ஆயுள் அதிகரிக்க வேண்டுமா? | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
ஆயுள் அதிகரிக்க வேண்டுமா?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 செப்
2011
00:00

தினமும், ஒரு மணி நேரம் தொடர்ந்து, "டிவி' பார்த்தால், ஒருவரது ஆயுளில், 22 நிமிடங்கள் குறைந்து விடும். மாறாக, தினமும், 15 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தால், அவரது ஆயுள், மூன்று ஆண்டுகள் கூடும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மனித வாழ்க்கையில் பொழுதுபோக்கு சாதனங்களில் மிகப் பெரிய இடத்தை பிடித்துள்ளது, "டிவி!'
"டிவி' நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்ப்பது எவ்வளவு ஆபத்து என்பது, தொடர்ந்து வெளிவரும் ஆய்வுகள் மூலம் புரிந்து கொள்ள இயலும்.

ஆஸ்திரேலியாவில் உள்ள புகழ்பெற்ற குயின்ஸ்லேண்ட் பல்கலைக் கழகத்தில் மக்கள் தொகை நலன் குறித்தான பள்ளி ஆய்வு மாணவர்கள், 2000ம் ஆண்டு, 11 ஆயிரம் பேரிடம், "டிவி' பார்ப்பது குறித்த ஆய்வு நடத்தினர். இவர்கள் அனைவரும், 25 வயதுக்கு மேற்பட்டவர்கள். இந்த ஆய்வின் தொடர்ச்சியாக, எட்டு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஆய்வு நடத்தினர்.
ஆய்வில் இருந்து அவர்கள் எட்டு ஆண்டுகளில், 9.8 பில்லியன் மணி நேரம், "டிவி' பார்த்துள்ளதும், அதன் மூலம், இரண்டு லட்சத்து, 86 ஆயிரம் மணி நேரம் அவர்களது ஆயுள் குறைந்து விட்டதும் தெரிந்தது. இவ்வாறு ஒரு மணி நேரம், "டிவி' பார்த்ததால், 22 நிமிடங்கள் ஆயுள் குறைந்துள்ளது கண்டறியப்பட்டது. இது ஒரு மணி நேரத்தில், இரண்டு சிகரெட்டுக்கள் புகைத்தால் ஏற்படும் பின் விளைவிற்கு ஒப்பானது.
மேலும், அவர்களுக்கு இதயநோய், நீரிழிவு, உடல் எடை அதிகரித்தல் போன்ற பல்வேறு உடல் பாதிப்புக்கள் ஏற்பட்டிருப்பதும் தெரிந்தது. இது தவிர, உரிய காலத்திற்கு முன்பாகவே இறப்பதற்கான வாய்ப்பு, 8 சதவீதம் அதிகரிப்பதும் தெரிய வந்தது. ஆய்வு நடத்தப்பட்ட ஆண்டுகளுக்கு இடையே, புகை பிடிப்பவர்கள் எண்ணிக்கை சரிவு அடைந்துள்ளதும், "டிவி' பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறையவே இல்லை என்பதும் தெரிய வந்தது.
ஆஸ்திரேலியாவில் அப்படிப்பட்ட ஆய்வு என்றால், தைவான் நாட்டின் தேசிய ஆரோக்கிய ஆய்வு மைய ஆராய்ச்சியாளர் சீ பாங்க் வென் கூறுகையில், "நானும், என் சக மாணவர்களும், 13 ஆண்டுகளில் நான்கு லட்சத்து, 16 ஆயிரம் பேரை தீவிரமாக ஆய்வு செய்தோம். ஒவ்வொரு ஆண்டும் அவர்களது உடல் நலம் பரிசோதிக்கப்பட்டது.
"இதில், ஆண், பெண், குழந்தைகள், முதியவர்கள், ஆரோக்கியமானவர்கள், உடல்நலம் குன்றியவர்கள் என பலரையும் கண்காணித்தோம். அதன் அடிப்படையில் தினமும், 15 நிமிடங்கள் சுறுசுறுப்பாக நடை பயணம் செய்தால், அவர்களது ஆயுள் மூன்று ஆண்டுகள் அதிகரிப்பது தெரிய வந்துள்ளது...' என்றார்.
***

அ. சாத்தப்பன்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 

மேலும் வாரமலர் செய்திகள்:We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X