கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

26 செப்
2011
00:00

கேள்வி: என் கம்ப்யூட்டரில் நான் அதிகம் பயன்படுத்துவது தமிழ்தான். பேஜ்மேக்கரில் என் பணி அதிகம் இருந்தாலும், வேர்ட் டாகுமெண்ட்களையும் தமிழில் அதிகம் தயாரிக்க வேண்டியுள்ளது. இதில் பல வேளைகளில் வாக்கியங்கள் தொடங்கும் போது, முதல் எழுத்து டைப் அடிக்கும் போது கிடைக்கும் எழுத்து உடனே மாறி விடுகிறது. அதற்குப் பின் அதனை மீண்டும் டைப் செய்து முதலில் மாறியதை அழிக்கிறேன். இது எதனால் ஏற்படுகிறது? பேஜ் மேக்கரில் ஒழுங்காக கிடைக்கிறது. தமிழுக்கு குறள் தமிழ்ச் செயலி, சக்தி ஆபீஸ் பயன்படுத்துகிறேன்.
-கே. பாஸ்கரன், சிவகாசி.
பதில்: கேள்விக்கு நன்றி. வேர்டில் தமிழ் பயன்படுத்தும் அனைவருக்கும் ஏற்படும் பிரச்னை இது. இதற்குக் காரணம் வேர்டில் மாறா நிலையில் உள்ள ஆங்கில மொழிக்கான செட்டிங்ஸ் தான். ஆங்கில மொழியில், வாக்கியம் ஒன்றினைத் தொடங் குகையில், முதல் எழுத்து கேபிடல் எழுத்தாக, பெரிய எழுத்தாக அமைக்க வேண்டும். எனவே ஒரு வாக்கியத்திற்கான முற்றுப் புள்ளி அமைத்து, அடுத்த வாக்கியம் தொடங்குகையில், ஆங்கிலத்தில் சிறிய எழுத்து அமைத்தால், வேர்ட் புரோகிராம் தானாகவே பெரிய எழுத்தாக அமைத்துவிடும். இதனை Capitalize First Letter of Sentences என்று வேர்ட் ஒரு கட்டளையாக அமைத்துக் கொண்டுள்ளது. நீங்கள் தமிழில் டைப் செய்கையில், முற்றுப் புள்ளியினை அடுத்து வாக்கியம் தொடங்குகையில், உங்கள் தமிழ் எழுத்தின் மதிப்புக்கேற்ற ஆங்கில பெரிய எழுத்தை வேர்ட் அமைக்கிறது. அது உங்கள் தமிழ்ச் செயலியில் அந்த பெரிய எழுத்திற்கான தமிழ் எழுத்தாக அமைகிறது. குழப்பத்திற்கான காரணம் இதுதான். இந்த பிரச்னைக்குத் தீர்வு, இந்த வசதியினை நிறுத்திவிடுவதுதான். வேர்டில் டூல்ஸ் மெனு சென்று, Auto Correct Options என்ற பிரிவைத் தேர்ந்தெடுங்கள். இங்கு Capitalize First letter of sentences என்று ஒரு வரி இருக்கும், இதன் எதிரே உள்ள செக் பாக்ஸில் உள்ள டிக் அடையாளத்தின் மீது மவுஸ் கிளிக் செய்து, அடையாளத் தினை நீக்குங்கள். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி வாக்கியத்தின் முதல் தமிழ் எழுத்து மாறாது. பேஜ் மேக்கரில் இந்த வசதி தரப்படவில்லை என்பதால், இந்த பிரச்னை உங்களுக்கு இல்லை.

