கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 செப்
2011
00:00

கேள்வி: வேர்ட் டாகுமெண்ட் ஒன்றில், வரியின் இடையே புள்ளி அமைக்க என்ன செய்வது. சாதாரண முற்றுப் புள்ளி சரியான இடத்தில் அமையவில்லை. புல்லட் என்றால் அது தனியே அமைக்கப் படுகிறது. இதற்கான வழி உண்டா?
-டி.ராஜ மாணிக்கம், மதுரை.
பதில்: உங்கள் விருப்பப்படி வரியின் நடுவே புள்ளியை அமைக்கலாம். சற்று கூடுதலாக இதற்கு கீகளை அழுத்த வேண்டும். எந்த இடத்தில் சிறிய புள்ளியை, புல்லட் ஆக அமைக்க வேண்டுமோ, அந்த இடத்தில் கர்சரைக் கொண்டு செல்லவும். பின் நம்லாக் கீயை ஆன் செய்து, நியூமெரிக் கீ பேடில் ஆல்ட் கீயினை அழுத்தியவாறே 0183 என்ற எண்களை அழுத்தவும். புள்ளி அமைக்கப் படும். சரியா!

கேள்வி: என் லேப்டாப் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 7 பயன்படுத்துகிறேன். இதில் சிஸ்டம் ட்ரேயில், திடீரென பவர் மற்றும் வால்யூம் ஐகான்கள் காட்டப்படவில்லை. என்ன முயன்றும் மீண்டும் கிடைக்கவில்லை. என்ன காரணம்? எப்படி இவற்றை மீண்டும் பெறலாம்?
-ஷேக் தாவூத், கம்பம்
பதில்: விண்டோஸ் 7, அதனை செட் செய்த மாறா நிலையில், குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே ஐகான்களை, அதன் டாஸ்க் பாரில் காட்டும்படி அமைக்கப்பட்டுள்ளது. எனவே தான் தொடர்ந்து அதில் ஐகான்கள் தோன்றுகையில் இந்த ஐகான்கள் மறைகின்றன. இருப்பினும் இவற்றைத் திரும்பப் பெற சில வழிகள் உள்ளன.
முதலில் இந்த ஐகான்கள் அருகே ஸ்டார்ட் பட்டனை நோக்கியவாறு தரப்பட்டிருக்கும் வெள்ளை நிறத்தில் உள்ள அம்புக் குறியை அழுத்தி, அந்த இரண்டு ஐகான்களும் இல்லையா? அல்லது மறைத்து வைக்கப்பட்டுள் ளனவா என்று சோதித்துப் பார்த்துக் கொள்ளவும்.
முதலில் ஸ்டார்ட் பட்டனை அழுத்தித் தேடுதல் கட்டத்தில் icons என டைப் செய்திடவும். அடுத்து Notification Area icons என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு நீங்கள் விரும்பும் பவர் மற்றும் வால்யூம் ஐகான்களைத் தேர்ந்தெடுக்கவும். இந்த இரண்டையும் Turn system icons on or off என்று இருப்பதில் on என செட் செய்திடவும். இந்த விண்டோவின் கீழாக Turn system icons on or off என்பதில் நீங்கள் விரும்பியபடி அமைக்கவும். பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
இது குறித்து மேலும் தகவல்களுக்கு http://support.microsoft.com/kb/945011 என்ற முகவரியில் உள்ள மைக்ரோசாப்ட் தளத்தில் உள்ள தகவல்களைப் பார்க்கவும்.

