அதிமேதாவி அங்குராசு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2011
00:00

வந்தேமாதரம்! என் தாய் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்!

அன்பு கலாம்!
ஒருநாள் அன்பு கலாம் அவர்களுக்கு, அகில் குப்தா என்ற மாணவன், இ-மெயிலில் செய்தி ஒன்றை அனுப்பி இருந்தான்.
அதில், "சி.பி., எஸ்.இ' பள்ளியில் படிக்கும் நான், எல்லா பாடங்களிலும் 80,90 என மதிப்பெண்கள் பெற்றிருக்கிறேன். இயற்பியல் பாடத்தில் 13 மதிப்பெண் பெற்று இருப்பதால், நான் தேர்வில் தோற்றதாக சொல்கின்றனர் அங்கிள்!
எனக்கு மறுமதிப்பீடு செய்யும்படி உத்தரவிட்டு, அந்த பேப்பரை மீண்டும் திருத்த சொல்லுங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருந்தான். அவன் வேண்டுகோள் நியாமானது என்று உணர்ந்த கலாம் அவர்கள், மறுமதிப்பீடு செய்ய கல்வி அதிகாரிக்கு உத்தரவிட்டார்.
பின், அந்த மாணவன் 85 மதிப்பெண் இயற்பியல் பாடத்தில் பெற்றதாக அறிவித்தனர். அளவற்ற மகிழ்ச்சியில் கலாம் அவர்களுக்கு, நன்றி தெரிவித்து விட்டு, உயர் படிப்பில் சேர்ந்தான் அந்த மாணவன்.

அம்மா! ப்ளீஸ் செஞ்சுதாங்கம்மா!
இது "கோபி 65' பண்ணி சாப்பிடும் நேரம்.
தேவையானவை: பெரிய துண்டுகளாக நறுக்கிய காலிப்ளவர்-2 கப், தயிர்-கால் கப், மிள காய்த் தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள்-கால் டீஸ்பூன், மைதா மாவு, சோள மாவு - தலா கால் கப், அரிசி மாவு-ஒரு டேபிள் ஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப், இஞ்சி, பூண்டு விழுது-ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய்- தேவையான அளவு.
செய்முறை: தண்ணீரில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, நறுக்கி காலிப்ளவரை போட்டு 15 நிமிடம் அப்படியே வைக்கவும். பிறகு நீரை வடிக்கவும். பின் கொதிக்கும் நீரில் காலிப்ளவரை போட்டு எடுத்து, அகலமான பாத்திரத்தில் போடவும். அதனுடன் அரிசி மாவு, மைதா மாவு, சோள மாவு, வெங்காயம், மிளகாய்த்தூள், இஞ்சி, பூண்டு விழுது, உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் கலக்கவும். தயிரை சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக பிசறி அரை மணி நேரம் ஊற விடவும். கடாயில் எண்ணெய் விட்டு, மசாலா கலந்த காலிப்ளவரை போட்டு பொரித்து எடுத்து, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

என் பட்டு கேசமே!
காற்று, மாசுபட்ட சுற்றுப்புறம், சூரிய ஒளி, உலர்ந்த பருவநிலை, தேவைக்கு அதிகமாக சீவி கொள்வது, முடிகளை இறுக்கி கொள்வது போன்ற கவனிப்பு செலுத்தாத பல அம்சங்களால், முடிக்கு தீவிர பாதிப்புகள் ஏற்படுவதில்லை.
பிளவுபட்ட முடி நுனிகள் தேவைக்கு அதிகமாக சீவிக் கொள்வதால் உண்டாகும் ஒரு பொதுவான விளைவு. எப்பொழுதெல்லாம் அது உங்கள் கண்களில் படுகிறதோ, உடனே அவற்றை வெட்டி எறிந்து விடுங்கள். இல்லாவிட்டால், பிளவு நுனியிலிருந்து அடி வரை பரவி விடும்.
மிகவும் மெலிந்த பற்களுடைய சீப்புகளினால் வாரிக்கொண்டால் முடிகளில் முடிச்சுகள் விழுவதை தவிர்க்க முடியாது. ஈரமான முடிகளில் அதுபோன்ற சீப்புகளினால் வாரி கொள்ளாதீர்கள். தலை வாரிக்கொள்ளும்போது, சரியான முறையை கையாள வேண்டும்.
அதாவது, அடியிலிருந்து மேல் நோக்கி செல்ல வேண்டும். பின்பக்கமாக வாரி கொண்டால், முடிகளின் செதில்கள் உடைந்து விடும். ஒவ்வொரு இரவிலும் 100 தடவை வாரி கொள்ள வேண்டும் என்ற கட்டுக்கதையை நம்பாதீர்கள். மேலே சொன்ன அனைத்து பிரச்னைகளுக்கும் இது வழி வகுத்துவிடும்.

