கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

03 அக்
2011
00:00

கேள்வி: விண்டோஸ் தரும் கால்குலேட்டரில் எண்களுக்கு ரோமன் எழுத்து இணைகளை எப்படிப் பெறலாம்? அல்லது வேறு எங்கு இதனைப் பெறலாம்? விளக்கமாகப் பெறுவதற்கு இணைய தளம் உள்ளதா?
-சா. கணேச மூர்த்தி, மேலூர்.
பதில்: கால்குலேட்டரில் பெறக் கூடிய விஷயமா இது? உங்களின் அடுத்த கேள்விகளுக்குப் பதில் தருகிறேன். எண்களுக்கான ரோமன் இணைகள் பின்வருமாறு: M=1000 | D=500 | C=100 | L=50 | X=10 | IX=9| V=5| I=1. இவை இடது பக்கத்திலிருந்து மதிப்பு படிப்படியாக வலது பக்கம் குறையும்படி அமைந்திருக்கும். எண்ணின் மதிப்பினை இந்த எழுத்துக்களுக்கான மதிப்பினைக் கூட்டிப் பெற வேண்டும். எடுத்துக்காட்டாக, 1666 என்ற எண்ணை MDCLXVI என எழுத வேண்டும். இதனை விரித்து பார்த்தால் உங்களுக்குப் புரியும். இதனை அதன் மதிப்பில் எழுதினால் = 1000 + 500 + 100 + 50 + 10 + 5 + 1 எனக் கிடைக்கிறதா? இப்போது இதனைக் கூட்டிப் பாருங்கள். 1666 கிடைக்கும். இதே போல நீங்கள் மற்ற எண்களுக்கும் அமைக்கலாம். இணைய தளம் என்று பார்த்தால், கூகுள் தேடுதளம் சென்று, Roman numeral for 1066 என்று அமைத்து என்டர் தட்டவும். விடை உடன் கிடைக்கும்.

கேள்வி: இணைய தளம் ஒன்றைப் பார்க்கையில், அதில் உள்ள சில விஷயங்களைக் காப்பி செய்து, பின் வேர்ட் ப்ராசசர் ஒன்றில் பேஸ்ட் செய்வது சுற்றி வளைத்துச் செய்திடும் வேலையாக உள்ளது. ஏதேனும் ஒரு வெப் பிரவுசரில், இதில் உள்ள டெக்ஸ்ட்டை அப்படியே காப்பி செய்திடும் வசதி உள்ளதா? அல்லது பி.டி.எப். பைலாக மாற்ற முடியுமா?
-தா. முருகராஜன், மதுரை.
பதில்: எந்த இணைய தளப் பக்கத்தையும் அப்படியே அதன் படங்கள் மற்றும் கிராபிக்ஸ் பைல்களுடன் எச்.டி.எம்.எல். பைலாகக் காப்பி செய்து, இன்டர்நெட் இணைப்பில் இல்லாத போது பார்க்கலாம். டெக்ஸ்ட் மட்டும் தேவை எனில், சில வெப் பிரவுசர்கள் படங்கள் எதுவுமின்றி, டெக்ஸ்ட் மட்டும் காப்பிச் செய்திட வசதி தருகின்றன. அல்லது ஆட் ஆன் தொகுப்புகள் உள்ளன. ஆனால் நீங்கள், காப்பி பேஸ்ட் வேலையே கூடாது என்கிறீர்கள். மேலும் உங்களின் பி.டி.எப். பைலாக மாற்ற முடியுமா என்ற கேள்விக்கான பதிலைத் தேடிய போது, இணையத்தில் ஒரு தளத்தினை இதற்குத் தீர்வாகக் காண முடிந்தது. தளத்தின் முகவரி http://pdfmyurl.com/. இந்த தளம் சென்று, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் அல்லது சேவ் செய்து பின்னர் பார்த்திட விரும்பும் தளத்தின் முகவரியைக் காப்பி செய்து இதன் நீண்ட கட்டத்தில் ஒட்டவும். இந்த தளம் நீங்கள் திரையில் பார்த்துக் கொண்டிருப்பதனை ஒரு பி.டி.எப். பைலாக மாற்றிக் கொடுக்கும். இதற்கான டவுண்லோட் விண்டோவில், உங்கள் கம்ப்யூட்டரில் எங்கு சேவ் செய்திட வேண்டும் எனக் கொடுத்து பைலைப் பெற்றிடலாம்.