கேள்வி: பல இணைய தளங்களில் யூசர் பெயர் மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து, அதனைப் பயன்படுத்துகிறோம். இதிலிருந்து வெளியேறு கையில், பிரவுசரை மட்டும் மூடுவது தவறு; முறையாக லாக் அவுட் செய்திட வேண்டும் எனக் கூறுகிறார் கள். இது சரியா?கட்டாயம் லாக் அவுட் செய்திட வேண்டுமா?
-சா. அமிர்தராஜன், மதுரை.
பதில்: இது நீங்கள் பயன்படுத்துகிற தளத்தின் தன்மை மற்றும் கம்ப்யூட்டரைப் பொறுத்தது. உங்கள் கம்ப்யூட்டரில் நீங்கள் மட்டுமே, அல்லது உங்கள் நம்பிக்கை பெற்ற குடும்பத்தினர் மட்டுமே பயன்படுத்துகிறார்கள் எனில் தேவை இல்லை. பிரவுசரின் விண்டோவை மூடினால் போதும். ஆனால் உங்கள் கம்ப்யூட்டர் நீங்கள் அறியாமலேயே, ஏதேனும் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களினால் பாதிக்கப் பட்டிருந்தால், அந்த புரோகிராம் உங்கள் யூசர் ஐ.டி. மற்றும் பாஸ்வேர்டினைத் தன்னை அனுப்பியவருக்கு அனுப்பும் வாய்ப்பு உள்ளது. நிதியினைக் கையாளும் தளங்கள், பொருட்களை விற்பனை செய்திடும் தளங்கள் போன்ற தளங்களில் கட்டாயம் லாக் அவுட் செய்த பின்னரே வெளியேற வேண்டும். நிதி கையாளும் பல தளங்கள், சில நிமிடங்கள் நாம் எந்த உள்ளீடும் செய்யாமல் இருந்தால், தானாகவே மூடிக் கொள்ளும் வகையில் அமைக்கபப்ட்டிருக்கும். எனவே கவலை இல்லை. ஆனால், வர்த்தக ரீதியினாலான சில்லரை விற்பனை தளங்கள், வாடிக்கை யாளர்களைத் தூண்டும் வகையில், தளங்களை மூடாமலேயே வைத்திருக்கும். எனவே நாமாகக் கட்டாயம் லாக் அவுட் செய்திட வேண்டும்.

கேள்வி: கேஷ் மெமரி என்பது எந்த மெமரியைக் குறிக்கிறது? ஏன் அதனைக் கேஷ் மெமரி என்று அழைக்கிறார்கள்? இதனால் என்ன பயன் ஏற்படுகிறது?
-எஸ். பத்மநாபன், சென்னை.
பதில்: நாம் அடிக்கடி பயன்படுத்தும் சில பைல்களை அல்லது புரோகிராம்களைக் கம்ப்யூட்டர் அறிந்து கொண்டு, அவற்றைத் தனியாகத் தன் மெமரியில் வைத்துக் கொள்கிறது. இதுவே கேஷ் மெமரி என அழைக்கப்படுகிறது. இந்த கேஷ் என்ற சொல்லுக்கு பணம் என்பது பொருளாகாது. பிடித்து வைத்த என்பதுதான் பொருள். இந்த கேஷ் மெமரி, ராம் மெமரியிலோ அல்லது ஹார்ட் டிஸ்க்கிலோ எழுதப்படலாம்.
இதனால் என்ன பயன்? அடிக்கடி பயன்படுத்தப்படும் தகவல்கள் என்பதால் கேஷ் மெமரியில் இவ்வாறு சேமித்து வைக்கப்படும் பைல்களை கம்ப்யூட்டர் இயக்குபவர் எளிதாகவும் வேகமாகவும் எடுத்துப் பயன்படுத்த முடிகிறது. ஹார்ட் டிஸ்க்கின் டிரைவைத் தேடி ஒவ்வொரு முறையும் சுழல வேண்டியதில்லை. இதனால் கம்ப்யூட்டர் செயல்படும் வேகம் கூடுகிறது.

கேள்வி: எக்ஸெல் ஒர்க்புக்கில், செல் பார்மட்டிங் வேலை மேற்கொள்கையில், மெனு சென்று, கட்டளை வரிகளைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துவது சற்று சுற்று வழியாகத் தெரிகிறது. இதற்கான ஷார்ட்கட் கீகள் உண்டா?
-கே. திவ்யா பிரசாத், கோவை.
பதில்: நீங்கள் சொல்வது சரியே. ஒவ்வொரு செல்லுக்கும் அதன் தன்மைக்கேற்ப பார்மட்டிங் செய்தால், இது இன்னும் அதிக நேரத்தை எடுக்கும். தனி செல் பார்மட்டிங் சார்ந்த சில ஷார்ட்கட் கீகளை இங்கு தருகிறேன். முதலில் பார்மட் செய்திட வேண்டிய செல்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். பின் Ctrl + Shift + ! அழுத்தினால் செல்லில் 50 என உள்ள எண்ணை 50.00 என மாற்றும். Ctrl + Shift + % என்ற கீ இணைப்பு .75 என்பதை 75% என மாற்றும். Ctrl + Shift + @ என்ற கீகளை இணைத்து அழுத்தினால் 15.45 என்ற நேரக் குறியீட்டை 3:45 PM என மாற்றும். Ctrl + Shift + # என்ற கீகள் 11/4/2007 என்ற நாள் குறியீட்டை 4Nov07 என மாற்றும். Ctrl + Shift + $ என்ற கீகள் 50 என உள்ள எண்களை கரன்சியுடன் ($50.00) சேர்த்துக் காட்டும்.

