இந்த வார இணையதளம் இணைய வெளியில் பைல் சேமிக்க
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

26 செப்
2011
00:00

ஹார்ட் டிஸ்க், சிடி, டிவிடி, ப்ளாஷ் ட்ரைவ் என எந்த மீடியாவில் நாம் பைல்களைப் பதிந்து சேமித்து வைத்தாலும், என்றாவது ஒரு நாள், ஏதேனும் ஒரு வழியில் அவை கெட்டுப் போய் நமக்குக் கிடைக்காமல் போகலாம். நம் ஹார்ட் டிஸ்க் கெட்டுப் போகாது என்ற எண்ணத்தில், பைல்களைக் கம்ப்யூட்டரிலேயே பதிந்து வைக்கிறோம். ஆனால், நகர்ந்து செயல்படும் வகையில் அது இயங்குவதால், நாம் எதிர்பாராத ஒரு நாளில், அதன் இயக்கம் முடங்கிப் போய் பைல்களை நம்மால் பெற இயலாமல் போய்விடுகிறது. என்ன செய்தாலும் பைல்கள் கிடைப்பது இரண்டாம் பட்சம் தான் என்று சொல்லும் அளவிற்கு நிலைமை மோசமாகிறது. மற்ற மீடியாக்களின் வாழ்நாளும் அதே போல் தான்.
இதற்கான பல தீர்வுகளில் ஒன்றாக கிளவுட் கம்ப்யூட்டிங் முறையில் ஒரு தீர்வு கிடைக்கிறது. பல இணைய தளங்கள், நம் பைல்களை பதிந்து சேவ் செய்து வைத்திட வசதிகளை நமக்குத் தருகின்றன. ஓரளவில் பைல்களைச் சேமித்து வைத்திட இந்த வசதி இலவசமாகவே தரப்படுகிறது. இந்த வகையில் சி.எக்ஸ் (cx) என்னும் இணைய தளம் இயங்குகிறது. இந்த தளத்தின் இணைய முகவரி: http://www/cx.com. இந்த தளம் சென்று, நம் மின்னஞ்சல் முகவரி, யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்துப் பதிவு செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு வருக்கும் 10 ஜிபி இடம் தரப்படுகிறது. பதிந்தபின், இந்த தளத்தில் லாக் இன் செய்து, நாம் பதிந்து சேவ் செய்திட விரும்பும் பைல்களை, நம் கம்ப்யூட்டரிலிருந்து அப்லோட் செய்திடலாம். மிக எளிதாக இதனை மேற்கொள்ளலாம். நாம் எத்தனை பைல்களை அப்லோட் செய்துள்ளோம் என்ற கணக்கும் காட்டப்படுகிறது.
இந்த தளத்தில், எந்த ஒரு வகை கம்ப்யூட்டரிலிருந்தும் பைல்களை அப்லோட் செய்திடலாம். விண்டோஸ், மேக் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். மேலும், இணைய இணைப்பு வசதி கொண்ட மொபைல் போன்களிலிருந்தும் அப்லோட் மற்றும் டவுண்லோட் பணிகளை மேற்கொள்ள லாம். இதனால், நாடு விட்டு நாடு சென்றாலும், ஓரிடத்தில் இணைய இணைப்பே கிடைக்கவில்லை என்றாலும், கிடைக்கும் இடத்தில் இருந்து பைல்களைக் கையாளலாம்.
பின்னர், இதனை மீண்டும் நம் கம்ப்யூட்டருக்கு டவுண்லோட் செய்வதும் எளிதாகவும், வேகமாகவும் நடைபெறுகிறது. ஒவ்வொரு பெயர் பதிவிற்கும் 10 ஜிபி இடம் தரப்படுவதால், தனி நபர் பயன்பாட்டிற்கு இது மிகவும் உகந்தது. எந்த இடத்திலிருந்தும், எந்த கம்ப்யூட்டரிலிருந்தும் இந்த பைல்களை டவுண்லோட் செய்து கொள்ளலாம் என்பதால், அடிக்கடி பயணம் மேற்கொள்வோர், தங்கள் பைல்களைப் பாதுகாப்பாக வைத்திட இது ஒரு சிறந்த வசதி ஆகும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GS - BANGALORE,இந்தியா
01-அக்-201111:18:45 IST Report Abuse
GS லிங்க் ஓபன் ஆகலை
Rate this:
Share this comment
Cancel
vishnu - srivilliputtur,இந்தியா
29-செப்-201119:50:35 IST Report Abuse
vishnu sir, நான் i5 processor சிஸ்டம் use பண்றேன் அதில் எப்படி விண்டோஸ் 7 install பண்றது.நான் விண்டோஸ் 7 install செய்தாலும் அது தானாக restart ஆகி விடுகிறது இதற்கு என்ன வழி
Rate this:
Share this comment
Cancel
thiyagarajan - salem,இந்தியா
29-செப்-201115:53:20 IST Report Abuse
thiyagarajan sir, I am since four years reader of dinamalar computer malar, really i accept the service doing for computer beginners, students, merchants and all is great , every week the new articles are coming , take example myself i didnot took any training for computer ,but now i able to do the basic computer operation like send email, typing ms word, installing antivirus, etc i learnt thro dinamalar only , for that i very thanks for dinamalar publisher yours thiyagarajan
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X