப்யூட்டர் வாங்க வேண்டாம். வாரண்டி, அது, இது என கொடுப்பவர் கூறினாலும் தயவு செய்து ஒதுக்கிவிடுங்கள்.
உங்கள் ஊர் அருகே திண்டுக்கல் அல்லது மதுரையில் கம்ப்யூட்டர் விற்பனை செய்திடும் நிறுவனம் ஒன்றைத் தேர்ந்தெடுத்து வாங்கவும். இன்டெல் கோர் ஐ3 அல்லது ஐ5 ப்ராசசர், டி.டி.ஆர்.3 ராம் மெமரி (2 ஜிபி / 4 ஜிபி) 500 அல்லது அதற்கும் மேலாக ஜிபி கொள்ளளவு கொண்ட ஹார்ட் டிஸ்க், டிவிடி ரைட்டர், 18.5 அங்குல டி.எப்.டி. அல்லது எல்.சி.டி. மானிட்டர், ஆப்டிகல் மவுஸ், 104 கீ போர்டு, தேவையான ஸ்பீக்கர்கள், விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம், மூன்று ஆண்டு வாரண்டி என இருக்க வேண்டும். விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான லைசன்ஸ் உரிமை எண் கேட்டு வாங்கவும். எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பு விலை கொடுத்து வாங்கலாம். அல்லது இலவச மாகக் கிடைக்கும் ஓபன் ஆபீஸ் தொகுப்பினை வாங்கிப் பதிந்து பயன்படுத்தலாம். நல்ல ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு, பிரவுசர் ஆகியனவும் இலவசமாகக் கிடைக்கும். விலை ரூ.27,000 முதல் ரூ.31,000 வரை இருக்கலாம். ஒன்றுக்கு இரண்டு நிறுவனங்களில் விசாரிக்கவும். எச்.சி.எல்., ஏசர், டெல், லெனோவா அல்லது எச்.பி. போன்ற முன்னணி நிறுவனக் கம்ப்யூட்டரை வாங்கலாம். எச்.பி. நிறுவனம் பெர்சனல் கம்ப்யூட்டர் தயாரிப்பதை நிறுத்தி விட்டதாகத் தகவல்கள் வந்துள்ளன. சர்வீஸ் கிடைக்கும் என்றாலும், மற்ற நிறுவனக் கம்ப்யூட்டர்களுக்கு முன்னுரிமை தரலாம்.

கேள்வி: வேர்ட் டாகுமெண்ட்டில், பிரிண்ட் பிரிவியூவில் பல பக்கங்களை மொத்தமாக சிறியதாக அச்சில் எப்படி வரும் என்று பார்க்க முடிகிறது. இதனையே அச்சில், ஒரே பக்கத்தில் பல பக்கங்களை சிறியதாக அச்சடித்து வைத்திட என்ன செய்வது?
-வி. சார்லஸ் நடராஜ், சென்னை.
பதில்: டாகுமெண்ட் பக்கங்கள் தம்ப்நெயில் அளவில் அச்சில் கிடைக்க வேண்டும் என விரும்புகிறீர்கள். இதற்குக் கீழ்க்கண்டபடி செல்லவும். பைல் மெனு சென்று பிரிண்ட் பிரிவைத் தேர்ந்தெடுங்கள்; அல்லது Ctrl + P அழுத்துங்கள். பிரிண்ட் விண்டோவில் கீழாக வலது பக்கம் Zoom Section என்று ஒரு பிரிவு இருக்கும். அங்கு Pages per sheet என்று இருக்கும் பிரிவில் கிளிக் செய்தால் கீழாக விரியும் மெனு ஒன்று கிடைக்கும். இதில் தம்ப்நெயில் அளவில் எத்தனை பக்கங்கள் அச்சிடப்பட்டால் உங்களால் பார்த்து தெளிவாக அறிந்து கொள்ள முடியுமோ அந்த எண்ணிக்கையில் பக்க எண்களை அமைத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும். எண்கள் பெரிய எண்களாக இருந்தால் அச்சிடப்படும் பக்கங்களின் அளவு சிறியதாக மாறும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங் கள். இனி அந்த அளவில் பல தேர்ந்தெடுத்த எண்ணிக்கையிலான பக்கங்கள் ஒரு பக்கத்தில் அச்சிடப்படும்.

கேள்வி: டாகுமெண்ட் ஒன்றில், நாம் விரும்பும் இடத்தில், அன்றைய நாள் அல்லது அப்போதைய சிஸ்டம் நேரம் அமைக்க ஷார்ட்கட் கீகள் என்ன?
-சி.இப்ராஹிம், கோவை.
பதில்: மிக எளிதாக நேரத்தையும் நாளையும் அமைக்கலாம். Alt + Shift + D அழுத்தினால் அன்றைய தேதி உடனை கர்சர் உள்ள இடத்தில் அமைக்கப்படும். Alt + Shift + T அழுத்தினால் அப்போதைய நேரம் அமைக்கப்படும்.