கேள்வி: ஷார்ட்கட் கீகளை ஒவ்வொரு புரோகிராமிற்கும் தனித்தனியே தெரிந்து கொள்வதைக் காட்டிலும் மொத்தமாகப் பெற ஏதேனும் தளம் உள்ளதா?
-ரா.பிரியா மனோஜ், சென்னை.
பதில்: இருக்கிறதே. அதன் முகவரி http://www.shortcutworld.com. இங்கு சென்று, நீங்கள் தேடும் அப்ளிகேஷன் புரோகிராம்களுக்கான ஷார்ட்கட் கீகளை அறிந்து கொள்ளலாம். இந்தத் தளத்தைத் திறந்தவுடன், முதலில் எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் அப்ளிகேஷன் புரோகிராம்களுக்கான ஷார்ட்கட் கீகளைத் தேடப் போகிறீர்கள் என்பதனைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும் இதற்கான பட்டியல் இடதுபுறம் மேலாகத் தரப்பட்டுள்ளது. விண்டோஸ் இயக்கம் எனில், அந்தப் பிரிவில் கிளிக் செய்தால், விண்டோஸ் இயக்கத்தில் இயங்கும் அனைத்து புரோகிராம்களுக்கான பட்டியல் விரிகிறது. இதிலிருந்து தேடும் புரோகிராமினை கிளிக் செய்து ஷார்ட்கட் கீகளைப் பெறலாம்.

கேள்வி: விண்டோஸ் 7 பயன்படுத்துகிறேன். இதில் இயங்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் என்ன பதிப்பு என எப்படி அறிந்து கொள்வது?
-பேரா. டி.நர்மதா, செங்கல்பட்டு.
பதில்: இந்த கேள்விக்கு நன்றி. பல வாசகர்கள் இது குறித்து கேட்டுள்ளனர். இதனைக் கண்டறிவது மிக எளிது. டெஸ்க் டாப்பில் உள்ள இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ஐகானில் டபுள் கிளிக் செய்து, இன்டர்நெட் எக்ஸ்புளோரரை இயக்கவும். மேலாக உள்ள மெனு பாரில், Help என்று இருப்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து, About Internet Explorer என்பதில் கிளிக் செய்திடவும். புதிய விண்டோ ஒன்று திறக்கப்படும். இதில் நீங்கள் பயன்படுத்தும், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் என்ன பதிப்பு என்பதைக் காட்டும் வரி ஒன்று இருக்கும். அதனைக் காணவும். இறுதியாக வந்த பதிப்பு, பதிப்பு 9 ஆகும். பதிப்பு 8 அல்லது அதற்கும் முந்தையதாக இருந்தால், நீங்கள் அதனை எளிதில் அப்கிரேட் செய்து கொள்ளலாம்.

கேள்வி: யு-ட்யூப் வீடியோக்களை கம்ப்யூட்டரில் இறக்கி, விருப்பப்படும் போது பார்க்க என்ன வழி? இதற்கென சாப்ட்வேர் புரோகிராம் இல்லாமல், டவுண்லோட் செய்திட முடியுமா? வழிகள் உள்ளனவா?
-எஸ். ஜானகிராமன், திண்டிவனம்.
பதில்: இதற்கென உள்ள சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை இறக்கி, இன்ஸ்டால் செய்திட நீங்கள் தயங்குகிறீர்கள். தேவையில்லாமல் இடம் அடைத்துக் கொள்ளும் அல்லது பிரச்னைகள் வரும் என்று ஒதுங்குகிறீர்கள், இல்லையா? இந்த எண்ணம் உள்ளவர்களுக்கு உதவுவதற்காகவே, இணையத் தொடர்பில் இருந்தபடி, யு-ட்யூப் வீடியோக்களை இறக்கிக் கொள்ள பல இணைய தளங்கள் உதவுகின்றன. அவற்றின் முகவரிகளைத் தருகிறேன்.
http://www.keepvid.com
http://www.videodownloadx.com
http://www.vdownloader.es
http://boomvid.com
http://www.zilltube.com
http://www.tubeg.com
முதலில் டவுண்லோட் செய்திட வேண்டிய படம் உள்ள தளம் சென்று, அதன் தள முகவரியினை காப்பி செய்து கொள்ளவும். பின்னர் இந்த தளம் ஒன்றுக்குச் சென்று, முகவரி கேட்கப் பட்டுள்ள இடத்தில், அந்த முகவரியை ஒட்டி இயக்கவும். எந்த வகை பார்மட்டில் இந்த வீடியோ வேண்டும் என்ற ஆப்ஷன் தரும் தளங்களும் இதில் உள்ளன.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X