கிளி ஜோசியம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2011
00:00

புகழ்பெற்ற வரமார்த்த குருவின் சீடர்கள், தங்கள் குருவுக்கு எந்த காரியமும் வெற்றியாக நடக்கவில்லை. எனவே, ஜோசியரைத் தேடிச் சென்றனர் அவரது சீடர்கள்.
ஒருவழியாகக் காட்டை கடந்து ஜோசியர் வீட்டை அடைந்தனர். சீடர்களைக் கண்டவுடன் ""வாருங்கள் சீடர்களே! எங்கே இவ்வளவு தூரம்?'' என்று கேட்டார் ஜோசியர்.
""உங்களைப் பார்க்கத்தான் நாங்கள் எல்லாரும் வந்தோம்,'' என்றனர் சீடர்கள்.
""சரி, உள்ளே வாருங்கள்! உங்கள் குரு நலமுடன் இருக்கிறாரா? என் உதவி ஏதாவது உங்கள் குருவுக்குத் தேவைப்படுகிறதா? '' என்று விசாரித்தார்.
""ஜோசியரே! எங்கள் குருவுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகுது. படுத்த படுக்கையாய் இருக்கிறார். எங்கள் குருவுக்காவும், எங்கள் ஆசிரமம் நலன் கருதியும் நாங்கள் எது செய்தாலும் வெற்றி அடைய மாட்டேங்குது; தோல்வி அடைந்து கொண்டே போகுது. மனதுக்கு சந்தோஷமும், நிம்மதியும் இல்லை. அதனால், எங்கள் குருவுக்கு கண் திருஷ்டிபட்டிருக்குமோன்னு ஜோசியம் பார்க்க வந்தோம்,'' என்று சீடர்கள் சொன்னர்.
""கிளி ஜோசியம் பார்க்கணும்னா இருபது ரூபாய் ஆகும். கைரேகை ஜோசியம் பார்க்கணும்னா பத்து ஆகும். ஜாதகம் பார்க்கணும்னா ஐம்பது ரூபாய் ஆகும். இல்ல, பெயர் நாமத்துக்குப் பார்க்கணும்னா ஐந்து ரூபாய் கொடுத்தாப் போதும்,'' என்று தன் விலைப்பட்டியலைப் பார்த்துப் பார்த்து சீடர்களிடம் விலா வாரியாகச் சொன்னார்.
இதைக் கேட்டதும், சீடர்கள் எல்லாரும் ஒன்றாகப்பேசி, சரி முதலில் பெயர் நாமத்துக்குப் பார்ப்போம். திருப்தி இருந்தால், மற்ற ஜோசியம் பார்ப்போம் என்று முடிவுக்கு வந்தனர்.
"ஜோசியர்! உடனே சீடர்களைப் பார்த்து, ""உங்கள் குருவின் பெயர்...? ச்சே! அடிக்கடி சொல்லிக் கிட்டிருப்பேன். இப்போது எனக்கு ஞாபத்துக்கு வர மாட்டேங்குது,'' என்று சொல்லியபடியே தலையைச் சொறிந்தார்.
சீடர்கள் உடனே, ""எங்கள் குருவின் பெயர் உலகப் புகழ்பெற்ற வரமார்த்த குரு,'' என்று பெருமையாகக் கூறி தட்சணையாக ஐந்து ரூபாயைத் தாம்பூலத்தில் வைத்தனர்.
""உங்கள் குருவின் பெயர் நாமப்படி, வர்ற ஆடி மாதம் முப்பது தேதி போகுணும். ஏன்னா? இப்ப ராகு திசை நடக்குது. ஆடி மாதம் முடிஞ்சி ஆவணி 1ல் ராகு நீட்சம் பெற்று சுக்கிரன் திசை ஆரம்பிக்கும். அப்போதுதான் நீங்க நினைக்கிற காரியம் நடக்கும். அதுவரைக்கும் விரைய செலவுதான்,'' என்று சொன்னார்.
""ஜோசியரே! என்ன நாலே சொல்லு சொல்லி முடிச்சிட்டீங்க? இதுக்காகவா, நாங்கள் இவ்வளவு தூரம் நடந்து உங்களைத் தேடி வந்தோம்,'' என்றனர்.