கேள்வி: கம்ப்யூட்டரில் அவ்வப்போது கிடைக்கும் பிழைச் செய்திகளுக்கான தீர்வைத் தரும் இணையதளம் உள்ளதா? இபுக் உள்ளதா? இணையத்தில் கிடைக்கக் கூடிய தீர்வு தரவும்.
-டி. கோகிலா, சென்னை.
பதில்: கவலையே வேண்டாம். கிடைக்கும் எர்ரர் மெசேஜ் செய்தியை அப்படியே காப்பி செய்து ஏதேனும் ஒரு சர்ச் இஞ்சினில் பேஸ்ட் செய்து என்டர் தட்டுங்கள். நீங்கள் டைப் செய்த பிரச்சினை போல ஏற்கனவே சிலருக்கு ஏற்பட்டு அவர்கள் இணையம் மூலமாக தீர்வு பெற்றிருக்கலாம். அல்லது சம்பந்தப்பட்ட புரோகிராம் கொடுத்த நிறுவனம் (எ.கா. மைக்ரோசாப்ட், இடோரா, மொஸில்லா ) இது போன்ற எர்ரர் மெசேஜ் வந்தால் என்ன செய்வது என்று FAQ Frequently Asked Questions கொடுத்திருக்கலாம். சர்ச் இஞ்சினில் தேடுகையில் இந்த தளங்களெல்லாம் பட்டியலிடப்படும். அவற்றைக் கிளிக் செய்து தீர்வைப் பெறலாம்.

கேள்வி: போல்டர் ஒன்றை டாஸ்க் பாரில் மினிமைஸ் செய்த பின்னர், அதில் எப்படி பைல்களை காப்பி செய்திடலாம்? இது முடியுமா?
-பா.கௌதமன், திண்டுக்கல்.
பதில்: முடியும், கௌதமன். பைலை அப்படியே இழுத்து வந்து, போல்டரின் மேலாக மவுஸ் பட்டனை அழுத்தியபடி வைக்கவும். இப்போது போல்டர் திறக்கப் பட்டு, பைல் காப்பி செய்யப்படு வதனைப் பார்க்கலாம்.

கேள்வி: பிக்சர் ஹோல்டர் என்ற வசதியினை வேர்ட் எதற்காக அமைத் துள்ளது? இதன் பயன் என்ன? பயன்படுத்துவது எப்படி?
-சீ. ஹரிதாஸ் ராவ், சென்னை.
பதில்: அதன் முழுமையான பெயர் பிக்சர் பிளேஸ் ஹோல்டர் (Picture Place holder). வேர்ட் டாகுமெண்ட்டில் அதிக அளவில் படங்கள் இணைக்கப் பட்டிருந்தால், டெக்ஸ்ட் ஊடாகச் செல்ல, டாகுமெண்ட்டை ஸ்குரோல் செய்வது சற்று தாமதப்படுத்தப்படும். படங்களுக்கென மெமரியில் அதிக இடம் எடுத்துக் கொள்ளப்படுவதே இதற்குக் காரண மாகும். இதனால், நாம் டாகுமெண்ட்டை எடிட் செய்கையில் சற்று நேரம் கூடுதலாகத் தேவைப்படும். இந்த தாமதத்தினைப் போக்க இந்த பிக்சர் பிளேஸ் ஹோல்டர் பயன்படுகிறது. இந்த வசதியைப் பயன்படுத்து கையில், படங்கள் இருக்கும் இடத்தில் ஒரு சிறிய கட்டம் மட்டுமே காட்டப்படும். டாகுமெண்ட் பிரிவியூ செய்திடுகையிலும் அச்சிடுகையிலும் இந்த படங்கள் தெரியும். எடிட் செய்கையில் தெரியாது. இதனால் நாம் வேகமாக டெக்ஸ்ட்டை மட்டும் எடிட் செய்திட முடியும். சரி, இந்த வசதியை எப்படி இயக்குவது என்று பார்ப்போமா!
Tools மெனு சென்று அதில் Options தேர்ந்தெடுத்து கிடைக்கும் விண்டோவில் என்னும் View டேப்பினைத் தேர்ந் தெடுக்கவும். இதில் Picture Placeholders என்னும் இடத்தைக் கண்டுபிடித்து எதிரே உள்ள பாக்ஸில் டிக் அடையாளம் உருவாக்கவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி டாகுமெண்ட்களை எடிட் செய்கையில் படங்கள் கொண்டு வரப்படுவது இருக்காது; இதனால் நேரம் மிச்சமாகும்; வேகமாக ஸ்குரோல் செய்து எடிட் செய்திடலாம்.

கேள்வி: வேர்டில் சில வேளைகளில் எண்களுக்குப் பக்கத்தில் அமையும் எழுத்துக்கள் சூப்பர் ஸ்கிரிப்ட் எழுத்துக்களாக மாற்றப் படுகின்றன. எனக்கு இது தேவை இல்லை. ஒவ்வொரு முறையும் ஸ்பேஸ் விட்டு டைப் செய்து, மாற்றி அமைத்து எனப் பல வேலைகளை மேற்கொள்ள வேண்டியதுள்ளது. இதனை நிறுத்த முடியாதா?
-சி. உஷா கல்யாணி, தேவாரம்.
பதில்: வேர்ட் புரோகிராம் மாறா நிலையில் அமைத்துள்ள சில வசதிகளில் இதுவும் ஒன்று. இதனை நிறுத்தும்
சில நேரங்களில் சாதாரணமாக எண்களை டைப் செய்கையில் அவற்றை வேர்ட் சூப்பர் ஸ்கிரிப்ட் ஆக (சொற்கள் அல்லது எண்களுக்கு மேலாக சிறிய அளவில் எண்ணாக – 1st and 2nd போல) அமைக்கும். இதனை மாற்ற Tools | Auto Correct செல்லவும். பின் கிடைக்கும் பல டேப்கள் அடங்கிய விண்டோவில் Auto Format As You Type என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். இதில் Ordinals (1st) With Superscript என்ற பாக்ஸில் உள்ள டிக் அடையாளத்தினை எடுத்துவிடவும். இனி நீங்கள் விரும்பியபடி எந்த எண்ணும் சூப்பர் ஸ்கிரிப்டாக அமைக்கப்பட மாட்டாது.

