பாலைவனத்தில் 1000 மைல்களைக் கடந்த முதல் பெண்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 செப்
2011
00:00

மங்கோலிய நாட்டின், தெற்கு பகுதியில் உள்ளது கோபி பாலைவனம்.
இந்த பாலைவனம்,1,632 கி.மீ., நீளமுள்ளது ஆசியாவிலேயே பெரியதும், உலக அளவில் ஐந்தாவது இடத்திலும் உள்ளது.
இந்த பாலைவனத்தை கடக்க, 60 நாட்கள் ஆகும். இதை கடப்பதே, ஒரு சாகசமான செயல். வருடத்திற்கு ஒரு முறை சாகச பிரியர்கள் இணைந்து, இந்த பாலைவனத்தை கடக்கும் செயலில் ஈடுபடுவர்.
இதற்காக விண்ணப்பிப்பவர்கள், தகுதி அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படுவர்.
இந்த முறை இதற்காக விண்ணப்பித்தவர்களில், மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சுசிதாவும் ஒருவர்.
தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும், 33 வயது பெண்ணான சுசிதா, மலையேறுவது போன்ற சாகச விளையாட்டில் ஈடுபாடு உள்ளவர். பாலைவனத்தை கடப்பது பற்றிய வாய்ப்பு கிடைத்ததும், அதற்கும் துணிந்து விட்டார்.
அறுபது நாட்கள் பயணம்... பகலில் அதிகபட்ச வெயிலும், இரவில் அதிக பட்ச குளிரும் நிலவும். எப்போது வேண்டுமானாலும் பாலைவனப் புயல் வீசும். தரையில் நடப்பது போல நடந்து விட முடியாது. அதிகபட்சமாக, ஒரு நாளைக்கு, 25 - 32 கி.மீ., தூரம் வரை நடந்தாலே ஆச்சரியம்தான்.
இதுபோன்ற சிரமங்கள் காரணமாக இதுவரை, இரண்டு வெளிநாட்டு பெண்கள் மட்டுமே இந்த பாலைவனத்தை கடந்துள்ளனர். சுசிதாதான் துணிந்து, களம் இறங்கிய முதல் இந்திய பெண்.
இதற்காக வீட்டில் இருந்து, 24 கி.மீ., தூரத்தில் உள்ள தன் அலுவலகத்திற்கு பல நாட்கள் நடந்தே போய் திரும்பி வந்து, பயிற்சி எடுத்தார். மேலும், கார் டயர்களை கழுத்தில் மாட்டி, பூங்காக்களில் நடந்து பயிற்சி எடுத்தார்.
பதிமூன்று பேர் கொண்ட குழுவில், இவருடன் நளிந்தா என்ற இன்னொரு பெண்ணும் இடம் பெற்றிருந்தார். 800 கி.மீ., கடந்த நிலையில், அந்த பெண், அதற்கு மேல் பயணத்தை தொடர முடியாமல், பாதியிலேயே திரும்பி விட்டார். அதன் பிறகு, தனி ஒரு பெண்ணாக, சுசிதா பயணத்தை தொடர்ந்தார்.
பாலைவனத்தின் கடும் வெயிலையும், குளிரையும் கூட சமாளித்தவர், திடீர், திடீரென வீசிய மணல் புயலை சமாளிக்கத்தான் பெரிதும் சிரமப்பட்டார். பயணத்திற்கு பெரிதும் உதவியாக இருப்பவை ஒட்டகம்தான்; ஆனால், இவைகளிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எவ்வளவோ ஜாக்கிரதையாக இருந்தும், இரண்டு முறை ஒட்டகத்திடம் உதைபட்டு, பெரும் வதைபட்டு இருக்கிறார்.
அதன்பிறகு நடுவில் இரண்டு நாள் காய்ச்சல் வேறு. உடன் வந்தவர்கள், "போதும்... நிறுத்திக் கொள்ளுங்கள்...' என்று சொன்ன போதும், "முடியாது' என்று மறுத்து, விடாப்பிடியாக நடந்து, தன் லட்சியத்தை எட்டி இருக்கிறார்.
கோபி பாலைவனத்தை கடந்த முதல் இந்திய பெண் என்ற பட்டத்தை பெற்ற சுசிதா கூறும் போது... "பாலைவனம்தானே என்று எளிதில் எடுத்துக் கொள்ள முடியாது. அந்த அளவிற்கு சிரமமும் இருந்தது, அதே அளவிற்கு சந்தோஷமும் இருந்தது. பயணத்தின் போது நான் பார்த்த காட்சிகள் அவ்வளவு அற்புதமானவை...' என்றார். கூடவே அடுத்த சாகசத்திற்கும் தயாராகி விட்டார்.
***

எல். முருகராஜ்

Advertisement

 

மேலும் வாரமலர் செய்திகள்:



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
joseph - singapore,இந்தியா
24-செப்-201117:32:26 IST Report Abuse
joseph வாழ்த்துக்கள் சுசிதா'''''...............பயணங்கள் முடிவதில்லை
Rate this:
Share this comment
Cancel
பிரியா - பெங்களூர்,இந்தியா
23-செப்-201114:14:51 IST Report Abuse
பிரியா வாழ்த்துக்கள் சுசிதா.....!!!!!!!!
Rate this:
Share this comment
Cancel
fernandez - திருச்சி,இந்தியா
19-செப்-201114:52:14 IST Report Abuse
fernandez பயணங்கள் முடிவதில்லை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X