""ம்!... அஞ்சு ரூபாய்க்கு அரைமணி நேரம் கத்து வாங்களாக்கும்? காசுக்குத் தகுந்த மாதிரிதான் நேரம் காலம் பார்த்துக் சொல்ல முடியும்,'' என்றார் ஜோசியர்.
சீடர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
""சரி. கிளி ஜோசியம் பார்த்துக் சொல்லுங்க! '' என்று சீடர்கள் இருபது ரூபாய் தட்சணையாக வைத்தனர்.
""இப்போது உங்கள் குருவுக்கு சனி திசை நடைபெறுகிறது. அதனால் வர்ற மார்கழி இருபது தேதி போகணும். அப்போதுதான் சனி இடம் பெயர்கிறார். அதுவரைக்கும் உங்களுக்கு வீண் செலவுகள், வெட்டி அலைச்சல், அடிக்கடி உங்கள் குருவுக்கு உடல்நிலை சரியிராது. உங்களைப் பார்ப்பவர்கள் எல்லாரும் உங்களை ஏமாற்ற நினைப்பார்கள். நீங்கள் எதற்கும் ஏமாறக்கூடாது. ஏன்னா? சனி திசை முடிஞ்சி, "ஒரு கண்டம் வருது,'' என்று ஜோசியர் சொல்ல...
""ஐயையோ! கண்டமா?'' என்றனர் சீடர்கள்.
""கவலைப்பட வேண்டாம். கண்டம் என்றால் பெரிய ஆசியாக் கண்டமில்லை. சாதாரண எமகண்டம்தான். எமன் எருமை மாட்டுமேலதான் வருவார். அதனால் உங்கள் குருவை எருமை மாட்டுமேல் எக்காரணத்தைக் கொண்டும் நீங்கள் உட்காரவைக்கக் கூடாது. இந்தக் கண்டமும் உயிருக்கு சேதம் அடையும் படியெல்லாம் வராது. அதனால் நீங்கள் பயப்பட வேண்டாம். வர்ற மார்கழி வரை நீங்கள் எந்த வேலையைச் செய்தாலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்,'' என்றார்.
சீடர்கள் உடனே! ""ஆஹா! தங்கள் வாழ்வில் நடந்ததை அப்படியேச் சொல்கிறாரே! இவர் அல்லவா முக்காலமும் உணர்ந்தவர்,'' என்று கூறினர். ஜோசியர் சொன்னது சீடர்களுக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.
""சரி! சீடர்களே! இங்கே பேசிக்கொண்டு உட்கார்ந்திருங்கள்! நான் இதோ வந்து விடுகிறேன்,'' என்று தாம்பூலத்தட்டில் இருந்த காசை எடுத்துக் கொண்டு, "பக்கத்துக் கடையில காப்பி சாப்பிட்டுவிட்டு வருவோம்!' என்று போனார்.
""அப்பாடா! இப்பக் காப்பி, மதியம், பிரியாணி நல்லா மூக்கை புடிக்கச் சாப்பாடு. இன்றைக்கு நல்லா ஒரு தூக்கம் போடலாம். இன்றைய பொழுது எனக்கு இனிமையாய்க் கழியும். இரவு சாப்பாட்டிற்கு எப்படியும் அவர்களிடமிருந்து பணம் பெற்றுவிடலாம்...'' என்று நினைத்துக் கொண்டே கடையை நோக்கிப் போனார்.
""சீடர்களே! இருபது ரூபாய்க்கே இந்த ஜோசியர் இவ்வளவு சொல்கிறார். இப்பதான் நம் மனதுசுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கு. அப்போ, ஐம்பது ரூபாய்க்கு பார்த்தா, இன்னும் நம்மள என்னென்ன புடிச்சிருக்குன்னு நிறைய சொல்லுவார் போல இருக்கே,'' என்றான்.
உடனே பாவாடை, ""சீடர்களே! ஜோசியர் சொன்னதும் நாம் நம் குருவுக்கு யானை வாங்கிவிட்ட மாதிரி எனக்கு சந்தோஷமாய் இருக்கு,'' என்றான்.
மமுட்டி உடனே, ""எனக்கு இப்போது தான் ஞாபகம் வருது. ஜோசியர் வந்ததும் நம் குருவுக்கு யானை எப்போது கிடைக்கும்? என்று மறந்து விடாமல் கேட்போம்,'' என்றான்.
