மைக்ரோமேக்ஸ் ஏ 70 | மொபைல் மலர் | Mobilemalar | tamil weekly supplements
மைக்ரோமேக்ஸ் ஏ 70
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 செப்
2011
00:00

மைக்ரோமேக்ஸ் ஏ 70 மொபைல் போன், 3ஜி நெட் வொர்க்கில் இயங்கும் அழகான போன். கீறல் ஏற்படுத்த முடியாத தொடு திரையுடன் பட்ஜெட் விலையிலும் அமைந்து, அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. கையெழுத்தினை இந்த திரை புரிந்து கொள்கிறது. ட்ராக் பால் அமைக்கப்பட்டு, இயக்குவது எளிதாகிறது.
பல கூடுதல் வசதிகளுடன், ரூ.8,000 என்ற அளவில் விலையிட்டுள்ள இந்த போனின் பரிமாணங்கள் 111 x 58 x 13.5 மிமீ என்ற அளவில் அமைந்துள்ளன. இதன் எடை 85 கிராம். பார் டைப் மாடலில் வடிவமைக்கப்பட்டுள்ள இதன் திரை 3.2 அங்குல அகலத்தில் 320X480 பிக்ஸெல்களுடன் காட்சிகளைக் காட்டுகிறது. அக்ஸில ரோமீட்டர் அளிக்கப்பட்டுள்ளது. நான்கு அலைவரிசைகளில் இயங்குகிறது.
5 எம்பி திறன் கொண்ட கேமரா, ஆடியோ மற்றும் வீடியோவினைச் சிறப்பாகத் தருகிறது. ஆட்டோ போகஸ் திறனுடன் பிளாஷ் இன்றி இயங்குகிறது. எம்பி3 பிளேயர், எப்.எம். ஸ்டீரியோ ரேடியோ ஆகியன எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இமெயில் ஆகிய வசதிகள் கிடைக்கின்றன. டார்ச் லைட், இமேஜ் வியூவர், டி9 டிக்ஷனரி கொண்டுள்ள இந்த மொபைல் போன் ஆண்ட்ராய்ட் மற்றும் ஜாவா சிஸ்டங்களைக் கொண்டுள்ளது. வாய்ஸ் மெமோ, வாய்ஸ் டயல், ஆபீஸ் அப்ளிகேஷன்ஸ் ஆகியன சில சிறப்பு வசதிகளாகும்.
லித்தியம் அயன் 1450 mAh திறன் கொண்ட பேட்டரி இணைந் துள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால், 200 மணி நேரம் மின்சக்தி தங்குகிறது. தொடர்ந்து 4 மணி நேரம் பேசலாம். மைக்ரோ மேக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள சிறந்த போன்களில் இதுவும் ஒன்று எனப் பெயர் பெற்றுள்ளது.

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X