பயன்படுத்த வேண்டிய எக்ஸெல் டிப்ஸ்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

26 செப்
2011
00:00

சில டிப்ஸ்களைப் படித்தவுடன், கட்டாயம் பயன்படுத்திப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் தங்களுக்கு ஏற்படுவதாகப் பல வாசகர்கள் நமக்கு எழுதி உள்ளனர். அப்படிப்பட்ட சில எக்ஸெல் ஒர்க்ஷீட் டிப்ஸ்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இங்கு தரப்படுகின்றன.

1. டேப்பின் பரிமாணத்தை மாற்ற
: எக்ஸெல் ஒர்க் ஷீட்டின் டேப்கள் அனைத்தும் சிறியதாகவே தரப்பட்டுள்ளன. மாறா நிலை யில் தரப்படும் இவற்றின் பரிமாணத்தை நாம் மாற்றலாம். நீங்கள் பயன்படுத்துவது விண்டோஸ் எக்ஸ்பி எனில், கீழ்க்கண்டவாறு செயல்படவும்.
1. Start மெனுவில் இருந்து Control Panel திறக்கவும். 2. இதில் Display என்பதில் டபுள் கிளிக் செய்திடவும். 3. இங்கு Appearance என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். 4. பின்னர், கீழாக வலது புறம் உள்ள Advanced என்பதில் கிளிக் செய்திடவும். 5. அடுத்து Item என்ற ட்ராப் டவுண் பாக்ஸில், Scrollbar என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து, நீங்கள் விரும்பும் அளவில் டேப் அமைய, அதற்கான அளவுகளைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். பெரிய அளவில் என்றால், டேப்களும் பெரியதாக அமையும். பின்னர் Apply மற்றும் OK கிளிக் செய்து வெளியேறவும்.

நீங்கள் பயன்படுத்துவது விண்டோஸ் 7 எனில், கீழ்க்கண்டபடி செயல்படவும்.

1. Start மெனுவில் இருந்து Control Panel திறக்கவும். 2.அடுத்து Appearance - Personalization என்பதில் கிளிக் செய்திடவும். 3. Personalization பிரிவில் Change Window Glass Color என்பதில் கிளிக் செய்திடவும். 4. அடுத்து Advanced Appearance Settings என்பதில் கிளிக் செய்திடவும். 5. அடுத்து Item என்ற ட்ராப் டவுண் பாக்ஸில், Scrollbar என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து, நீங்கள் விரும்பும் அளவில் டேப் அமைய, அதற்கான அளவுகளைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். பெரிய அளவில் என்றால், டேப்களும் பெரியதாக அமையும். பின்னர் Apply மற்றும் OK கிளிக் செய்து வெளியேறவும்.
இப்போது எக்ஸெல் ஒர்க்ஷீட் டேப்களின் அளவு நீங்கள் செட் செய்தபடி அமையும். இதில் என்ன பிரச்னை என்றால், உங்கள் ஆபீஸ் தொகுப்பில் உள்ள புரோகிராம் களில் தரப்பட்டுள்ள ஸ்குரோல் பார்களின் அளவும் மாற்றப்பட்டிருக்கும். சற்று பெரியதாக உள்ள ஸ்குரோல்பாரினை நீங்கள் பயன்படுத்தப் பழக வேண்டிய திருக்கும்.

2. ஒர்க்ஷீட் எண்ணிக்கைய அதிகரிக்க: எக்ஸெல் தொகுப்பில் ஒரு புதிய ஒர்க்ஷீட்டினைத் திறக்கும் போது, மாறா நிலையில் அதில் மூன்று ஒர்க்ஷீட்கள் இருக்கும். இந்த மாறா நிலை எண்ணிக்கை யை, உங்கள் விருப்பப்படி அமைக்கலாம்.
1. எக்ஸெல் தொகுப்பினைத் திறந்து Tools மற்றும் Options தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் Options விண்டோவில், General டேப்பினைக் கிளிக் செய்திடவும். இதில் இரண்டாவது பகுதியில் Sheets in a Worksheet என்று இருக்கும் இடத்தில், நீங்கள் விரும்பும் எண்ணிக்கையை செட் செய்திடவும்.

3. டேப்பின் வண்ணம் மாற்ற: எக்ஸெல் ஒர்க் புக்கில், அதன் ஷீட்களைக் காட்டும் டேப்களின் கட்டங்களின் வண்ணத் தினை மாற்றலாம். இதன் மூலம் ஒத்த இயல்புடைய ஷீட்களுக்கு ஒரே வண்ணத்தினை அமைக்கலாம். அல்லது நம் திட்டப்படி, ஒர்க் ஷீட்டின் தன்மைக் கேற்ப வண்ணங்களை அமைக்கலாம். இதற்கு அந்த ஷீட் டேப் மீது ரைட் கிளிக் செய்திட வேண்டும். எழுந்து வரும் மெனுவில், டேப் கலர் என்று இருப்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இனி, வண்ணங்கள் அடங்கிய கட்டம் காட்டப்படும். விருப்பப்படும் வண்ணத்தினைத் தேர்ந்தெடுத்து, கிளிக் செய்து வெளியேறினால், ஒர்க்ஷீட் டேப்கள், தேர்ந்தெடுத்த வண்ணத்தில் அமைந்திருக்கும். ஒரே நேரத்தில், பல டேப்களைத் தேர்ந்தெடுத்து, இதே வழியில் அனைத்திற்கும் ஒரே வண்ணத்தினைத் தரலாம். worksheets in excel.jpg /excel tab color.jpg/excel tab color/ display excel tabs 2

4. ஒர்க் ஏரியா வரையறை செய்திட: பல ஒர்க்ஷீட்களில், அனைத்து நெட்டு வரிசை மற்றும் படுக்கை வரிசைகளை நாம் பயன்படுத்துவது இல்லை. எனவே நாம் பயன்படுத்தும் வரிசைகளுக்கும் மட்டும் நாம் செல்லும்படி அமைத்தால், நமக்கு ஒர்க்ஷீட்டில் பணி புரிவது எளிதாக இருக்கும். இதற்கு எளிய வழி, பயன் படுத்தாத வரிசைகளை மறைத்து விடுவதுதான். இதனைக் கீழ்க்குறிப்பிட்ட வழிகளில் செயல்படுத்தலாம்.

நெட்டுவரிசை (Columns): மறைக்கப்பட வேண்டிய நெட்டு வரிசைகளில் முதல் நெட்டு வரிசையினை முதலில் தேர்ந்தெடுக்கவும். அதன் பின்னர் [Ctrl]+[Shift]+[Right Arrow] ஆகிய கீகளை அழுத்தவும். அடுத்து தேர்ந்தெடுத்த வரிசைகளின் மீது ரைட் கிளிக் செய்து, அந்த மெனுவில் Hide என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raghu - Salem,இந்தியா
28-செப்-201121:29:25 IST Report Abuse
Raghu கம்ப்யூட்டர் மலரை எனது மொபைல்- க்கு வாரம் வாரம் அனுப்ப முடியுமா ? த. ரகு
Rate this:
Share this comment
Cancel
Raghu - SalemAmmapet,இந்தியா
28-செப்-201121:22:46 IST Report Abuse
Raghu enakku Computer malarai vaaram vaaram enthu mobile-ikku anuppa mudiuma. It is very useful me and my child. Thankuuuuuuuuuuuuuuuuuuuuuu raghu.manithan
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X