"ஆமாம்! ஆமாம்!' என்று மற்ற சீடர்கள் சொன்னனர்.
ஜோசியர் ஏப்பம் விட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தார்.
""சீடர்களே! என்ன முடிவு எடுத்திருக்கிறீர்கள்?'' என்று கேட்டார்.
""நாங்கள் கைரேகை ஜோசியம் பார்க்கலாம் என்று முடிவெடுத்து உட்கார்ந்திருக்கிறோம்,'' என்றனர்.
""நானும் அதைத் தான் சொல்வீர்கள் என்று நினைத்தேன்... சரி! கைரேகைக்குப் பார்க்க வேண்டுமானால் உங்கள் குருவினுடைய கை வேணுமே!'' என்றார்.
உடனே, சண்டன் எழுந்து, ""ஜோசியரே! எங்கள் குருவுக்கு நான் வலது கைப் போன்றவன். அப்படியானால் எனது வலது கையைப் பார்த்துச் சொல்லுங்கள்,'' என்றான்.
உடனே முண்டன் எழுந்து, ""ஜோசியரே! எங்கள் குருவுக்கு நான் இடது கைப் போன்றவன், அப்படியானால் எனது இடது கையைப் பார்த்துச் சொல்லுங்கள்,'' என்றான்.
""சீடர்களே! கைரேகையைப் பொறுத்தவரை இரண்டு கையையும் பார்த்துச் சொல்வது அல்ல. ஆண்களுக்கு வலது கையும், பெண்களுக்கு இடது கையும் பார்க்க வேண்டும் என்று ஒரு வரைமுறை இருக்கிறது,'' என்று ஜோசியர் சொல்ல சீடர்கள் அமைதியாயினர்.
சண்டன் காணிக்கையாகப் பத்து ரூபாயை வைத்தான்... காசைப் பார்த்தவுடன் சண்டனுடைய வலதுகையைப் பார்த்துக் சொல்லலானார்.
""உங்கள் குருவுடைய கைரேகைப்படிப் பார்த்தால், உங்கள் குருவுக்கு இதுவரை கல்யாணம் நடக்கவில்லை. இனியும் நடப்பதென்று உத்தேசம் இல்லை. உங்கள் குரு நேர்மையிலும் குணத்திலும் நல்லவர். பிறரை சாபமிடுதல் வரத்தில் வல்லவர்,'' "" என்று ஜோசியர் புகழாரம் பாட ஆரம்பித்தார்.
அப்போது சண்டன் எழுந்து, ""ஜோசியரே! எங்கள் குருவுக்கு யானை கிடைக்குமா?'' என்பதைப் பற்றி சொல்லுங்கள் என்றான்.
""உங்கள் குருவுக்கு சகட நடைபெறுகிறது. அதனால் வருகிற பங்குனி 15 தேதி போனாதான் சொல்ல முடியும். சகடையில் எந்த நல்ல காரியம் பண்ணினாலும் விருத்தியடையாது. நான் சொல்கிறதை மீறி நீங்க ஏதாவது செஞ்சீங்கன்னா, அது உங்க குருவின் உயிருக்கே ஆபத்தாக முடியும். அதனால நீங்க யானை வாங்க வர்ற பங்குனி மாதம் வரை பொறுத்திருக்கணும்,'' என்று தன் பேச்சை முடித்தார்.
""சரி! சீடர்களே! சீக்கிரம் ஜாதகம் பாருங்கள். நேரமாகுது வயிறு பசிக்குது. பொழுது இருட்டுறதுக்குள்ள ஆசிரமம் திரும்பியாகணும்,'' என்று பாவாடை பதைத்தான்.
பாவாடைச் சொன்னதைக் கேட்ட முண்டன், ""மடையா! ஜாதகம் பார்க்கணும்னா, நம் குருவுடைய ஜாதகம் வேண்டும். அது கருப்பா, சிவப்பான்னு கூட நமக்கு தெரியாது! நாம் அதைக் கொண்டு வரவும் இல்லை... என்றான்.