கேள்வி: இதய நோய் உள்ளவர்கள், ஹெட்செட் வைத்து எம்பி3 பிளேயரில் பாட்டு கேட்கக் கூடாது என்று சொல்லப்படுகிறது. இது உண்மையா?
-எஸ். டி. ஜோசப் சந்திரா, திருப்பூர்.
பதில்: இருதய நோய்களுக்கான சிறப்பு மருத்துவருக்குச் செல்ல வேண்டிய கேள்வி இது. எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன். உங்கள் சந்தேகம் எம்பி3 பிளேயர் மீதா? ஹெட்செட் மீதா?
பொதுவாக, பேஸ் மேக்கர் என்னும் இதயத் துடிப்பைச் சீராக்கும் சாதனத்தை வைத்துள்ள வர்கள், எம்பி3 பிளேயரை ஹெட்செட் இணைத்துப் பயன்படுத்தக் கூடாது என்று சொல்லப்படுவதைக் கேட்டிருக்கிறேன்.
பல ஹெட் செட் பிளேயர்களில் நியோ டைமியம் என்னும் ஒரு வகை மேக்னட் பயன்படுத்தப்படுகிறது. இவை பேஸ் மேக்கர் வகை சாதனங்களுக்கு 3 செ.மீ அருகே கொண்டு சென்றால் அவற்றைப் பாதித்து இதயத்திற்குத் தவறான சிக்னல்களை அனுப்பக் கூடிய சூழ்நிலைகளைத் தோற்றுவிக்கின்றன. இதனால் இதயம் தேவை ஏற்படாமலேயே தன் துடிப்பில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்கிறது. ஆனால் 3 செ.மீ தூரத்திற்கு மேலான தொலைவில் இருக்கையில் இந்த பாதிப்பு ஏற்படுவதில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது போன்ற எச்சரிக்கைகளை முன்பு ஐபாட் சாதனம் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து ஆய்வு செய்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு தந்தது. எதற்கு வம்பு? தள்ளிவைத்தே கேட்கலாமே!

கேள்வி: நாம் அழித்த பைல்களை மீண்டும் பெற, ரெகுவா என்ற ஒரு புரோகிராம் குறித்து டிப்ஸ் தந்தீர்கள். வேறு ஏதேனும் மிகச் சிறிய புரோகிராம் இதே வேலைக்கென இலவசமாகக் கிடைக்கிறதா?
-இரா. தேன்மொழி, சிவகாசி.
பதில்:உங்கள் கேள்வியின் நோக்கம் தெளிவாக இல்லை. இருப்பினும் ரெகுவா போல இயங்கும் இன்னொரு இலவச புரோகிராம் குறித்து தகவல் தருகிறேன். இதன் பெயர் Roadkil’s Undelete. இது சிறியதாக, ஒரு ஸிப் பைல் உள்ளாக எக்ஸிகியூடபிள் பைலாக இது கிடைக்கிறது. இதனை ஒரு யு.எஸ்.பி. பிளாஷ் டிரைவிலும் வைத்துப் பயன்படுத்தலாம். இதனால் ஹார்ட் டிரைவில் அழித்த பைலை எளிதாகத் திரும்பப் பெறலாம். http://www.roadkil.net/program.php /P28/Undelete என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து இந்த புரோகிராமினை இலவசமாகத் தரவிறக்கம் செய்திடலாம்.
இந்த புரோகிராம் பயன்படுத்த மிக மிக எளிதானது.இதனை இயக்கியவுடன் “Recover from Drive’’ என்பதிலிருந்து எந்த டிரைவினை ஸ்கேன் செய்திட வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். ஸ்கேன் முடிந்தவுடன் அந்த டிரைவில் அழிக்கப்பட்ட பைல்களில், எந்த எந்த பைல்களை மீண்டும் பெறலாம் என்று ஒரு பட்டியல் நமக்குக் காட்டப்படும். ஒவ்வொரு பைலுக்கும் அது இருந்த இடம், அளவு, நாள், அதன் தன்மை வகைகள், பைலின் தற்போதைய நிலை காட்டப்படும். எந்த பைலை மீண்டும் பெற வேண்டும் என விரும்புகிறீர்களோ அதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் “Browse” பட்டனை அழுத்தி எந்த இடத்தில் மீண்டும் பெறப்படும் பைலை வைக்க வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அதன் பின் “Recover” என்பதனை அழுத்தவும். சில வேளைகளில் மிகப் பெரிய பைல்களைப் பெறுவது சிரமமாக உள்ளது. இது கம்ப்யூட்டரில் அப்போது இயங்கும் புரோகிராம்களின் அளவைப் பொறுத்தும் இருக்கலாம்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கே.ஸ்ரீனிவாசன் - Chennai,இந்தியா
08-செப்-201118:59:10 IST Report Abuse
கே.ஸ்ரீனிவாசன் Before April, there were supplemental issue of Computor Malar along with Dinamalar Paper, while getting from shop. Now a days, the computor Malar is not received along with Dinamalar Paper. Will you please clarify, why it has been stopped.
Rate this:
Cancel
எ.thiyagarajan - salem,இந்தியா
07-செப்-201109:19:09 IST Report Abuse
எ.thiyagarajan Dear sir, I am the reader of dinamalar computer malar since last six years i regularly seeing the computer malar in internet ,it is very amazing matters and i couldn't elaborate further and your service is really great , please note so far i didn't taken any training for learn computer only thro your guidance ,now i able to browse and send mail . All credit goes to you ,i really thanks for you and my request please make all question and answer part published by you complied in one book for every six month or suitably by your convince, this will helpful to new comers and for reference to all including me thanks and expecting your reply regards thiyagarajan
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X