திண்ணை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 செப்
2011
00:00

காஞ்சிபுரத்தில் அக்காலத்தில் வாணிபம் செழித்திருந்தது. 18 வகை தானியங்களுடன், நெய், எண்ணெய், தேங்காய், சர்க்கரை, நிலக்கடலை, காய்கள், பழங்கள் மற்றும் பூக்கள் விற்பனையும் நடந்தது.
உள்நாட்டு வாணி பத்துடன், வட நாட்டினரு டனும் வாணிபம் செய்யப் பட்டது. இது தவிர, கடல் கடந்தும் வாணிபம் செய் தவர்கள் காஞ்சிபுரத்தில் வசித்து வந்தனர். முக்கிய துறைமுகமான மாமல்லபுரம் வழியாக சீனாவில் இருந்து கல்கண்டு, சீனி, களிமண் பொருட்கள், குடை போன்ற பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன.
வாணிபம் செய்ய வந்த மற்ற இனத்து மக்களால் பழக்க, வழக்கங்களில் மாற்றங்கள் ஏற்பட்டன. சொந்த உறவுகளில் திருமணம், பெண்கள் முகத்தில் மஞ்சள் பூசுதல், நெற்றியில் குங்குமம் இடுதல், திருமணத்தின் போது மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, தேங்காய் கொண்ட தாம்பூலம் வழங்குதல், விருந்தினர்களை உபசரித்தல், கணவன் இறக்கும் போது உடன் கட்டை ஏறுதல், விதவைகளுக்கு மொட்டை அடித்தல் போன்ற திராவிடர்களின் பழக்கங்களை ஆரியர்களும் பின்பற்றினர்.
அக்கால விதவைப் பெண்கள் பல கொடுமைகளை அனுபவித்தனர். மனைவியை விவாகரத்து செய்யவும், மறுமணம் செய்து கொள்வதற்கும் ஆண்கள் உரிமை பெற்றிருந்தனர். பணம் படைத்தவர்கள் பல பெண்களை மணந்து கொண்டனர். வேதம் ஓதுவதற்கும், கல்வி கற்பதற்கும் பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டது. பல்லவர்களின் காலத்தில் தான் கோவில்களில் நாட்டியம் ஆட பெண்களை தேவரடியாராக வைக்கும் வழக்கம் ஏற்பட்டது.
பெண்கள், தலை, காது, கழுத்து, மூக்கு, கால், இடுப்பு போன்ற அவயங்களில் பல வகையான ஆபரணங்களை அணிந்தனர். காதின் உச்சியில் அணிவது "கொப்பு' நடுக்காது மடலில் அணிவது "தளுக்கு' அதன் கீழே "மொழுக்கு' என இவற்றிற்கு பெயர். மாணிக்கத்தார், கணிகையர், கோபிகையர், பதிலியார், ரிஷபத்தலியர், குட்டி என நாட்டிய மங்கையர் அழைக்கப்பட்டனர். சிவன் கோவில்களில் இருப்பவர்கள் ருத்ர கணிகையர். இவர்கள் இசைப்பள்ளி நடத்தியும், சாமரம் வீசுபவர் களாகவும் இருந்துள்ளனர். இவர்களுக்கு கோவில் நிலங்களில் வசிக்க இடமளிக்கப்பட்டது.
ஆண்கள் தங்களின் குலத் தொழில்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். வீர விளையாட்டுக் களில் இளைஞர்கள் விரும்பி ஈடுபட்டனர். ஆண்கள் குடுமி வைத்து, இடையில் கச்சை கட்டியிருந்தனர். காலில் செருப்பு அணிந்தனர். விசேஷ காலங்களில் சட்டையும் அணிந்தனர்.
— ஆ.பா. திருஞானசம்பந்தம் எழுதிய, "காஞ்சிபுரம் மாவட்ட வரலாறு' என்ற நூலிலிருந்து.
***