""சீடர்களே! உங்களுக்குள் சண்டை வேண்டாம். உங்கள் குருவின் ஜாதகமே என்னிடம் இருக்கிறது. உங்கள் குரு சின்ன வயதில் என்னிடம் ஜாதகம் பார்க்க வந்தார். என்னிடமே மறந்து விட்டுவிட்டுச் சென்றுவிட்டார். அதை நான் பத்திரமாக எடுத்துப் பாதுகாத்து வைத்திருக்கிறேன். நீங்கள் பார்க்க வேண்டும் என்று சம்மதித்தால், அதை எடுத்து வந்து காட்டுவேன்,'' என்றார்.
சீடர்கள் உடனே ஐம்பது ரூபாயை தட்சணையாக வைத்து, தங்கள் குருவின் ஜாதகத்தைப் பார்க்க ஆவலாய் இருந்தனர்.
பரணியின் மடித்து எப்போதோ வைக்கப்பட்ட ஒரு 'உலக மேப்பை' எடுத்துக் காட்டினார். அதில் அவரது பேரன் ஒரு சில ஊர்களை மட்டும் எழுதி வண்ணமையினால் கட்டம் கட்டமாகத் தீட்டியிருந்தான்.
அதைப் பார்த்ததும் சீடர்களுக்கு மகிழ்ச்சி, ""ஆஹா! நம் குருவின் ஜாதகம் ஒரே வண்ணமயமாக இருக்கிறது,'' என்று புன்னகைப் பூத்தனர்.
அதை வைத்து ஜாதகம் சொல்லலானார் ஜோசியர், ""உங்கள் குருவுக்கு ஏழரை நாட்டு சனியன் பிடிச்சிருக்கு. அது இன்னும் ஏழரை வருஷத்திற்குப் பிடிச்சி ஆட்டும்,'' என்று சொல்லும் போதே.
இடையில் முண்டன் குறுக்கிட்டு, ""ஜோசியரே! நாங்கள் ஐந்து பேரும் எதற்கு இருக்கிறோம்? எங்கள் குருவை ஆடாமல் பிடித்துக் கொள்வோம்,'' என்றான்.
""இன்னும் ஏழரை வருஷம் வரைக்கும் பொருள்வரும், ஆனால், தங்காது. வீண்விரைய செலவுகள் ஏற்படும். ஏன்னா? ராகுவும் கேதுவும் எதிரும் புதிருமா நிக்குறாங்க, அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி, ஓடிப்போனவனுக்கு ஒன்பதாமிடத்தில் குரு, என்று சொல்வது போல, உங்கள் குருவின் ஜாகத்தில் அஷ்டமத்தில் சனி வலுவாக உட்கார்ந்துள்ளான். இன்னும் ஏழரை போன பிறகுதான் குருபார்வை வருகிறது. அப்போதுதான் நீங்கள் நினைத்த காரியம் கைக்கூடும்,'' என்று சொன்னார்.
""சீடர்களே! நாம் நம் குருவின் பெயர் நாமத்துக்கு மட்டும் பார்த்து விட்டு அப்போதே கிளம்பியிருக்கலாம். அப்போதும் ஆடிமாதம் போனால் நினைத்தது நிறைவேறும் என்று சொன்னார். இப்போது நம் பணமும் போய், இன்னும் ஏழரை வருஷம் போகணும் என்றார் எப்படி ஏழரை வருஷம் காத்திருக்க முடியும்,'' என்றான் பாவாடை.
""சீடர்களே! அப்போது சுருக்கமாக சொன்னேன். இப்போது அலசி ஆராய்ந்து முழுவதும் சொல்கிறேன். நீங்கள் செலுத்தும் காணிக்கையை நான் மட்டும் சாப்பிடப் போறதில்ல. அதில பாதி தட்சணையை என் குல தெய்வமான "இரத்தக் காட்டேரி சூலக் கருப்பனுக்கு செலுத்தினால்தான் எனக்கு வாக்கு கொடுப்பான்,'' என்றார் ஜோசியர்.
""ஜோசியரே! இதற்குப் பிராயச் சித்தம் ஏதும் கிடையாதா? இதற்கு ஏதேனும் பரிகாரம் செய்ய முடியும்னா சொல்லுங்கள்! நாங்கள் செய்கிறோம்,'' என்றனர் சீடர்கள்.
