மினி தொடர் - யார் பெரியவன்?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2011
00:00

செல்வமும், அறிவும் ஒருநாள் சண்டை போட்டுக் கொண்டன. அச்சண்டைக்குக் காரணம், அவையிரண்டுக்குள் யார் பெரியவன் என்னும் பிரச்னையே. சண்டையிட்டுக் கொண்ட அவையிரண்டும், அதற்கு ஒரு முடிவு காண்பதற்காக ஓர் அரசனைத் தேடிச் சென்றன.
அவ்வரசன் அரண்மனையில் இல்லை. நகரில் திருடர்களின் பயம் அதிகரித்திருந்தது. அரண்மனையிலிருந்து கூடப் பொருள்கள் காணாமல் போய்க் கொண்டிருந்தன. ஆகையால், அவ்வரசன் மாறு வேடமணிந்து வெளியே சென்றிருந்தான்.
அது மழைக்காலம். லேசாக மழை பெய்து கொண்டிருந்தது. அரசன் கையில் குடையுடன் தான் புறப்பட்டுச் சென்றான். சிறிது தூரம் சென்றதும் மழை அதிகரிக்கவே, ஒரு வீட்டின் திண்ணையிலே ஒதுங்கி நின்றான். தன்னை எவரும் அடையாளம் கண்டு கொள்ள முடியாதபடி மீசை, தாடி அணிந்து கருப்புத் துணியினால் தலையில் முக்காடு இட்டுக் கொண்டிருந்தான்.
அந்த வீட்டுக்காரரின் மனைவி, உணவு உண்ணப்பட்ட எச்சில் இலையை வெளியே எறிவதற்காகக் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தாள். திண்ணையிலே பதுங்கி நின்ற உருவத்தைக் கண்டு அஞ்சி, ""திருடன்! திருடன்!'' என்று கூச்சலிட்டாள்.
அக்கூச்சலைக்கேட்டு அண்டை அயலார் விரைந்தோடி வந்தனர். அனைவரும் ஒன்று சேர்ந்து, அரசனைக் கட்டிப் பிடித்துக் கடுமையாக அடிக்கத் தொடங்கினர்.
அவ்வரசனோ அதிர்ச்சியடைந்தவனாகி, ""நான்தான் உங்கள் அரசன்! அரசன்!'' என்று கத்தினான்; மிரட்டியும் பார்த்தான்.
ஒரு பலனும் இல்லை.
அவர்கள் அனைவரும் அரசனுடைய வார்த்தைகளைப் பொருட்படுத்தவேயில்லை. நன்கு அடித்து அவனை நடுத்தெருவிலே இழுத்துத் தள்ளிவிட்டு, தத்தம் வீட்டுக்குச் சென்று விட்டனர்.
நடுத்தெருவிலே விழுந்து கிடந்த அரசனின் கால் எலும்பு முறிந்துவிட்டது. அவன் வேதனையுடன் முனகியவாறு கிடந்தான்.
அப்போது செல்வமும், அறிவும் அவ்வழியாகச் சென்று கொண்டிருந்தன. வீதியிலே கிடந்த அரசனைக் கண்டு இரக்கங்கொண்டு, ""நீ யாரப்பா? உனக்கு என்ன நேர்ந்தது?'' என்று கேட்டன.
அரசன் நடந்தவற்றை விவரமாக கூறினான்.
அதைக் கேட்ட செல்வமும் அறிவும், அவன் அரசன் என்று அறிந்ததும், அவனிடமே தங்களுடைய கேள்விக்குச் சரியான தீர்ப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டன.
அரசன் சிறிது யோசித்தான். பின், ""நீங்கள் இருவருமே சமமானவர்கள் என்பதே என் கருத்து!'' என்று கூறினான்.
அதைக் கேட்டுச் செல்வமும், அறிவும் திருப்தி அடையவில்லை. ஆகையால், அரசனைப் பார்த்து, ""நீங்கள் கூறியது சரியான தீர்ப்பன்று. எங்கள் இருவரில் யார் உன்னுடைய முறிந்த காலைச் சரி செய்கிறோமோ அவரே பெரியவர்!'' என்றன.
அரசனும் அதற்கு இணங்கினான்.
செல்வம் உடனே பொன்னையும் மணிகளையும் கொண்டு வந்து முறிந்த காலைச் சுற்றிப் பரப்பியது. அவ்வாறு செய்ததால் கால்வலி அதிகமாயிற்றேயன்றி சிறிதும் குறையவில்லை.