கேள்வி: வேர்டில் சின்ன, சின்ன டாகுமெண்ட் பைல்களை உருவாக்கிப் பின்னர், மொத்தமாக குறிப்பிட்ட இடங்களில், அவற்றை இணைக்க வேண்டியுள்ளது. காப்பி செய்து பேஸ்ட் செய்கையில் பிரச்னை ஏற்படுகிறது. இதற்கு வேறு வழி உண்டா? நான் வேர்ட் 2007 பயன்படுத்துகிறேன்.
-ஆ. லஷ்மி சுந்தரேசன், திருப்பூர்.
பதில்: மிக எளிதாக ஒரு வழி உள்ளது. வேர்டில் பைல் இணைப்புச் செருகல் (Inserting a File) என்று ஒரு வசதி உள்ளது. ஒரு பைலின் குறிப்பிட்ட இடத்தில் இன்னொரு டெக்ஸ்ட் பைலை இடைச் செருகலாக அமைப்பதற்கு இந்த வசதியினைப் பயன்படுத்தலாம். எந்த டாகுமெண்ட்டில், பைல்களை இணைக்க வேண்டுமோ அதனைத் திறந்து, இணைக்க வேண்டிய இடத்தில், கர்சரைக் கொண்டு சென்று நிறுத்தவும். ரிப்பனில் Insert டேப் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனை உறுதி செய்து கொள்ளவும். அடுத்து டெக்ஸ்ட் குரூப்பில், ஆப்ஜெக்ட் டூலுக்கு வலது பக்கமாக, உள்ள கீழ் நோக்கிய அம்புக் குறி அடையாளத்தில் கிளிக் செய்திடவும். பைல் என்னும் ஆப்ஷனில் Text என்பதைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் Insert File என்னும் டயலாக் பாக்ஸைக் காட்டும். இது ஏறத்தாழ பைல் திறக்கப் பயன்படுத்தும் Open File டயலாக் பாக்ஸ் போலவே இருக்கும். இதில் நீங்கள் இணைக்க வேண்டிய பைலைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் ஓகே கிளிக் செய்தால், அந்த பைல் முதல் பைலில் இணைக்கப்பட்டிருப்பதனைக் காணலாம்.

கேள்வி: பாதுகாப்பான இணைய உலா மேற்கொள்ள கடுமையான சில புத்திமதிகளைச் சொல்லுங்கள். பொட்டில் அடித்தால் போல ... என்று சொல்வார்களே, அது மாதிரி.
-என்.கார்த்திக், கோவை.
பதில்: உங்கள் கேள்வியின் தன்மை எனக்குப் பிடித்திருந்தது. சில வேளைகளில் இது போல கடுமையான பதில் தான் பயன்படும். சொல்லட்டுமா...
பாலியல் தளங்களுக்குச் செல்ல வேண்டாம். மலேரியா காய்ச்சல் தரும் கொசுக்கள் மொய்க்கும் சாக்கடை போல அவை இணையத்தில் உள்ளன. இவற்றை அணுகினால், நிச்சயம் உங்கள் கம்ப்யூட்டரில் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் ஒட்டிக் கொள்ளும். அடுத்து, உங்கள் பாதுகாப்பிற்கு வைத்துள்ள சாப்ட்வேர் புரோகிராம்களைத் தொடர்ந்து அப்டேட் செய்திடவும். பிரவுசரையும் அப்டேட் செய்திடவும். உங்கள் பிரவுசர், நீங்கள் செல்ல இருக்கும் இணைய தளம் பாதுகாப்பற்றது என்று சொன்னால், வீம்பாக அதனைத் திறக்க முயற்சிக்க வேண்டாம். விலகி ஓடவும். உங்கள் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் தயாரித்த நிறுவனம் இல்லாத, இன்னொரு நிறுவனம் தரும் பாதுகாப்பு புரோகிராம் கொண்டு, ஹார்ட் டிஸ்க்கினை அடிக்கடி ஸ்கேன் செய்திடவும். சந்தேகத்திற்கு இடமான ஓர் இணைய தளத்தினைக் கட்டாயம் காண வேண்டும் எனில், லினக்ஸ் சிடி கொண்டு கம்ப்யூட்டரை பூட் செய்து, தளத்தினைப் பார்க்கவும். விண்டோஸ் சிஸ்டத்தினைத் திறக்கவே வேண்டாம்.

கேள்வி: ஜிமெயில் பயன்படுத்துகிறேன். இதில் மெயிலில் உள்ள டெக்ஸ்ட்டை, இன் பாக்ஸ் விட்டு வெளியேறாமல், அதனைப் பார்க்க முடியுமா?
-கா. வினோத் குமார், காரைக்கால்.
பதில்: முடியும். இதனை ஜிமெயில் Message Sneak Peek என அழைக்கிறது. மெசேஜ் மீது ரைட் கிளிக் செய்திடலாம். அப்போது மெசேஜ் காட்டப்படும். அத்துடன் மெனு ஒன்று கிடைக்கும். இதன் மூலம், அந்த இமெயில் செய்தியை ஆர்க்கிவ் அனுப்பலாம்; அழிக்கலாம்; படித்துவிட்டதாக குறிக்கலாம். எவ்வளவு வசதி! சரி, இதனை எப்படி அமைப்பது? ஜிமெயில் தளத்தில், மேல் வலது பக்கத்தில் உள்ள கியர் ஐகானில் கிளிக் செய்திடவும். பின்னர், Mail settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் Labs என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு காட்டப்படும் கட்டங்களில், கீழாகச் செல்லவும். இதில் Message Sneak Peek என்று இருப்பதைக் கண்டறிந்து தேர்ந்தெடுக்கவும். இங்கு Enable என்ற கட்டத்தைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். பின்னர், இறுதி வரை சென்று Save Changes என்பதில் கிளிக் செய்திடவும். இனி, மீண்டும் இன்பாக்ஸ் சென்று, ஏதேனும் ஒரு மெசேஜ் மீது, ரைட் கிளிக் செய்து நீங்கள் விரும்பியபடி, செய்தியின் முன்னோட்டத்தினைக் காணவும்.