செட்டியார் கடையில், ஐந்து பலம் சர்க்கரை வாங்கி வந்து, வீட்டில் நிறுத்துப் பார்த்தவுடன், அது மூன்று பலமாக இருந்தால், செட்டியார் கடையில் உள்ள பையன், சரியாக நிறுத்துத் தரவில்லை, போக்கிரிப்பயல், அவனை உதைக்க வேண்டும் என்று, செட்டியார் கடையில் உள்ள பையன் மீதே முதலில் நமக்குக் கோபம் வரும்.
ஆனால், செட்டியாரே நேரே நிறுத்துக் கொடுத்த பிறகும், வீட்டிற்குப் போய் நிறுத்துப் பார்த்தால், அதே மூன்று பலமாக குறைகிறது என்றால் என்ன அர்த்தம்? தராசு சரி இல்லை என்று அர்த்தமல்லவா? அதைப் போலவே, நாட்டிலே மக்கள் வாழ்வு நலிகிறது என்றவுடன், "ஆள்கிறவன் வெள்ளைக்காரன், அவன் அந்நியன், இந்த நாட்டுக்காரன் அல்ல, அதனால் தான், இந்தக் கஷ்டமெல்லாம்' என்று, முதலில், செட்டியார் கடையிலுள்ள செட்டிப்பையன் மேல் கோபப்பட்டது போல, வெள்ளைக்காரர்கள் மேல் மக்கள் கோபப்பட்டனர்.
பிறகு, காங்கிரஸ் தலைவர்கள், அந்நியரிட மிருந்து ஆட்சியைக் கைப்பற்றினர். நம் சர்கார் வந்தது, நம் அமைச்சர்கள் ஆள ஆரம்பித்தனர். இப்போதும், நம் வாழ்வு நலிவது நிற்கவில்லை என்றால் என்ன அர்த்தம்? ஆட்சி செய்யும் முறை சரியில்லை என்று தானே பொருள். எப்படி, தராசை சரிப்படுத்தாமல், செட்டியார் கடைப் பையன் நிறுத்தாலும், செட்டியாரே நிறுத்தாலும், ஐந்து பலத்திற்கு, மூன்று பலம் தான் நின்றதோ, அதே போல், ஆட்சி முறையை மாற்றிக் கொள்ளாமல், வெள்ளைக்காரர்கள் ஆண்டாலும்,காங்கிரஸ் தலைவர்கள் ஆண்டாலும் நம் வாழ்வு நலிவது நம்மைவிட்டு நீங்காது. ஐந்து பலம், ஐந்து பலமாகவே இருக்கவேண்டுமானால், தராசையே மாற்றி அமைக்க வேண்டும்.தராசை மாற்றி யமைக்காமல், காங்கிரஸ் அமைச்சர்களை மட்டும் தள்ளிவிட்டு, அவர்கள் ஸ்தானத்தைக் கைப்பற்று வது அல்ல, நம் நோக்கம்!
— அண்ணாதுரையின், "தேன் துளிகள்' நூலிலிருந்து.

நடுத்தெரு நாராயணன்

Advertisement

 

மேலும் வாரமலர் செய்திகள்:வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JP Nadar - Bangalore,இந்தியா
18-செப்-201116:35:10 IST Report Abuse
JP Nadar அப்படியானால் தளுக்கு, மொழுக்குக்குன்னு இருக்கிறாள் என்றால் பணக்காரி என்றும், கொப்பும் கொளையுமா இருக்கிறாள் என்றால் அதிபணக்காரி என்று அர்த்தமா. இவ்வளவு நாள் தெரியாமல் போயிடுச்சே JP Nadar Bangalore
Rate this:
Cancel
கந்த குமார் - CanningVale,ஆஸ்திரேலியா
18-செப்-201115:36:20 IST Report Abuse
கந்த குமார் எம் அண்ணா!...இதய மன்னா....நீ உருவாக்கி ஆட்சியைப் பிடித்து மறைந்து விட்டாய். உன் அடிப்பொடிகளால் உனக்கும் அல்லவே கெட்ட பெயர்.
Rate this:
Cancel
gs - க்ஹர்தௌம்,சூடான்
18-செப்-201114:59:13 IST Report Abuse
gs தராசை சரி பண்ண முயற்சி பண்ணி இப்போ தராசு இல்லாம பண்ணிப்புட்டாறு எங்க மு.க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X