வண்ண மாயாஜாலம்!
முடி வண்ணங்களில் இருக்கும் அம்மோனியா, முடித்தண்டை பிளந்து, வண்ணம் அதில் உட் செல்ல திறக்கிறது. இதை தொடர்ந்து செய்தால் முடி சேதமடைந்து உலர்ந்து உதிர தொடங்குகிறது.
இளஞ்சிவப்பு மற்றும் ஊதா வண்ணங்கள் முடிகளில் வண்ணம் ஏற்றுவதற்கு முன்னர் உங்கள் முடியை நிறம் வெளிற செய்யும். இது மிகவும் அபாயத்தை விளைவிக்கும். எப்போதும் ஒரு நல்ல ஷாம்பூவை உபயோகியுங்கள். இதனால் முடி வண்ணம் மங்காமல் இருக்கும். சூரிய வெளிச்சத்தை தவிர்த்தல் முடிக்கற்றைகளுக்கு நல்லது.
முக்காடு அல்லது ஒரு ஸ்கார்ப் உபயோகிப்பதும், நல்லதே. வண்ணம் பூசிய முடிகளுக்கு, குளோரின் பரம எதிரியாதலால் மிக அதிக நேரத்திற்கு நீச்சலடிப்பதும் தீங்கானதே. உங்கள் முடி உதிராமல் எப்போதும் ஆரோக்கியமாக இருக்க நிறைய தண்ணீர் குடியுங்கள். ஒவ்வொரு நான்கு, ஆறு வார இடைவெளிகளில் உங்கள் முடியை "ட்ரீம்' செய்து கொள்ளுங்கள்.

திரைப்பட சர்டிபிகேட்!
திரைப்படங்களுக்கு வழங்கப்படும் தணிக்கை சான்றிதழ்களில் யுனிவர்சல் (U) என்பது எல்லாரும் எல்லா வயதினரும் பார்ப்பது.
(UA) என்பது பெற்றோர்களின் வழிகாட்டுதல்படி குழந்தைகளும் பார்ப்பது. (A) என்பது வயது வந்தவர்களுக்கு மட்டும் என்ற பிரிவுகளில் வழங்கப்படுகிறது. இதில் (S) என்ற வகையும் உண்டு. இது மருந்துவர்களும், அறிவியல் துறை சம்பந்தப் பட்டவர்களும் பார்ப்பதற்காக மட்டும் உள்ள படங்கள். நம் ஊரில் இதுவரை (S) சான்றிதழ் தந்ததில்லை என்கின்றனர் தணிக்கை அலுவலக அதிகாரிகள்.

தினமும் பார்க்க வேண்டிய தாள்!
* நான் என்னை மதிக்கிறேன்.
* என்னிடம் திறமை இருக்கிறது என்பதை மனப் பூர்வமாக நம்புகிறேன்.
* என்னால் சாதித்து காட்ட முடியும்.
* இப்போது என்னிடம் இல்லாத திறமைகளை பயற்சியின் மூலம் வளர்த்து கொள்வேன்.
* எந்த சமயத்திலும் என்னை பற்றிய எனது தன் மதிப்பீடு குறைந்து போகாமல் பார்த்து கொள்வேன்.
* இதுவரை வாழ்ந்த காலம் வீணாகிவிட்டது என்று வருத்தப்பட மாட்டேன்.
* இனிமேல் வாழ போகும் காலத்தை பயனுள்ளதாக கழிப்பேன்.
* நான் சாதிக்க பிறந்திருக்கிறேன்.
* சாதிப்பேன்.
* சாதிக்க ஆரம்பித்து விட்டேன்.
இது தொடரும். இதை உறுதியாக நம்புகிறேன். இதை ஒரு தாளில் எழுதி உங்கள் மேஜை மேல் வைத்து கொள்ளுங்கள். பெரிதாக எழுதி அறையில் மாட்டி வையுங்கள். கையகல தாளில் குறித்து பையில் வைத்து கொள்ளுங்கள். அடிக்கடி இந்த வாசகங்களை படியுங்கள். மற்றவர்கள் இதை பார்த்தால் என்ன நினைப்பார்களோ என்று நினைப்பதை விடுங்கள். முன்னேற வேண்டியது நீங்கள்தானே? அப்படியிருக்க மற்றவர்களை பற்றிய கவலை உங்களுக்கு ஏன்?

அன்புடன் அங்குராசு

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
geetha - trichy,இந்தியா
27-செப்-201116:26:45 IST Report Abuse
geetha வெரி nice
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X