கேள்வி: வேர்ட் புரோகிராமில், பைண்ட் அண்ட் ரீபிளேஸ் கட்டத்தின் மூலம் சொற்களைத் தேடுகையில், அந்த கட்டத்தினை மினிமைஸ் செய்து வைக்க முடியாதா? அடுத்தடுத்த தேடுதல்களை இது மறைக்கிறது. இதனை எப்படி தற்காலிகமாய் மறைத்து வைப்பது?
-என். ஸ்ரீனிவாசன், காரியாபட்டி
பதில்: நீங்கள் கண்ட்ரோல் + எப் கீ அழுத்தி, பைண்ட் அண்ட் ரீபிளேஸ் கட்டத்தைப் பெற்றிருப்பீர்கள், இல்லையா!
நீங்கள் கூறியிருப்பது போல, முதல் விடையைக் கண்டவுடன், எஸ்கேப் கீயைத் தட்டுங்கள். பைண்ட் அண்ட் ரீபிளேஸ் உங்களிடமிருந்து விடை பெற்றுக் கொள்ளும். அடுத்த விடை தெரிய ஷிப்ட் + எப்4 அழுத்துங்கள். அடுத்த விடை எங்குள்ளதோ அந்த சொல் தேர்ந்தெடுக்கப் பட்டுக் காட்டப்படும். இப்படியே அடுத்தடுத்து செல்லலாம். இறுதியில் தேடும் சொல் இல்லை என்றால், இறுதி செய்தி கிடைக்கும்.

கேள்வி: டாகுமெண்ட் ஒன்றை உருவாக்கிய பின்னர், என்று அது உருவானது என்று அறிவது எப்படி? விண்டோஸ் எக்ஸ்புளோரரில் இந்த தேதி மாறிவிடுகிறது. இதனை எப்படி செட் செய்திடலாம்?
-சி.க. முத்துவேல், காரைக்குடி.
பதில்: இந்த தேவை பலருக்கு ஏற்படும். ஏனென்றால், எப்போது ஒரு டாகுமெண்ட் டைத் தயாரித்தோம் என்று அறிந்தால், அதற்கேற்ப பல மாற்றங்களை நாம் ஒரு டாகுமெண்ட்டில் மேற்கொள்ளலாம். இதனை எப்படி செட் செய்வது என்று பார்க்கலாம். குறிப்பிட்ட டாகுமெண்ட் டைத் திறந்து கொள்ளுங்கள். பின் Insert மெனு கிளிக் செய்து அதில் Field என்பதைத் தேர்ந்தெடுங்கள். இப்போது Field டயலாக் பாக்ஸ் காட்டப்படும். இதில் Field Names என்று ஒரு பெட்டி இருக்கும். இதில் ஸ்குரோல் செய்து கீழாகச் செல்லுங்கள். அங்கு Create a Date என்று ஒரு பீல்டு காட்டப்படும். இதனைத் தேர்வு செய்தால் உடன் எந்த பார்மட்டில் தேதி காட்டப்பட வேண்டும் என்பதனைத் தேர்வு செய்திட பல பார்மட்கள் வரிசை யாகக் காட்டப்படும். இதில் கிழமையுடன் கூடிய தேதி பார்மட்டும் இருக்கும். நீங்கள் விரும்பும் பார்மட்டினைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்தால், அந்த டாகுமெண்ட் உருவாக்கபப்ட்ட முதல் நாள், டாகுமெண்ட்டில் கர்சர் உள்ள இடத்தில் சேர்க்கப்படும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
க.naarayanan - Chennai,இந்தியா
03-அக்-201116:57:14 IST Report Abuse
க.naarayanan வோர்ட் ஆப்ஷன்ஸ் என்பது எங்கே இருக்கிறது என்பதை தெளிவாக சொல்வது நல்லது பலரால் அதை கண்டுபிடிப்பதே கடினம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X