கேள்வி: வேர்ட் டாகுமெண்டுக்கு உள்ளாக உள்ள ஸ்டேட்டஸ் பாரில் At மற்றும் Ln என்றுள்ளவை எதனைக் குறிக்கின்றன? கர்சர் நகரும்போது இவை தொடர்ந்து நகராமல், சில சமயங்களில் நகர்வதன் பொருள் என்ன?
-சி. கார்த்திக் ராஜா, திண்டிவனம்.
பதில்: நீங்கள் குறிப்பிடுபவற்றில், Ln என்பதை நீங்களே யோசித்து தெரிந்து கொள்ளலாம். இது Line என்பதன் சுருக்கம். அது கர்சர் இருக்கும் வரி எத்தனாவது வரி என்று காலியான வரிகளுடன் சேர்த்து எண்ணிக்கையைத் தருகிறது.
At குறியீடு சற்று வித்தியாசமானது. இதன் அருகில் ஓர் அளவு, பெரும்பாலும் அங்குலத்தில் தரப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக At 3.8” என இருக்கலாம். இதில் என்பது கர்சர் இருக்கும் வரி அந்த பக்கத்தின் மேல் புறத்திலிருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளது என்று காட்டுகிறது. இதனைப் பெரும்பாலும் நாம் நம் கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை. இந்த தூரத்தை அறிந்து கொள்வதன் மூலம் அந்த பக்கத்தின் இன்னும் எவ்வளவு இடம் கீழாக உள்ளது என அறிந்து கொள்ளலாம்.

கேள்வி: தானாக உள்ள ஆட்டோ டெக்ஸ்ட்டைப் போல நாமும் ஆட்டோ டெக்ஸ்ட் அமைக்க முடியுமா? என் நிறுவன முகவரி முழுவதும் அமைக்க முடியுமா?
-சி. கற்பகவேல், புதுச்சேரி.
பதில்: எளிதாக அமைக்கலாம். 1. Tools மெனுவில் இருந்து Auto Correct அல்லது Auto Correct Options என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் கிடைக்கும் விண்டோவில் Auto Text என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும்.
2. நீங்கள் விரும்பும் Auto Text என்ட்ரியை Auto Text entries here என்ற பாக்ஸில் டைப் செய்திடவும். பின் Add என்பதில் கிளிக் செய்திடவும்.
3. Show Auto Complete tip என்ற செக் பாக்ஸில் டிக் அடையாளம் இருப்பதனை உறுதி செய்திடவும்.
4. பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
gopal ak - Chennai,இந்தியா
05-அக்-201122:49:45 IST Report Abuse
gopal ak கேள்வி: ஒரு பாமரனின் சின்ன சந்தேகம் .. கணினி வரலாற்றில் எவ்வளவோ மாற்றங்களை பார்த்தாகி விட்டது , ஆனால் இன்றும் ஒவ்வொரு முறை கணினி செயல்பட தொடங்கும் போது OS மூலம் தான் பூட் ஆகி செயல் படுகிறது . இதற்காக கணினி கள் எடுத்து கொள்ளும் நேர விரயம் வேறு .. ஏன் இந்த OS ஐ எப்பொழுதும் தயார் நிலையில் non volotile மெமொரியில் இருக்குமாறு வைத்து கொண்டு மற்ற எலெக்ட்ரானிக் பொருள்களை போல கணினியையும் உடனடி செயல்பாட்டுக்கு வர வைக்க முடியாதா ? தயவு செய்து யாரவது பதில் உடனடியாக சொல்லுங்களேன் ..
Rate this:
Share this comment
Cancel
romesh - madurai,இந்தியா
05-அக்-201111:41:41 IST Report Abuse
romesh கேள்வி : கம்ப்யூட்டருக்கும் மொபைல் போனுக்கும் புளூடூத் இணைப்பு - புளுடூத் அடாப்டர் ஏதும் இல்லாமல் - கம்ப்யூட்டரில் RUNல் ஐந்து இலக்க எண்ணை டைப் செய்து browse கொடுத்தாலே புளுடூத் இணைப்பை பெற்று விட முடிகிற ஒரு டிப்ஸை - எங்கேயோ, எப்போதோ படித்தேன். இப்போது அந்த டிப்ஸை அறிந்து கொள்ள தேடினால் - அந்த தகவல் எங்கும் கிடைக்கவில்லை. தங்களுக்கு அது குறித்து தெரியுமா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X