அறிவு அதன் பின் ஒரு சிறிய மரத் துண்டைக் கொண்டு வந்து, ஒடிந்த காலை நிமிர்த்தி அதில் வைத்துக் கட்டியது. காட்டிற்கு சென்று பல விதமான மூலிகைகளைத் தேடி எடுத்துக் கொண்டு வந்து, காலில் வலி இருந்த இடத்தில் வைத்துக் கட்டியது. அவ்வாறு செய்ததால் வலி சிறுகச் சிறுகக் குறைந்து கொண்டே வந்து, பின் அறவே இல்லாமற் போய்விட்டது. அரசனால் மெதுவாக எழுந்து நடக்கவும் முடிந்தது.
அதைக் கண்ட அறிவு, உடனே ""பார்த்தாயா! நான்தான் பெரியவன்!'' என்று பெருமிதமாகச் சொல்லியது.
செல்வம் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. ""முறிந்த காலைச் சரி செய்வது, வல்லமையை வெளிப்படுத்தக் கூடிய ஒரு காரியமாகுமா? இதை ஒரு பெரிய காரியம் என்றுதான் சொல்ல முடியுமா? ஆகையால் இதை ஏற்றுக் கொள்ள முடியாது!'' என்று சொல்லி விட்டது.
அதன் பின் அவை இரண்டும் மேலும் தொடர்ந்து சென்றன. சிறிது தூரம் சென்றதும் ஓர் ஏழைச் சிறுவனைக் கண்டன.
அச்சிறுவன் பரம தரித்திரனாக இருந்தான். அவனது உடல் எலும்புக் கூடாகக் காட்சியளித்தது. அவனுக்கு உண்ண உணவில்லை. ஆகையால், புல் பூண்டுகளைத்தான் தின்று பசியாறினான்.
செல்வம் அச்சிறுவனைக் கண்ட அளவில், ""இந்தத் தரித்திரச் சிறுவனைப் பார்! இவனை விட ஏழையை நீ பார்த்திருக்கின்றாயா?'' என்று கேட்டது.
அதற்கு அறிவு, ""இல்லை!'' என்று பதில் கூறியது.
""சரி, நீ பார்த்துக் கொண்டே இரு. நான் இவனை இந்நாட்டு அரசகுமாரிக்குக் கணவனாக்கி விடுகின்றேன். அப்போது நீ என்னை பெரியவன் என்று ஏற்றுக் கொள்வாயா?''
இவ்வாறு செல்வம் கூறியதைக் கேட்ட அறிவு, ""சரி!'' என்று சொல்லித் தன் மனத்திற்குள் சிரித்துக் கொண்டது.
சற்று நேரத்திற்குப் பின் அச்சிறுவன் தன்னுடைய வயலை உழ ஆரம்பித்தான். கரடு முரடாக இருந்த நிலத்தை அப்போது சுலபமாக உழ முடிந்தது. நிலத்தை உழுத சிறுவன், மிகவும் உற்சாகமாக விதை விதைத்தான். பயிர் முளைத்து வளர்ந்து, கதிர்கள் செழிப்பாக முதிர்ந்தன. தானிய மணிகள் கொத்துக் கொத்தாகக் காற்றில் அசைந்தாடின. தன் வயலில் விளைச்சலைக் கண்ட சிறுவன் வியப்படைந்தான்.
என்ன ஆச்சரியம்! கதிர்கள் முற்றிலும் வெறும் தானிய மணிகள் அல்ல, பொன்மணிகளே உதிர்ந்தன. பொன் விளையும் அப்பூமியின் புகழ் எங்கும் பரவியது.
அந்த அதிசயச் செய்தி, அந்நாட்டு அரசனின் காதுக்கும் எட்டியது. அரசன் உடனே தம் அமைச்சர்களுடன் சென்று அந்த வயலைப் பார்வையிட்டான். வயல் முழுவதும் தங்கக் கதிர்கள்! பொன் மணிகளாக காட்சியளித்தன. அவற்றைக் கண்ட அரசன், ""ஆஹா! என்ன அற்புதம்!'' என்று சொல்லி வியந்தான்.
அவ்வாறு வியந்த அரசன், அவ்வயலின் அருகே நின்று கொண்டிருந்த சிறுவனை நோக்கி, ""சிறுவனே! இந்த வயலை எனக்குக் கொடுத்து விடு. நான் என் மகளை உனக்குத் திருமணம் செய்து கொடுக்கிறேன்!'' என்று கூறினான்.
அதைக் கேட்ட சிறுவனும் அதற்கு இணங்கினான்.
(-1 தொடரும்)

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X