உடனே ஜோசியர், ""உங்கள் குருவுக்கும், உங்கள் ஆசிரமத்திற்கும் தோஷம் இருப்பது போல் தெரிகிறது. இந்த தோஷத்தை நீக்கினாலொழிய நீங்கள் நிம்மதியாக இருக்க முடியாது; நினைத்தவை யாவும் கைக்கூடாது,'' என்றார்.
""அப்படி என்ன தோஷம் உள்ளது? என்று விவரமாகக் கூறுங்கள். நாங்கள் அதனை உடனே நீக்கிவிடுகிறோம்,'' என்றான் சண்டன்.
""உங்கள் ஆசிரமத்தில் உள்ள வாசற்படியில் தெற்கு நோக்கி உள்ளது. அதை அடைத்துவிட்டு, வாசற்படியை மேற்கு நோக்கி வைக்க வேண்டும் அப்போழுதுதான் விருத்திக்கு வரும்,'' என்றார் ஜோசியர்.
உடனே முண்டன் எழுந்து, ""ஜோசியரே! எங்களுக்கு மேற்குத் திசை எது என்பது தெரியாதே?''என்றான்.
உங்கள் குருவைக் கேட்டால், அந்தத் திசையைக் கூறுவார். சரி, பொழுது இருட்டுறதுக்குள்ள போய்ச் சேருங்கள். இல்லையென்றால், உங்கள் குரு ரொம்ப வேதனைப்படுவார். உங்கள் குருவிடம் நான் ரொம்ப விசாரிச்சதா சொல்லுங்க, என்று சொல்லிக் கொண்டிருக்கையில் தன் வீட்டில் புளிச்ச மோர் இருப்பது நினைவுக்கு வர, அதை எடுத்து வந்து உப்புப் போட்டுக் கலக்கி கொடுத்து, ""சீடர்களே இந்த மோரைக் குடிச்சிட்டு தெம்பாய்ச் செல்லுங்கள்...'' என்று ஜோசியர் சொல்ல, சீடர்களும், பசிமிகுதியால் குடித்துவிட்டுச் செல்ல தயாராயினர்.
""ஜோசியரே! நீங்கள் சொன்ன மாதிரி செய்தால், எல்லாம் நல்லபடியாக நடக்கும்ங்களா?'' என்று சீடர்கள் மீண்டும் கேட்டனர்.
""ம்... பயப்படாமப் போங்க! ஆனா நான் சொன்ன திசையை மறந்து மாத்தி வச்சுடாதீங்க. எதுக்கும் நீங்க எல்லாரும் ஆசிரமத்தை அடையும் வரை, மேற்குத் திசை... மேற்குத் திசை மேற்குத் திசை... என்று சொல்லிக் கொண்டே செல்லுங்கள்,'' என்று அனுப்பி வைத்தார்.
***

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தேவி.s - அலங்காநல்லூர்,இந்தியா
27-செப்-201112:24:18 IST Report Abuse
தேவி.s இந்த கதை மிகவும் நகைசுவையாக இருந்தது ..........இது போன்ற கதைகளை அதிகமாக வெளிஇடுங்கள் ...................நன்றி.
Rate this:
Share this comment
Cancel
காயத்ரி - kanchipuram,இந்தியா
24-செப்-201118:54:48 IST Report Abuse
காயத்ரி குழந்தைகள் படிக்கும் இது போன்ற கதைகள் நல்ல சிந்தனைகளை வளர்பதாகவும், படிக்கும் ஆர்வத்தை தூண்டுவதாகவும் இருக்கட்டும். எதிர்மறையான என்ணத்தை வளர்பதாக இருக்க வேண்டாம். சிறுவர்மலர் மொட்டுக்களை மலர வைப்பதாக இருக்கட்டும். செடியை கருக்க வேண்டாம். ஜோதிடம் சொல்பவர்கள் அனைவரும் பொய்யானவர்கள் என்ற பிரசாரம் குழந்தைகளுக்கு தேவையற்றது.
Rate this:
Share this comment
Cancel
Ayshwarya - Chennai,இந்தியா
23-செப்-201114:04:41 IST Report Abuse
Ayshwarya ரொம்ப கேவலமான கதை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X